Sunday, October 8, 2017

[ Update Oct 9 ] மார்கெட் பிட்ஸ்

Godrej Agrovet IPO - 95 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு விரும்பப்படும் பங்காக உருவெடுத்துள்ளது.
இதன் மூலம் பட்டியலிடப்படும் அன்று சிறப்பான வரவேற்பு இருக்கும் என எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

160 கோடி ரூபாய்க்கு மொத்தமாக 9X மீடியா மற்றும் INX மியூசிக்ஸின் 100% கையகப்படுத்தலை ZEE Entertainment அறிவித்துள்ளது.

ஜீ மீடியா மற்றும் Diligent மீடியாவின் இயக்குநர்கள் குழு அதன் அச்சு ஊடக வர்த்தகத்தை பிரித்து பங்குச் சந்தையில் பட்டியலிட ஒரு முன்மொழிவை ஒப்புக் கொண்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி தலா 1 Diligent மீடியாவின் பங்கு 4 Zee Media பங்குகளுக்கு நிகராக வழங்கப்படும்.

ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு இல்லை.
தற்போது ஏர்செல் நிறுவனத்துடனான இணைப்பு ரத்தாகியுள்ளது. ஆர்.காம் நிறுவனத்தின் கடன் சீரமைப்புத் திட்டங்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அது தன்னுடைய டவர், ஃபைபர், அலைக்கற்றை மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்றுக் கடனை அடைக்கத் திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.44,345 கோடி கடன் நிலுவையில் உள்ளது. மொத்தத்தில் இந்த பங்கை தற்சமயம்  தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment