Saturday, November 18, 2017

நாணய தரம்

18-Nov-2017
சர்வதேச ரேட்டிங் ஏஜென்சியான மூடிஸ்( moody's ) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணய தரத்தை Baa3யில் இருந்து Baa2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பொருள் சர்வதேச சந்தையில் இந்திய நாணயத்தின் ஏற்ற இறக்கம் தற்போது பாசிடிவ் நிலையில் இருந்து ஸ்டேபிள் என்ற நிலைக்குச் சென்றுள்ளது, அதாவது நிலையான அளவிற்குச் சென்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணய தரத்தை 14 வருடங்களுக்குப் பின் உயர்த்திச் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இந்திய சந்தையின் மீது புதிய நம்பிக்கையை வளர்த்துள்ளது.

Friday, November 17, 2017

பங்கு சந்தையை பாதிக்கும் காரணிகள்

17-Nov-2017
பங்கு சந்தை சரிய காரணமாக என்ன என்ன இருக்கலாம்? இதோ சில

  • புரளி செய்திகள்
  • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கை அதிக அளவில் விற்பது
  • நிறுவன அறிவிப்புகள், காலாண்டு,  வருவாய் முடிவுகள் எதிர்பார்ப்புக்கு கீழ் குறைந்தால்
  • உள்நாட்டு வெளிநாட்டு தொடர்பான போர், ஆக்கிரமிப்பு செய்திகள்.
  • தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்வு
  • மழை பொய்த்தல்
  • இயற்க்கை பேரிடர்
  • பண்ட் நிறுவனங்கள் பங்கை பெருமளவில் விற்றல்
  • ரிசர்வ் பேங்க் ரெப்போ சதவீத மாற்ற அறிவிப்பு
  • பங்கு சந்தை திருத்தம்( Market Correction )

Wednesday, October 18, 2017

தீபாவளி 2018 'கண்காணிக்கும்' பங்குகள்

தீபாவளி 2017
தீபாவளி 2018

Manappuram Finance Ltd. 103.70 ரூபாய்
(  Best at 90 Rs. to 95 Rs. )
காத்திருப்போம்
CG Power and Industrial Solutions Ltd 81.95 ரூபாய்
(  Best at 76 Rs. to 79 Rs. )
காத்திருப்போம்
Future Consumer Ltd  61.25 ரூபாய்.
( Best at 42 Rs. to 46 Rs. )
காத்திருப்போம்
Manali Petrochemicals Ltd 34.70 ரூபாய்.
( Best at 30 Rs. to 33 Rs. )
காத்திருப்போம்
Bharat Electronics Ltd 172.90 ரூபாய்.
( Best at < 165 Rs. )
காத்திருப்போம்
Future Enterprises Ltd 49.05 ரூபாய்.
( Best at < 45 Rs. )
காத்திருப்போம்
TIL Ltd 509 ரூபாய்.
காத்திருப்போம்.

இப்பங்குகள் அடுத்த தீபாவளியில் தித்திக்குமா?! பொருத்திருந்து பார்ப்போம்..

தித்திக்கும் தீபாவளி  2017 நல்வழ்த்துக்கள்!! :)








தீபாவளி 2016 அன்று கொடுக்கப்பட்ட பங்குகளின் தற்போதய நிலை


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


10/27/2016 முதல் இன்று வரை



தீபாவளி 2016
தீபாவளி 2017
Ashok Leyland ( OCT-27, 2016 ) – 84.90 ரூபாய்
130.40 ரூபாய்
Karur Vysya Bank Ltd( OCT-27, 2016 ) – 473.5 ரூபாய்
125 ரூபாய் + Bonus 2:5
Rights Issue of equity shares in the ratio of 1:6 of Rs. 2/- each at a premium of Rs. 74/- per Share.
City Union Bank ( OCT-27, 2016 )- 145.00 ரூபாய்
159.55 ரூபாய் +
Bonus 1:10 ( 12 jul,2017 )
KEC International( OCT-27, 2016 ) - 124.65 ரூபாய்
298.20 ரூபாய்
Wipro Ltd( OCT-27, 2016 ) – 462.65 ரூபாய்
294.65 ரூபாய் + Bonus 1:1
L&T Finance Holdings Ltd ( OCT-27,2016 ) – 105.90 ரூபாய்
207.9 ரூபாய்
State Bank of India( OCT-27, 2016 ) - 255.05 ரூபாய்
245 ரூபாய் + 26 May 2017, 260% Dividend
Infosys Ltd( OCT-27,2016 ) - 1003.50 ரூபாய்
926.95 ரூபாய் Buy back Rs 1,150 per share 

Monday, October 16, 2017

[ update Oct-17 ] பட்டியலிடப்பட்ட Godrej Agrovet Ltd முதல் நாள், 30% லாபம்



அதிக எதிர்பார்ப்புடன் பட்டியலிடப்பட்ட Godrej Agrovet Ltd முதல் நாள் விலை 595.55 ரூபாய்ல் முடிந்தது. ( 30% லாபம் முதல் நாளில்!! )

தீபாவளி முகூர்த் டிரேடிங் 6.30 pm முதல் 7.30 pm, 19 அக்டோபர்.

Sunday, October 8, 2017

[ Update Oct 9 ] மார்கெட் பிட்ஸ்

Godrej Agrovet IPO - 95 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு விரும்பப்படும் பங்காக உருவெடுத்துள்ளது.
இதன் மூலம் பட்டியலிடப்படும் அன்று சிறப்பான வரவேற்பு இருக்கும் என எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

160 கோடி ரூபாய்க்கு மொத்தமாக 9X மீடியா மற்றும் INX மியூசிக்ஸின் 100% கையகப்படுத்தலை ZEE Entertainment அறிவித்துள்ளது.

ஜீ மீடியா மற்றும் Diligent மீடியாவின் இயக்குநர்கள் குழு அதன் அச்சு ஊடக வர்த்தகத்தை பிரித்து பங்குச் சந்தையில் பட்டியலிட ஒரு முன்மொழிவை ஒப்புக் கொண்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி தலா 1 Diligent மீடியாவின் பங்கு 4 Zee Media பங்குகளுக்கு நிகராக வழங்கப்படும்.

ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு இல்லை.
தற்போது ஏர்செல் நிறுவனத்துடனான இணைப்பு ரத்தாகியுள்ளது. ஆர்.காம் நிறுவனத்தின் கடன் சீரமைப்புத் திட்டங்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அது தன்னுடைய டவர், ஃபைபர், அலைக்கற்றை மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்றுக் கடனை அடைக்கத் திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.44,345 கோடி கடன் நிலுவையில் உள்ளது. மொத்தத்தில் இந்த பங்கை தற்சமயம்  தவிர்ப்பது நல்லது.

இ.பி.எஸ், புக் வேல்யூ, புத்தக மதிப்பு

இ.பி.எஸ். (EPS - Earnings Per Share): இ.பி.எஸ் என்பது, நிறுவனத்தில் ஒரு பங்குக்காக உள்ள வருமானம். நிகர லாபத்தை மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதுதான் இ.பி.எஸ்.

இ.பி.எஸ் = நிகர லாபம் / பங்குகளின் எண்ணிக்கை.
  
புக் வேல்யூ (Book Value Per Share): புக் வேல்யூ என்பது நிறுவனத்தில் ஒரு பங்குக்கு உள்ள புத்தக மதிப்பு. இதில் நாம் கணக்கிடுவது புத்தக மதிப்பைத்தானே தவிர, நிறுவனச் சொத்துகளின் மார்க்கெட் மதிப்பை அல்ல. ஒரு நிறுவனத்தின் கடன்களை அதன் சொத்துகளில் இருந்து கழித்த பிறகு மிஞ்சுவதே புத்தக மதிப்பு.

புத்தக மதிப்பு = சொத்துகள் - கடன்கள் (Book Value = Assets - Liabilities)

ஒரு பங்கின் புத்தக மதிப்பு = புத்தக மதிப்பு / பங்குகளின் எண்ணிக்கை.

[ update oct 8 ] ஐபிஓ MAS Financial Services Ltd

வெளியீட்டுத் தேதி: வெள்ளி, அக்டோபர் 6, 2017
வெளியீட்டு நிறைவு தேதி: செவ்வாய், அக்டோபர் 10, 2017
விலை: Rs. 456 - 459
பங்குகளின் எண்ணிக்கை: 
32 பங்கு பங்குகள் மற்றும் அதற்கு பிறகு மடங்காக
வெளியீடு அளவு: ரூ. 460 கோடி

பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இல் பட்டியலிடப்படும்.

வெப்சைட்:
http://www.mas.co.in/

Tuesday, October 3, 2017

[ update oct 3 ]கோத்ரேஜ் அக்ரோவெட் ஐ.பி.ஓ

கோத்ரேஜ் அக்ரோவெட்( Godrej Agrovet ) ஐ.பி.ஓ வெளியிடத் தயாராகிவிட்டது. இந்த நிறுவனம், பல்வேறு விதமான தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் டைவர்சிஃபைடு நிறுவனமாக விளங்குகிறது. இந்த வெளியீட்டின் மூலம் ரூ.1,160 கோடி திரட்ட வுள்ளது. கோத்ரேஜ் இண்டஸ்ட்ரிஸ், தற்போது கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தில் 63.67 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளது.

இந்த விற்பனையில் பங்கு விலைப்பட்டை ரூ.450-460 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 4-ம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை விற்பனை நடக்கிறது.

Wednesday, September 27, 2017

[ update 28-Sep-2017 ] பங்கு பிரிப்பு SEP-OCT2017

TRIL பங்கு பிரிப்பு முக மதிப்பு 10 Rs. இருந்து 1 Rs.க்கு  Ex-Date: 28-SEP-2017 Rec-Date: 30-SEP-2017

Heritg Food Ltd பங்கு பிரிப்பு முக மதிப்பு 10 Rs. இருந்து 5 Rs.க்கு  Ex-Date: 10-OCT-2017 Rec-Date: 11-OCT-2017

Jamna Auto Inds. Ltd பங்கு பிரிப்பு முக மதிப்பு 5 Rs. இருந்து 1 Rs.க்கு  Ex-Date: 5-OCT-2017 Rec-Date: 6-OCT-2017

CANFINHOME பங்கு பிரிப்பு முக மதிப்பு 10 Rs. இருந்து 2 Rs.க்கு  Ex-Date: 12-
OCT-2017 Rec-Date: 13-OCT-2017

POKARA Ltd பங்கு பிரிப்பு முக மதிப்பு 10 Rs. இருந்து 2 Rs.க்கு  Ex-Date: 18-OCT-2017 Rec-Date: 23-OCT-2017

Thursday, September 21, 2017

செப்டம்பர் IPO வெளியீடு தேதிகள்

செப்டம்பர் IPO வெளியீடு தேதிகள்,

Dixon 18/9/17


Bharat road 18/9/17


Matrimony 21/9/17


Capacite  25/9/17


Icici lombard  27/9/17


SBI insurance 3/10/17

Thursday, September 14, 2017

[ 14-Sep-2017 ] போனஸ் பங்கு வழங்கும் கம்பெனிகள்

TATA ELXSI,  
MANPASAND, 
MOIL, 
BHARATFORG, 
BHEL, 
PANAMAPET


இன்சூரன்ஸ் நிறுவனம் ஐ .பி. ஓ ICICI Lombard General Insurance Company Ltd.


ஐ பி ஓ ICICI Lombard General Insurance Company Ltd

86,247,187 பங்குகளுக்கான IPO

பங்கு விலை 651 முதல் 661 வரை

விண்ணப்ப தேதி: Sep 15, 2017 முதல்  Sep 19, 2017 வரை

https://www.icicilombard.com/

Monday, September 4, 2017

செப்டம்பர் 11 Matrimony.com IPO

 பங்கு விலைக்கு ரூ. 983 முதல் 985

130 கோடி திரட்ட 37,67,254 ஈக்விட்டி பங்குகளுக்கான IPO வை வெளியிடுகின்றது Matrimony.com.

www.Matrimony.com

Thursday, August 31, 2017

Dixon ஐபிஓ

டிக்சியன் டெக்னாலஜிஸ் வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி பொதுப் பங்கு வெளியிட இருக்கிறது. இந்த வெளியீட்டில் இதன் பங்குகள் ரூ. 1760-1766 என்ற விலை வரம்பில் விற்பனை செய்யப்படும்.
இந்த வெளியீடு செப்டம்பர் 6 தொடங்கி 8ம் தேதி வரை நடக்க இருக்கிறது. 


Thursday, August 17, 2017

சேமிப்புக் கணக்குக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளது - ஹெச்டிஎஃப்சி

ஹெச்டிஎஃப்சி வங்கி, தனது சேமிப்புக் கணக்குக்கான வட்டியை 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. தனது வாடிக்கையாளர்களில், ரூ.50 லட்சம் மற்றும் அதற்கும் மேலாக சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 4 சதவிகிதம் என்கிற வட்டி தொடரும். அதற்குக் கீழ் உள்ள சேமிப்புக் கணக்குகளுக்கு 3.5 சதவிகித வட்டிதான் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

Saturday, July 22, 2017

உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை

மத்­திய அரசு, உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யில்( Food Processing Sector ), அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 1,000 கோடி டாலர் முத­லீட்டை ஈர்க்க திட்­ட­மிட்டு உள்­ளது.இதை, மும்­பை­யில் நடை­பெற்ற சர்­வ­தேச உணவு மாநாட்­டில், மத்­திய உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை அமைச்­சர் ஹர்­சிம்­ரத் கவுர் பாதல் தெரி­வித்­தார்.

ஆக உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை பங்குகள் உயரவாய்ப்புகள் உள்ளன.

இத்துறையில் சில குறிப்பிடும் படியான பங்குகள்( as on 21-July-2017 ),
Kwality 144.55 Rs.
LT Foods 69.15 Rs.
Britannia 3831.5 Rs.
Nestle 6815.55 Rs.
Flex Foods 115.4 Rs.
Prabhat Dairy 136 Rs.

Thursday, July 20, 2017

வரவிருக்கும் ஐபிஓ updated on 20-July-2017

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிட முடிவெடுத்திருக்கிறது.தனது நிதிநிலையைச் சீர்படுத்தும் நோக்கில் ஐபிஓ வெளியீடு மூலம் நிதித்திரட்ட முடிவுசெய்திருக்கிறது. இந்த நிதி ஆண்டுக்குள் நேஷனல் இன்ஷூரன்ஸ் ஐபிஓ வெளியிட வாய்ப்பிருக்கிறது.

Wednesday, June 14, 2017

JUNE 2017 ஐபிஓகள் ( Update:14-JUN-2017 )


Tejas Networks
விண்ணப்பிக்கும்நாள்கள்:
14 Jun 2017 to 16 Jun 2017

விலை மதிப்பீடு :
250Rs. to 257 Rs.

Eris LifeSciences

விண்ணப்பிக்கும் நாள்கள்:
16 Jun 2017 to 20 Jun 2017
விலை மதிப்பீடு :
600Rs. to 603Rs.

CSDL
விண்ணப்பிக்கும் நாள்கள்:
19 Jun 2017 to 21 Jun 2017

விலை மதிப்பீடு :
Rs.145 to Rs.149


GTPL Hathway Limited
விண்ணப்பிக்கும்  நாள்கள்:
21 Jun 2017 to 26 Jun 2017

விலை மதிப்பீடு :
Rs.167 to Rs.170

Saturday, May 27, 2017

ITC Limited விரைவு பார்வை


மார்கெட் கேப்பிடல் 374,928.98 கோடி
விலை 308.65 ரூபாய் ( 26-MAY-2017 )

Tuesday, May 23, 2017

ஜிஎஸ்டி( GST ) ஜூலை 1, 2017 முதல்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1, 2017 ஆம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட இருக்கிறது.

7 சதவிகிதப் பொருள்கள் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படவில்லை. அரிசி, கோதுமை, பால்,பழங்கள், காய்கறிகள் பருப்பு, தானியங்களுக்குபோன்றவை இதில் அடங்கும்.

சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு அளிக்கும் தொகையில் 1 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டி வருகையால் பயனடையும் துறைகள்,
லாஜிஸ்டிக்ஸ் துறை
FMCG துறை
டெக்ஸ்டைல்ஸ் துறை
பார்மா துறை
ரியல் எஸ்ட்டேட் துறை
Engineering துறை


ஷால்பி( Shalby ) ஹாஸ்பிடல்ஸ்

ஷால்பி( Shalby ) ஹாஸ்பிடல்ஸ், பங்கு வெளியீட்டுக்கு அனு­மதி கோரி, ‘செபி’யிடம் விண்ணப்பித்து உள்ளது.

www.shalby.org


Monday, May 22, 2017

பங்கு வெளியீட்டுக்கு வருகிறது டிக்சான்(Dixon) டெக்னாலஜிஸ்

டிக்சான் டெக்னாலஜிஸ் நிறு வனம், நுகர்வோர் பயன்படுத்தும் மின் சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ந்நிறுவனம், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. இதற்காக, பங்குச் சந்தைகளில் பங்குகளை வெளியிட்டு, 650 கோடி ரூபாய்க்கு நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது.

Thursday, May 11, 2017

ஆதாருடன் பான் கார்டை எளிதில் இணைக்க

தார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்காக, புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வருமானவரித்துறை. அதன்படி, இனி இணையதளத்தின் மூலமே எளிமையான முறையில் ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம்.  https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html  என்ற இணையதளத்தில், ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணைக் கொடுத்து. பின் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.



Sunday, April 30, 2017

ஹட்கோ ஐபிஓ ( மே 8 - மே 11 )

வீ ட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டுக் கழகம் (ஹட்கோ), பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் 1,200 கோடி ரூபாயைத் திரட்ட முடிவு செய்துள்ளது. கடந்த 46 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு, அரசு நிறுவனமான ஹட்கோ கடன் தந்துவருகிறது. இந்த ஐபிஓ மே 8-ம் தேதி தொடங்கி, 11-ம் தேதி நிறைவடைகிறது. ஒரு பங்கின் விலை ரூ.56 முதல் ரூ.60-ஆக நிர்ணயமாகி இருக்கிறது.

http://www.hudco.org/

Thursday, April 27, 2017

அட்சய திரிதியை சிறப்பு வர்த்தகம் April 28, 2017

அட்சய திரிதியை சிறப்பு வர்த்தகம்
நாள் April 28, 2017
16:30 hrs
19:00 hrs
GOLD ETF பங்குகள் இந்த நேரத்தில் வாங்கலாம்.


Sunday, April 23, 2017

ஐபிஓ - எஸ் சந்த் நிறுவனம்( S Chand and Company Ltd )

பிரபல புத்தகத் தயாரிப்பு நிறுவனமான எஸ் சந்த், வருகிற 26-ம் தேதி தனது பங்குகளை பொதுப் பங்கு விற்பனைக்கு வெளியிடுகிறது. 
இந்த ஐபிஓ மூலம் எஸ் சந்த் நிறுவனம், ரூ. 728  கோடி திரட்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த ஐபிஓ, ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி அன்று முடிவடைகிறது. ஒரு பங்கின் விலையை ரூ.660 - ரூ.670 வரை நிர்ணயம் செய்துள்ளது.

Sovereign Gold Bond scheme


Issue opens:
Monday, April 24, 2017
Issue closes:
Friday April 28, 2017
Price of gold:
Rs. 2901/Gram
(1 unit = 1 gram)
Issued by the Reserve Bank of India on behalf of the Government of India

Investors will earn returns linked to gold price

ஆண்டுக்கு 2.5% உறுதியான வருமானம் இதில் உள்ளது. இதுதவிர, தங்கம் விலை உயர்ந்தால் அது தனி லாபம். குறைந்தபட்சம் ஒரு கிராம்,  அதிகபட்சம் 500 கிராம் வரை முதலீடு செய்யலாம்.

காலம்: 8 வருடங்கள். 
5ம் வருடம் முதல் வெளியேறும் வசதி

Sunday, April 16, 2017

[16APR2017] ரிலை­யன்ஸ் பவர் நிகர லாபம் ரூ.215 கோடி

ரிலை­யன்ஸ் பவர், கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 215.90 கோடி ரூபாயை, ஒட்­டு­ மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 61.55 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், இந்­நி­று­வ­னத்­தின் மொத்த வரு­வாய், 2,548.94 கோடி ரூபா­யில் இருந்து, 2,696.50 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துஉள்­ளது. 

Thursday, April 6, 2017

மியூச்சுவல் ஃபண்ட் என்பது?

மியூச்சுவல் ஃபண்ட் என்பது தமிழில் பரஸ்பர நிதிகள் என்று அழைக்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டும் பங்குச்சந்தையை (Share market) போன்றதுதான். ஆனால், இதில் ஈடுபடுவதற்கு பங்குச்சந்தையைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. எனென்றால் நம் பணத்தை பங்கு சந்தையை பற்றி நன்கு அறிந்த கம்பெனிகளிடம் ஒப்படைக்கின்றோம்.இந்த கம்பெனிகளை தேர்ந்தெடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது. இந்த கம்பெனிகள் உங்கள் பணத்தை சேர் மார்கெட்டிலோ அல்லது அரசு துறை சார்ந்த சேமிப்பு முதலீட்டிலோ நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தை பொறுத்து முதலீடு செய்யும்.

நம்மை போல பல முதலீட்டாளர்களை ஒன்று சேர்த்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், அவரவர் கொடுத்த தொகைக் ஏற்ப யூனிட்டுகள் (Units) எனப்படும் அலகுகளை கொடுத்து விடுவார்கள்.
யூனிட் என்பது தமிழில் அலகு எனப்படும். யூனிட்கள் என்பது பங்குகளைப் (shares) போலதான். இந்த ஒவ்வொரு யுனிட்டுக்கும் மதிப்பு உண்டு அதைத்தான் NAV(Net Asset Value) என்பார்கள்.

உதாரணமாக,
1000 ரூபாய் முதலீடு செய்து  ஒரு நிறுவனத்திடம் இருந்து பங்கு சந்தை சார்ந்த( equity )  மீயுட்சுவல் பண்ட் 100 யுனிட்டுகளை நான் பெறுகின்றேன். 
அப்போதய ஒரு யுனிட் மதிப்பு ரூ10. ஆக என்னிடம் தரப்பட்ட மொத்த யுனிட்கள் 100. இன்றைய விலை 100யுனிட் x10ரூ = 1000ரூபாய்.

ஒரு வருடம் கழித்து, 
பங்கு சந்தை  நன்றாக இருந்து, பண்ட் நிறுவனமும் நல்லபடியாக முதலீடு செய்திருந்தால் ஒரு யுனிட் மதிப்பு 15 ரூஆக இருப்பதாக கொண்டால்
என்னிடம் இருக்கும் தொகை 100x15=1500ரூபாய்.

பங்கு சந்தை  சரியாக இல்லாமல் இருந்து  ஒரு யுனிட் மதிப்பு 9 ரூஆக இருப்பதாக கொண்டால்,
என்னிடம் இருக்கும் தொகை 100x9=900ரூபாய்.

Monday, April 3, 2017

2017-2018 வரவிருக்கும் ஐபிஓகள்

என்எஸ்இ( NSE ), சிடிஎஸ்எல்(CDSL), எஸ்பிஐ லைஃப்( SBI LIFE ), ஹட்கோ(HUDCO) போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஐபிஓ மூலம் கணிசமான தொகையைத் திரட்டவுள்ளன.

Sunday, March 26, 2017

மார்கெட் பிட்ஸ்

பேலன்ஸ்டு ஃபண்டுகளில் டாப் 10 ஃபண்டுகள், கடந்த ஓராண்டு காலத்தில்(20016) 22 முதல் 27% வரை வருமானம் அளித்திருக்கின்றன.

இந்தியா சிமென்ட்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், அமரராஜா பேட்டரீஸ்,  செஞ்சுரி ப்ளைபோர்ட்ஸ் போன்ற நிறுவனங்களில், நிறுவனர்களின் பங்கு அடமானம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான டிவிஸ் லேப்ஸ்( Divi's Lab ) நிறுவனத்தின் விசாகபட்டினம் ஆலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்டிஏ) நடத்திய சோதனைக்குப் பின்னர், அதன் தரக் கட்டுப்பாடு குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளது. தரமான உற்பத்திக்கான செயல்முறைகளை மீறியுள்ளதாகவும் அது கூறியுள்ளது. மேலும், அமெரிக்காவில் அதன் மருந்துகளை விற்கத் தடை விதித்துள்ளது. இந்த விசாகபட்டினம் ஆலை மூலம்தான் இந்த நிறுவனத்தின் 70 சதவிகித வருமானம் வருகிறது. இந்த நிலையில், எஃப்டிஏ விதித்துள்ள தடையால் டிவிஸ் லேப்ஸ்( Divi's Lab ) பங்கு விலை, கடந்த செவ்வாய் அன்று ஒரே நாளில் 20% குறைந்ததுடன், 52 வார குறைந்தபட்ச விலையையும் தொட்டது. இந்தத் தடை நடவடிக்கை, இந்த நிறுவனத்தின் 25 சதவிகித வருவாயைப் பாதிக்கும் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.1,100 கோடி நிதி

பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 2015-16-ம் நிதியாண்டில் ரூ.2,897 கோடி நிகர நஷ்டம் அடைந்துள்ளது. இந்த நிலையில், தனது செயல்பாடுகளைத் தொடர்வதற்கு போதுமான நிதி இந்த வங்கியிடம் இல்லாத காரணத்தால், தற்போது அதன் நிதி நிலைமையைச் சீரமைக்க, நிதி அமைச்சகம் ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்துள்ளது.

வங்கியின் செயல்பாடு சரியாக இல்லை என்பதே தற்போதய செய்தி

Monday, March 20, 2017

ஐபிஓ - சங்கரா பில்டிங் புராடக்ட்ஸ்

கர்­நா­டக மாநி­லம், பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த, சங்­கரா பில்­டிங் புரா­டக்ட்ஸ், பங்­கு­களை வெளி­யிட்டு, 345 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது.

தொழில்: கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுப் பொருள்கள் விற்பனை
விலை: ரூ.440 முதல் 460
விற்பனை நாள்கள்: மார்ச் 22 - 24
பங்குகள் எண்ணிக்கை: 32 மற்றும் அதன் மடங்குகளாக.

வெப்சைட்,
http://www.shankarabuildpro.com/



( விரைவில் ஐஆர்சிடிசி ( இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் ) ஐபிஓ )



Sunday, March 19, 2017

ஐபிஓ CL Educate Ltd

CL Educate Ltd கல்வி சார்ந்த தயாரிப்புகள் மற்றும் கல்வி துறையில் ஈடுபட்டுள்ளது.

விலை மதிப்பீடு :
Rs. 500
to Rs.502


தேதி
March 20, 2017 
முதல் 

March 22, 2017

பங்குகள்:
29 மற்றும் அதன் மடங்குகளாக

வெப்சைட்:
http://www.cleducate.com/


Monday, March 6, 2017

போனஸ் வழங்கும் கம்பெனிகள்

V-Guard Industries 
போனஸ் 2:5
Ex-Date: 15-Mar-2017( இந்த தேதி, இந்த தேதிக்கு முன் பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு போனஸ் பங்குகள் வழங்கப்படும் )
Record Date: 16-Mar-2017( யாருக்கெல்லாம் போனஸ் வழங்கலாம் என்பதை உறுதி செய்யும் தேதி )

GAIL(I) Limited 
போனஸ் 1:3
Ex-Date: 09-Mar-2017( இந்த தேதி, இந்த தேதிக்கு முன் பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு போனஸ் பங்குகள் வழங்கப்படும் )
Record Date: 11-Mar-2017( யாருக்கெல்லாம் போனஸ் வழங்கலாம் என்பதை உறுதி செய்யும் தேதி )


Thursday, March 2, 2017

ஐபிஓ Avenue Supermarts Ltd (D Mart)

Avenue Supermarts Ltd (D Mart) மும்பையை சேர்ந்த சில்லறை வணிக சூப்பர்மார்க்கெட்  IPO மூலம் 1800 கோடி திரட்ட முடிவுசெய்துள்ளது.

கம்பெனி பற்றி
DMart மும்பையை சேர்ந்த சில்லறை வணிக சூப்பர்மார்க்கெட் (FMCG)சில்லறை வணிகத் துறையில் மூன்றாவது பெரிய மற்றும் மிகவும் இலாபகரமானதாகவும் Reliance retail மற்றும் Future groupக்கு அடுத்தபடியாக உள்ளது.




Avenue Supermarts Ltd (D Mart)
பரிந்துரை
விலை மதிப்பீடு :
Rs. 295
to Rs.299
-

தேதி
பங்குகள்
March 8, 2017
முதல்
March 10, 2017
50 மற்றும் அதன் மடங்குகளாக


நஷ்டம் தவிர்க்க டிப்ஸ்

எப்பொழுதும் ஓரே பங்கில் அனைத்து முதலீட்டையும் செய்ய வேண்டாம். பங்கு சரியாக போக வில்லையெனில் அதிக நஷ்டம் எற்படும். அதையே தனி தனியாக பிரித்து பல கம்பெனி பங்குகளில்  முதலீடு செய்ய லாப, நட்டம் இணைந்து மிக அதிக நஷ்டம் தவிர்க்கப்படும்.

Wednesday, March 1, 2017

Music Broadcast Ltd ஐபிஓ

ரேடியோ சிட்டியை இயக்கும் Music Broadcast Ltd தன்னுடைய வியாபார விரிவாக்கத்திற்கு IPO மூலம் 400 கோடி திரட்ட முடிவுசெய்துள்ளது.

கம்பெனி பற்றி
20 நகரங்களுக்கு மேலாக FM வசதியை தருகின்றது. மேலும் துணை நிறுவனமான Jagran Prakashan Limited  நிர்கிவகிக்கின்றது. எட்டு மொழிகளில் planetradiocity.com மூலம் 40 இணைய வானொலி நிலையங்கள் ஐ  நிர்கிவகிக்கின்றது.


Music Broadcast Ltd
பரிந்துரை
விலை மதிப்பீடு :
Rs.324 to Rs.333
-

தேதி
பங்குகள்
March 6, 2017
முதல்
March 8, 2017
45 மற்றும் அதன் மடங்குகளாக

Monday, February 27, 2017

மார்கெட் முதலீடு கைடு


Sovereign Gold Bonds கோல்டு பாண்ட்ஸ்( BONDS )

Sovereign Gold Bonds
Issue opens:
Monday, February 27, 2017
Issue closes:
Friday March 3, 2017
Price of gold:
Rs.2893 / Gram


 முக்கிய அம்சங்கள்

  • அரசு பத்திரங்கள்
  • 1 unit = 1 gram
  • வழங்குவது - Reserve Bank of India.
  • குறைந்தபட்ச முதலீடு: 1 gram
  • அதிகபட்ச முதலீடு: 500 grams
  • நிலையான வட்டி( Fixed Interest ): ஆண்டுக்கு 2.5% ( மொத்த முதலீடு செய்யும் தொகைகையில் இருந்து. ( 6 மாதங்களுக்கு ஒரு முறை ) )
  • முதலீடு முதிர்வு காலம்: 8 ஆண்டுகள். 5ம் ஆண்டில் முதலீட்டில் இருந்து விலகிக்கொள்ளும் வசதி.


டிமேட் கணக்கில் இருந்து வாங்கலாம்.

Sunday, February 19, 2017

மார்கெட் பிட்ஸ்

ரூ.2 லட்சம் பணம் கொடுத்து நகை வாங்கினால், 1 சதவிகிதம் வரி!  ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பொதுத் துறையைச் சேர்ந்த பிஹெச்இஎல், முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லூலர் பங்குகள், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50 பட்டியலிருந்து நீக்கப்படு கின்றன. இது மார்ச் 31 முதல் அமலுக்கு வர இருக்கிறது.

டாடா மோட்டார்ஸின் நிகர லாப வளர்ச்சி, மூன்றாம் காலாண்டில் 96% குறைந்திருக்கிறது.

ஸ்பைஸ்ஜெட்டின் நிகர லாபம் 24%  குறைந்திருக்கிறது.

அலஹாபாத் பேங்க் டிசம்பர் காலாண்டில் ரூ.75 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருக்கிறது.

TCS நிறுவனம் 5.6 கோடி பங்குகளை திரும்ப பெற( buyback ) முடிவுசெய்துள்ளது. இதன் மதிப்பு 16,000 கோடி ஆகும். ஒரு பங்குக்கு 2850 ரூபாய் கொடுத்து திரும்ப பெற உள்ளது.

ஷேர் பைபேக்( Share Buyback ) என்றால் என்ன?

ஒரு நிறுவனம் அதனுடைய பங்குகளுக்கு தானே ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயித்து, அதனிடம் இருக்கும் தேவைக்கு அதிகமான பணத்தைக் கொண்டு முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கினால் அதற்கு பெயர் ஷேர் பைபேக் எனப்படும். இதற்கு முதலில் நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவின் ஒப்புதல் பெற்று, பின்னர் செபியிடமும், பங்குச் சந்தை களிடமும் அனுமதி வாங்க வேண்டும். 

பொதுவாக இரண்டு விதத்தில் பைபேக் செய்யப்படும். 1. முதலீட்டாளர்களிடம் நேரடியாக மின்னஞ்சல் மற்றும் கடிதம் மூலம் பைபேக் அறிவிப்பை தெரிவித்து பங்குகளை வாங்குவது. 2 . பங்குச் சந்தையில் நேரடியாக வாங்குவது.

Friday, February 3, 2017

NFO - புதிய ELSS வகை மிட்சுவல்பண்டு( வரி சலுகை )

மிட்சுவல்பண்டு பெயர்
வகை
விண்ணப்பிக்க
ஆரம்ப தேதி
விண்ணப்பிக்க
இறுதி தேதி
குறைந்த பட்ச முதலீடு( Rs )
Sundaram LT Micro Cap Tax Adv Fund-Sr IV-Reg(D)
ELSS
27-Sep-16
20-Mar-17
500
Sundaram LT Micro Cap Tax Adv Fund-Sr IV-Reg(G)
ELSS
27-Sep-16
20-Mar-17
500
UTI LT Adv Fund-V(D)
ELSS
22-Dec-16
22-Mar-17
500
SBI LT Advantage Fund-IV-Reg(D)
ELSS
30-Dec-16
29-Mar-17
500
SBI LT Advantage Fund-IV-Reg(G)
ELSS
30-Dec-16
29-Mar-17
500

இதன் முதலீட்டிற்கு 80C வரி சலுகை உண்டு.