Thursday, April 6, 2017

மியூச்சுவல் ஃபண்ட் என்பது?

மியூச்சுவல் ஃபண்ட் என்பது தமிழில் பரஸ்பர நிதிகள் என்று அழைக்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டும் பங்குச்சந்தையை (Share market) போன்றதுதான். ஆனால், இதில் ஈடுபடுவதற்கு பங்குச்சந்தையைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. எனென்றால் நம் பணத்தை பங்கு சந்தையை பற்றி நன்கு அறிந்த கம்பெனிகளிடம் ஒப்படைக்கின்றோம்.இந்த கம்பெனிகளை தேர்ந்தெடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது. இந்த கம்பெனிகள் உங்கள் பணத்தை சேர் மார்கெட்டிலோ அல்லது அரசு துறை சார்ந்த சேமிப்பு முதலீட்டிலோ நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தை பொறுத்து முதலீடு செய்யும்.

நம்மை போல பல முதலீட்டாளர்களை ஒன்று சேர்த்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், அவரவர் கொடுத்த தொகைக் ஏற்ப யூனிட்டுகள் (Units) எனப்படும் அலகுகளை கொடுத்து விடுவார்கள்.
யூனிட் என்பது தமிழில் அலகு எனப்படும். யூனிட்கள் என்பது பங்குகளைப் (shares) போலதான். இந்த ஒவ்வொரு யுனிட்டுக்கும் மதிப்பு உண்டு அதைத்தான் NAV(Net Asset Value) என்பார்கள்.

உதாரணமாக,
1000 ரூபாய் முதலீடு செய்து  ஒரு நிறுவனத்திடம் இருந்து பங்கு சந்தை சார்ந்த( equity )  மீயுட்சுவல் பண்ட் 100 யுனிட்டுகளை நான் பெறுகின்றேன். 
அப்போதய ஒரு யுனிட் மதிப்பு ரூ10. ஆக என்னிடம் தரப்பட்ட மொத்த யுனிட்கள் 100. இன்றைய விலை 100யுனிட் x10ரூ = 1000ரூபாய்.

ஒரு வருடம் கழித்து, 
பங்கு சந்தை  நன்றாக இருந்து, பண்ட் நிறுவனமும் நல்லபடியாக முதலீடு செய்திருந்தால் ஒரு யுனிட் மதிப்பு 15 ரூஆக இருப்பதாக கொண்டால்
என்னிடம் இருக்கும் தொகை 100x15=1500ரூபாய்.

பங்கு சந்தை  சரியாக இல்லாமல் இருந்து  ஒரு யுனிட் மதிப்பு 9 ரூஆக இருப்பதாக கொண்டால்,
என்னிடம் இருக்கும் தொகை 100x9=900ரூபாய்.

No comments:

Post a Comment