இ.பி.எஸ். (EPS - Earnings Per Share): இ.பி.எஸ் என்பது, நிறுவனத்தில் ஒரு பங்குக்காக உள்ள வருமானம். நிகர லாபத்தை மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதுதான் இ.பி.எஸ்.
இ.பி.எஸ் = நிகர லாபம் / பங்குகளின் எண்ணிக்கை.
புக் வேல்யூ (Book Value Per Share): புக் வேல்யூ என்பது நிறுவனத்தில் ஒரு பங்குக்கு உள்ள புத்தக மதிப்பு. இதில் நாம் கணக்கிடுவது புத்தக மதிப்பைத்தானே தவிர, நிறுவனச் சொத்துகளின் மார்க்கெட் மதிப்பை அல்ல. ஒரு நிறுவனத்தின் கடன்களை அதன் சொத்துகளில் இருந்து கழித்த பிறகு மிஞ்சுவதே புத்தக மதிப்பு.
புத்தக மதிப்பு = சொத்துகள் - கடன்கள் (Book Value = Assets - Liabilities)
ஒரு பங்கின் புத்தக மதிப்பு = புத்தக மதிப்பு / பங்குகளின் எண்ணிக்கை.
No comments:
Post a Comment