Sunday, March 26, 2017

மார்கெட் பிட்ஸ்

பேலன்ஸ்டு ஃபண்டுகளில் டாப் 10 ஃபண்டுகள், கடந்த ஓராண்டு காலத்தில்(20016) 22 முதல் 27% வரை வருமானம் அளித்திருக்கின்றன.

இந்தியா சிமென்ட்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், அமரராஜா பேட்டரீஸ்,  செஞ்சுரி ப்ளைபோர்ட்ஸ் போன்ற நிறுவனங்களில், நிறுவனர்களின் பங்கு அடமானம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான டிவிஸ் லேப்ஸ்( Divi's Lab ) நிறுவனத்தின் விசாகபட்டினம் ஆலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்டிஏ) நடத்திய சோதனைக்குப் பின்னர், அதன் தரக் கட்டுப்பாடு குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளது. தரமான உற்பத்திக்கான செயல்முறைகளை மீறியுள்ளதாகவும் அது கூறியுள்ளது. மேலும், அமெரிக்காவில் அதன் மருந்துகளை விற்கத் தடை விதித்துள்ளது. இந்த விசாகபட்டினம் ஆலை மூலம்தான் இந்த நிறுவனத்தின் 70 சதவிகித வருமானம் வருகிறது. இந்த நிலையில், எஃப்டிஏ விதித்துள்ள தடையால் டிவிஸ் லேப்ஸ்( Divi's Lab ) பங்கு விலை, கடந்த செவ்வாய் அன்று ஒரே நாளில் 20% குறைந்ததுடன், 52 வார குறைந்தபட்ச விலையையும் தொட்டது. இந்தத் தடை நடவடிக்கை, இந்த நிறுவனத்தின் 25 சதவிகித வருவாயைப் பாதிக்கும் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment