Sunday, February 19, 2017

ஷேர் பைபேக்( Share Buyback ) என்றால் என்ன?

ஒரு நிறுவனம் அதனுடைய பங்குகளுக்கு தானே ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயித்து, அதனிடம் இருக்கும் தேவைக்கு அதிகமான பணத்தைக் கொண்டு முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கினால் அதற்கு பெயர் ஷேர் பைபேக் எனப்படும். இதற்கு முதலில் நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவின் ஒப்புதல் பெற்று, பின்னர் செபியிடமும், பங்குச் சந்தை களிடமும் அனுமதி வாங்க வேண்டும். 

பொதுவாக இரண்டு விதத்தில் பைபேக் செய்யப்படும். 1. முதலீட்டாளர்களிடம் நேரடியாக மின்னஞ்சல் மற்றும் கடிதம் மூலம் பைபேக் அறிவிப்பை தெரிவித்து பங்குகளை வாங்குவது. 2 . பங்குச் சந்தையில் நேரடியாக வாங்குவது.

No comments:

Post a Comment