ரூ.2 லட்சம் பணம் கொடுத்து நகை வாங்கினால், 1 சதவிகிதம் வரி! ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பொதுத் துறையைச் சேர்ந்த பிஹெச்இஎல், முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லூலர் பங்குகள், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50 பட்டியலிருந்து நீக்கப்படு கின்றன. இது மார்ச் 31 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
டாடா மோட்டார்ஸின் நிகர லாப வளர்ச்சி, மூன்றாம் காலாண்டில் 96% குறைந்திருக்கிறது.
ஸ்பைஸ்ஜெட்டின் நிகர லாபம் 24% குறைந்திருக்கிறது.
அலஹாபாத் பேங்க் டிசம்பர் காலாண்டில் ரூ.75 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருக்கிறது.
TCS நிறுவனம் 5.6 கோடி பங்குகளை திரும்ப பெற( buyback ) முடிவுசெய்துள்ளது. இதன் மதிப்பு 16,000 கோடி ஆகும். ஒரு பங்குக்கு 2850 ரூபாய் கொடுத்து திரும்ப பெற உள்ளது.
No comments:
Post a Comment