Wednesday, December 21, 2016

நவம்பர் 8ம் பங்கு சந்தையும்

நவம்பர் 8-ம் தேதி இரவு நரேந்திர மோடி சொன்ன பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், இந்தியர்கள் அனைவரையும் ஏடிஎம் வாசல்களில் வரிசையில் நிறுத்தியது. இந்த நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் சில ஆண்டுகளுக்கு மோசமாகவே இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்திய ஜி.டி.பி இரண்டு சதவிகிதம் வரை குறையலாம். கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, நாளடைவில் 'கேஷ்லெஸ் எகானமி' என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. பண பரிவர்த்தனை தொடர்பாக தினமும் புது புது செய்திகள் வேறு. இதனால் பங்கு சந்தை சில மாதஙகளுக்கு பாதிப்பிற்குள்ளாகவே இருக்கும் என்பதுதான் உண்மை.

Thursday, December 15, 2016

பங்கு சந்தை முதலீடு - லாபத்துக்கு எவ்வளவு வரி?

12 மாதங்களுக்கு மேல் பட்டியலிடப்பட்ட பங்குகளை வைத்திருந்தால், லாபத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியதில்லை. (ஓராண்டுக்குள் விற்கும்பட்சத்தில் 15% வரி) 

ரூ. 10 லட்சம் வரையிலான டிவிடெண்ட் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லை.

Tuesday, December 6, 2016

ஐபிஓ - Laurus Labs Ltd

Laurus Labs Ltd
 ரூ.426 முதல் ரூ.428-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கம்பெனி பற்றி
Laurus Labs Ltd நிறுவனம் மருந்து ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

தேதி
பங்குகள்
டிசம்பர்  06-ம் தேதி முதல் டிசம்பர்  08-ஆம் தேதி
குறைந்தபட்சம் 35 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு 35-ன் மடங்குகளில் விண்ணப்பிக்க வேண்டும்.



Monday, November 14, 2016

விரைவில் மேட்ரிமோனி ஐபிஓ

ஆன்லைன் தளமான மேட்ரிமோனி.காம் கூடிய விரைவில் ஐபிஓ மூலம் தனது பங்குகளை சந்தையில் வெளியிட்டு நிதி திரட்டவிருக்கிறது. இந்த நிறுவனம் மொத்தம் 550 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டப் போகிறது.

Wednesday, November 9, 2016

ஐபிஓ - GreenSignal Bio Pharma Ltd



 ஐபிஓ நவம்பர் 17, 2016 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



GreenSignal Bio Pharma Ltd
 ரூ.76 முதல் ரூ.80-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



கம்பெனி பற்றி
இந்த மாதம் நவம்பர்  09-ம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரை GreenSignal Bio Pharma Ltd பங்குகள் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பார்மா துறையை சார்ந்த இந்த நிறுவனம் துடுப்பூசிகள் தயாரிப்பில் உள்ளது
தேதி
பங்குகள்
நவம்பர்  09-ம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி
குறைந்தபட்சம் 175 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு 175-ன் மடங்குகளில் விண்ணப்பிக்க வேண்டும்.

Wednesday, November 2, 2016

டாடா குருப் பங்குகள்

டாடா மோட்டார்ஸ்,
டிசிஎஸ்,
இந்தியன் ஹோட்டல்ஸ்,
டாடா ஸ்டீல்,
டாடா கம்யூனிகேஷன்ஸ்,
டாடா மெட்டாலிக்ஸ்,
டைட்டன்,
டாடா கெமிக்கல்ஸ்,
டாடா பவர்,
டாடா குளோபல்,
ராலிஸ் இந்தியா,
வோல்டாஸ்,
டாடா எலக்ஸி

Thursday, October 27, 2016

முகூர்த் டிரேடிங்

தீபாவளி - நம் அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கும் முக்கிய பண்டிகை. தொழிலுக்கும் முதலீட்டுக்கும் முக்கியமான நாள். அதனால்தான் அன்றைக்கு பலர்புதுக் கணக்கு தொடங்குவார்கள் . அன்றைக்கு பங்கு வாங்கினால் அதிர்ஷ்டம் தரும் என்பதால்தான் தீபாவளி அன்று முகூர்த் வர்த்தகம் (முகூர்த் டிரேடிங்) நடக்கிறது. 

அட்வான்ஸ் முகூர்த் டிரேடிங் வாழ்த்துகள்!

நேரம்: 6.30PM to 7.30PM
நாள்: அக்டோபர் 30

தீபாவளி பங்குகள் 2016

தீபாவளி 2016
தீபாவளி 2017
Ashok Leyland ( OCT-27, 2016 ) – 84.90 ரூபாய்
காத்திருப்போம்
Karur Vysya Bank Ltd( OCT-27, 2016 ) – 473.5 ரூபாய்
காத்திருப்போம்
City Union Bank ( OCT-27, 2016 )- 145.00 ரூபாய்
காத்திருப்போம்
KEC International( OCT-27, 2016 ) - 124.65 ரூபாய்
காத்திருப்போம்
Wipro Ltd( OCT-27, 2016 ) – 462.65 ரூபாய்
காத்திருப்போம்
L&T Finance Holdings Ltd ( OCT-27,2016 ) – 105.90 ரூபாய்
காத்திருப்போம்
State Bank of India( OCT-27, 2016 ) - 255.05 ரூபாய்
காத்திருப்போம்
Infosys Ltd( OCT-27,2016 ) - 1003.50 ரூபாய்
காத்திருப்போம்

இப்பங்குகள் அடுத்த தீபாவளியில் தித்திக்குமா?! பொருத்திருந்து பார்ப்போம்..

தித்திக்கும் தீபாவளி  2016 நல்வழ்த்துக்கள்!! :)



Varun Beverages Ltd ஐபிஓ நாளை முடிவடைகின்றது

Varun Beverages Ltd
 ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கின் விலைப் பட்டை ரூ.440 முதல் ரூ.445-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கம்பெனி பற்றி
தேதி
இந்த மாதம் அக்டோபர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரை Varun Beverages Ltd பங்குகள் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கார்பனேட் குளிர்பானங்கள் (CSDs) மற்றும் அல்லாத கார்பனேட் பானங்களை (NCBs) இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பெப்சிகோ என்ற முத்திரையின் கீழ் விற்பனை செய்கின்றது.
அக்டோபர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி
  


பங்குகள்
குறைந்தபட்சம் 33 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு 33-ன் மடங்குகளில் விண்ணப்பிக்க வேண்டும்.


Monday, October 24, 2016

ஐபிஓ - PNB Housing Finance Ltd


PNB Housing Finance Ltd 
ஐபிஓ
பங்கின் விலைப் பட்டை ரூ.750 முதல் ரூ.775-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கம்பெனி பற்றி
இந்த மாதம் அக்டோபர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 27-ஆம் தேதி வரை PNB Housing Finance Ltdபங்குகள் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 25 ஆண்டுகளாக இந்தியாவின் முன்னனி வீட்டு கடன் வழங்கும் நிறுவனம் இது.

தேதி
பங்குகள்
அக்டோபர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 27-ஆம் தேதி
குறைந்தபட்சம் 19 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு 19-ன் மடங்குகளில் விண்ணப்பிக்க வேண்டும்.


Thursday, October 6, 2016

ஐபிஓ - Endurance Technologies Ltd

Endurance Technologies Ltd

விலை மதிப்பீடு :
ரூ. 467 முதல் ரூ. 472 ஆக   நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கம்பெனி பற்றி,
வாகன உதிரி பாகங்கள், வாகன அலுமினிய அச்சு வார்ப்பு, வாகன சஸ்பென்ஷன், வாகன பிரேக் சிஸ்டம், வாகன உராய்வு தகடுகள் போன்றவை தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த கம்பெனி.

தேதி
Oct 05, 2016 - Oct  07, 2016

பங்குகள்
30 மற்றும் அதன் மடங்குகளாக

https://www.endurancegroup.com/

Friday, September 16, 2016

ஐபிஓ - எச்.பி.எல்., எலக்ட்ரிக்

எச்.பி.எல்., எலக்ட்ரிக் நிறு­வனம், பங்கு வெளி­யீட்டின் மூலம், 361 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது. எச்.பி.எல்., எலக்ட்ரிக், மீட்டர், சுவிட்ச்­கியர்ஸ் உள்­ளிட்ட மின் சாத­னங்கள் வணி­கத்தில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், பங்கு வெளி­யீட்டின் மூலம், 361 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது. இதன் பங்கு வெளி­யீடு, வரும், 22ம் தேதி துவங்கி, 26ல் முடி­வ­டை­கி­றது. ஒரு பங்கின் விலை, 175 ரூபாய் – 202 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. எஸ்.பி.ஐ., கேபிடல் மார்கெட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்டிஸ் ஆகி­யவை, எச்.பி.எல்., எலக்ட்ரிக் பங்கு வெளி­யீட்டு பணி­களை மேற்­கொள்ள உள்­ளன.

ஐபிஓ, - ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ்

இந்தியாவில் முதல்முறையாக பங்குச் சந்தையில் களமிறங்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் என்கிற பெருமையுடனும் பெரிய எதிர்பார்ப்புடனும் ஐபிஓ வந்திருக்கிறது ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி. கடந்த ஜூலை 18-ம் தேதி செபியிடம் புதிய பங்குகளை வெளியிட (ஐபிஓ) முறையில் விற்க அனுமதி கேட்டிருந்தது இந்த நிறுவனம். அதற்கு செபி இந்த மாதம் அனுமதி அளிக்க, சுறுசுறுப்பாகக் களமிறங்கி இருக்கிறது இந்த நிறுவனம். 
இந்த மாதம் செப்டம்பர் 19-ம் தேதி, திங்கள்கிழமை தொடங்கி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் பங்குகள் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கின் விலைப் பட்டை ரூ.300 முதல் ரூ.334-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் புதிய பங்கு வெளியீட்டில் 12.63 சதவிகித பங்குகள் (சுமார் 18.13 கோடி) விற்பனை செய்யப்படுகிறது. இதில் 19 சதவிகித பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் பொது மக்களுக்கு 25 சதவிகித பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

Saturday, September 10, 2016

ஐபிஓ - L&T Technology Services Ltd



L&T Technology Services Ltd
விலை மதிப்பீடு :
Rs.850 to Rs.860


தேதி
பங்குகள்
Sep 12, 2016 - Sep 15, 2016
16 மற்றும் அதன் மடங்குகளாக


Wednesday, August 31, 2016

மார்கெட் பிட்ஸ் 31-08-2016

Zee Entertainment தனது விளையாட்டு துறை தொடர்பான வணிகத்தை சோனி நிறுவனத்திற்கு சுமார் 385 மில்லியன் டாலருக்கு விற்க முடிவுசெய்துள்ளது. 

ஐபிஓ வெளியீடு RBL Bank Ltd. தற்போதய விலை 299.40ரூ.!! ஐபிஓ மதிப்பீடு: 225ரூ.


வரி வருவாய்களைப் பொறுத்தவரை நேர்முக வரி, மறைமுக வரி என இரண்டு வகைகள் உள்ளது. ஒரு பொருட்களை உற்பத்தி செய்து அதனைச் சந்தையில் விற்பனை செய்யும் வரை செலுத்துகின்ற கலால் வரி, வாட் வரி, சேவை வரி போன்றவை மறைமுக வரிகளாகும். ஆனால், ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது இப்போது புழக்கத்தில் இருக்கும் மறைமுக வரிகள் என்று சொல்லப்படும் எந்த ஒரு வரியும் இனி இருக்காது. 

Monday, August 29, 2016

பங்குச் சந்தை முதலீட்டில் 'வாரன் பஃபெட்' சொல்லும் வழிகள்

வாரன் பஃபெட் - உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.

1. உங்கள் முதலீட்டின் மதிப்பு ஐம்பது சதவீதத்திற்கும் கீழ் சரிகையில் கூட பீதியடையாமல் உங்களால் இருக்க முடியுமா? முடியாது என்றால் நீங்கள் பங்கு வர்த்தகத்தில் இறங்கவே லாயக்கில்லை.

2. எதிலும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை வாழ்க்கைக்கு நல்லது. ஆனால் பங்குவர்த்தகத்தில் அது உங்கள் எதிரி.

3. பங்கு வர்த்தகத்தில் சில கவர்ச்சிகரமான வாய்ப்புகள் வருகையில் அவற்றை ஒதுக்கும் மனவலிமையே ஒரு முதலீட்டாளருக்கு மிகுந்த நன்மையளிக்கக் கூடியது.

4. பெரும்பாலான முதலீட்டாளர்கள், தொடர்ச்சியாக வாங்கி, விற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாததாலேயே நட்டத்தை அடைகிறார்கள். பெரும்பான்மையான லாபம், பங்குச்சந்தையில் செயல்படாதபொழுதுதான் கிடைக்கிறது. (அதாவது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில், ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக, குறிப்பிட்ட காலம் வரை இருக்கட்டும் என்று முதலீடு செய்கிறீர்கள். நடுவில், சில காரணங்களுக்காக அவற்றை விற்பது, அதன் விலை மாறுபாட்டில் பயந்துகொண்டு விற்றுவிட்டு வேறொன்றில் முதலீடு செய்வது இவை, சரியான முறையில் கணக்கிடாவிடில் நட்டத்தைத் தூண்டிவிடும். பொறுத்தார் பூமியாள்வார் என்ற தமிழ்ப்பழமொழியையே வாரன் பஃபெட் தனது பாணியில் சொல்கிறார்.

5. கொஞ்சம் அசட்டை, மந்தமாக இருத்தல் இவை கூட முதலீட்டாளர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படைக்குணங்கள் என்பது இவர் கருத்து. ஏனெனில், முதலீட்டாளர்கள் ‘ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்’ காத்திருக்கும் கொக்குப்போல் இருக்க வேண்டியவர்கள். மிகவும் பரபரப்பாகச் செயல்படுவது, எதிர்பாராத நட்டங்களை உண்டாக்கலாம்.

6. கன்னாபின்னாவென்ற ஊசலாட்டங்கள், அதில் முதலீடு செய்பவர்களின் தாக்கத்தாலேயே உண்டாகின்றன, அந்தந்த நிறுவனங்களின் லாபநட்டங்களால் அல்ல. எனவே அவற்றைக் கண்டு குழம்பவேண்டுவதில்லை.

7. ஒரு முதலீட்டாளர் எல்லா முடிவுகளையும் சரியாகச் செய்யவேண்டுமென்பதில்லை. பெரும் தவறான முடிவுகளைச் செய்யாமல் இருந்தால் போதுமானது.

8. ஒரு முதலீட்டைச் செய்கையில், அந்த வாணிபத்தையே விலைக்கு வாங்குவது போல் நினைத்து முதலீடு செய்யுங்கள். பங்குகளை குத்தகைக்கு எடுப்பதுபோல் நினைக்காதீர்கள். (முழு ஈடுபாட்டுடன் அந்த நிறுவனத்தைக் குறித்து அறிந்துகொள்ளுங்கள்)

9. ஒரு முதலீட்டாளராக வெற்றி பெற அதி புத்திசாலியாக இருக்க தேவை இல்லை. அடிப்படை கூட்டல், கழித்தல், பெருக்கல் தெரிந்தாலே போதும்.

Saturday, August 20, 2016

பார்தி ஏர்டெல் பங்­கு­களை வாங்கும் சிங்டெல் நிறு­வனம்


பார்தி ஏர்டெல் நிறு­வ­னத்தின், 7.39 சத­வீத பங்­கு­களை, 65.95 கோடி டால­ருக்கு (4,400 கோடி ரூபாய்) வாங்க உள்­ளது. இதன் மூலம், பார்தி ஏர்டெல் நிறு­வ­னத்தின், 46.39 சத­வீத பங்­குகள், சிங்டெல் வசம் வரும். பார்தி ஏர்டெல் நிறு­வ­னத்தின் பங்கை, சந்­தை­ வி­லையை விட குறை­வாக, தலா, 235 ரூபாய்க்கு, சிங்டெல், ரொக்­கத்­திற்கு வாங்க உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

ஐபிஓ - RBL Bank Ltd

RBL Bank Ltd
விலை மதிப்பீடு :
Rs.224  to Rs.225

கம்பெனி பற்றி
RBL Bank Ltd ஒரு பிராந்திய வங்கி, மகாராஷ்டிராவில் மும்பை சார்ந்த தனியார் துறை வங்கி 1943 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 197 கிளைகள் மற்றும் 362 ஏடிஎம்களை கொண்டுள்ளது.( 16 இந்திய மாநிலங்களில் ).
1.9
மில்லியனுக்கு மேல் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

தேதி
Aug 19, 2016 - Aug 23, 2016

பங்குகள்
65 மற்றும் அதன் மடங்குகளாக


இலக்கை எட்­டாத ரிலை­யன்­சு, பிஎஃப்ல் வீடு

பிஎஃப் கணக்கில் இருக்கும் இருப்பைப் பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை விரைவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கொண்டு வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலக்கை எட்­டாத ரிலை­யன்­சுக்கு ரூ.2,500 கோடி அப­ராதம்
 இலக்கை விட குறை­வாக உற்­பத்தி செய்த, ரிலையன்ஸ் மற்றும் கூட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு, மத்­திய அரசு, ஏற்­க­னவே நான்கு நிதி­யாண்­டு­க­ளுக்கு அப­ராதம் விதித்­துள்­ளது. தற்­போது, 2014 – 15ம் நிதி­யாண்­டிற்கு, 38 கோடி டாலர் (2,500 கோடி ரூபாய்) அப­ராதம் விதிக்­கப்­பட்டு உள்­ளது. இதன் மூலம் மொத்த அப­ராத தொகை, 276 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.

Tuesday, August 16, 2016

எஸ்பிஐ நிகர லாபம் சரிவு

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 32 சதவிகிதம் வரை சரிவடைந்துள்ளது. 

இதற்கு முந்தைய ஆண்டு ஜூன் மாதத்தில் எஸ்பிஐ-ன் நிகர லாபம் ரூ.3,692.43 கோடியாக இருந்தது. இப்போது வங்கியின் நிகர லாபம் 31.73 சதவிகிதம் சரிந்து ரூ.2,520.96 கோடியாக சரிவடைந்துள்ளது. வாராக்கடனுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடால் வங்கியின் லாபம் குறைவடைந்துள்ளது. எனினும் நிபுணர்களின் கணிப்பு படி, எஸ்பிஐ நிகர லாபம் ரூ.2,503.10 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆகையால், எதிர்பார்ப்புகளை மீறி வங்கியின் லாபம் அதிகரித்துள்ளதால் சந்தையில் இவ்வங்கியின் பங்குகள் அதிகளவில் அதிகரித்து வருகின்றன. இவ்வங்கியின் பங்குகள் 18% உயர்ந்து ரூ.244.85 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 


ஆதித்யா பிர்லா நுவோ மற்றும் கிராஸிம் நிறுவனம் இணைப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பால் இந்நிறுவனத்தின் பங்குகள் அதிகளவில் சரிவைச் சந்தித்து வருகின்றன.

Tuesday, August 2, 2016

மார்கெட் பிட்ஸ் 03-08-2016

DHFL NCD  கடன் பத்திரங்கள் வெளியீடு Aug 03 - Aug 16.

நம் நாட்டின் மிகப் பெரிய பயணிகள் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி விற்பனை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 2015 ஜூலையில் 1,10,405 பயணிகள் வாகனத்தை மாருதி சுசூகி விற்பனை செய்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூலையில் 1,25,764 பயணிகள் வாகனத்தை விற்பனை செய்துள்ளது. 

ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் இருந்தாலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) பிடித்தம் செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறு­வனம், தன் ஓசூர் தொழிற்­சா­லையில், பி.எம்.டபிள்யூ., இருசக்­கர வாக­னத்தை தயா­ரிக்கும் வேலைகள் துவங்கி விட்­ட­தாக தெரி­வித்­துள்­ளது

DHFL NCD கடன் பத்திரங்கள்


Monday, August 1, 2016

ஐபிஓ - S.P. APPRARELS LIMITED


S.P. APPRARELS LIMITED
பரிந்துரை
விலை மதிப்பீடு :
Rs.258 to Rs.268
-

கம்பெனி பற்றி
இந் நிறுவனம் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந் நிறுவனம் மூலம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்க்கப்படுகின்றது.
சொந்தமாக 'Natalia'என்னும் பெயரில் ஆடைகளை விற்பனை செய்கின்றது. இந்தியாவில் 'Crocodile' என்னும் பெயரில் ஆடைகளை தயாரிக்க உரிமம் பெற்றுள்ளது.


தேதி
பங்குகள்
Aug 2, 2016 - Aug 4, 2016
55 மற்றும் அதன் மடங்குகளாக

ஐபிஓ Dilip Buildcon Ltd

Dilip Buildcon Ltd
விலை மதிப்பீடு : Rs214-219

பரிந்துரை
தேர்வுசெய்யலாம்

கம்பெனி பற்றி
சாலைகள்,அணைகள்,கால்வாய்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுமானத்தில் முதன்மையாக ஈடுபட்டு வருகின்றது.



தேதி
Aug 1, 2016 - Aug 3, 2016


Sunday, July 31, 2016

AETL ஐபிஓ அதிரடி துவக்கம்

01-ஆகஸ்டு -2016
Advanced Enzyme Technologies Ltd இன்று பட்டியலிடப்பட்டது. தற்போது 1210.00 ( +314.00 (+35.04%) ) ரூபாய்என்ற அளவில் வர்த்தகமாகி வருகின்றது.

குறிப்பு:
( இதன் நிர்ணய விலை )
பங்கொன்றிற்கு ரூ. 880 முதல் ரூ.896 வரை.

Wednesday, July 27, 2016

மார்கெட் பிட்ஸ் 27-07-2016

நம் நாட்டில் சொத்து மேலாண்மை மற்றும் மியூச்சூவல் ஃபண்ட் வணிகத்தை மேற்கொள்ள செபியிடம் இருந்து முன் அனுமதி யெஸ் பேங்க் பெற்றுள்ளது.

செபியிடம் இருந்து இறுதி ஒப்புதலை பெறும் பட்சத்தில், யெஸ் பேங்க் நாட்டில் 44 வது மியூச்சூவல் ஃபண்ட் நிறுவனமாக இருக்கும். 

ஆன்லைன் மூல­மாக பேஷன் பொருட்­களை விற்­பனை செய்து வரும் ஜபாங் நிறு­வ­னத்தை ப்ளிப்கார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

‘யாகூ’ வலை­தள நிறு­வ­னத்தை தொலைத்­தொ­டர்பு துறையைச் சேர்ந்த வெரிசான் கம்­யூ­னி­கேஷன்ஸ் நிறு­வனம் 483 கோடி டாலருக்கு வாங்குகிறது. 

Wednesday, July 20, 2016

மார்கெட் பிட்ஸ்

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொண்டு ரூ.5,000 கோடி திரட்ட அனுமதி கோரி இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கடவுளாக விளங்கும் திருப்பதி வெங்கடாஜலபதி பெயரில் புதிய டீமேட் கணக்கை அக்கோவில் அமைப்பான திருமலை திருப்பதி தேவஸ்தானம்  கடந்த ஆண்டு ஆகஸ்ட மாதம் துவங்கியது. இதன் மூலம் இனி பக்தர்கள் கடவுளின் பெயரிலேயே பங்குகளை காணிக்கையாகச் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இதேப்போலவே மும்பை ஸ்ரீ சித்தி விநாயக் கணபதி ஆலயம் பெயரிலும் டீமேட் கணக்கு திறக்கப்பட்டுள்ளது. 
இனி பக்தர்கள் காணிக்கையாக பங்குகளையும் செலுத்தலாம்!

வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதற்காக 13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.22,915 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டது. 

Monday, July 18, 2016

ஐபிஓ - Advanced Enzyme Technologies Ltd

Advanced Enzyme Technologies Ltd 4,034,470 பங்குகளை ஐபிஓ மூலம் விற்பதன் மூலம் ரூ. 400 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்:
ஜூலை 20, 2016 முதல் ஜூலை 22 ம் தேதி வரை

நிர்ணய விலை :
பங்கொன்றிற்கு ரூ. 880 முதல் ரூ.896 வரை.

விண்ணப்ப பங்குகள் எண்ணிக்கை:
16 பங்கு அல்லது 16 ன் மடங்குகளாக விண்ணப்பிக்கலாம்.


Advanced Enzyme Technologies Ltd 20 வருடங்கள் வணிக அளவில் நொதிகளை(enzymes) தயாரிப்பதில் அனுபவம் வாய்ந்தது. மனித ஊட்டச்சத்து, விலங்கு ஊட்டச்சத்து, உணவு பதப்படுத்தும்முறை, உணவு அல்லாத பதப்படுத்தும் முறை இவற்றில் திறமை மிக்க கம்பெனியாக திகழ்தின்றது.

வெப்:
http://advancedenzymes.com/

Friday, July 15, 2016

தங்கப்பத்திரங்கள் - தேதி 18 முதல் 22ம் தேதி வரை

4ம் கட்ட தங்கப் பத்திர வெளியீடு வரும் 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

மத்திய அரசின் சார்பாக தங்கப் பத்திர வெளியீட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1, 5, 10, 50 மற்றும் 100 கிராம் தங்க பத்திரங்கள் வாங்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் ஒரு நிதி ஆண்டில் ஒருவர் அதிகபட்சமாக 500 கிராம் அளவுக்கு தங்க பத்திரங்கள் வாங்கலாம்.

இவற்றின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரங்களை ஒப்படைத்து தங்கமாகவே அல்லது பணமாகவோ பெறமுடியும். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.75 சதவிகித வட்டி கிடைக்கும். தங்கப் பத்திரங்கள் வங்கிகள், இந்திய பங்கு விற்பனைக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் (SHCIL), தபால் அலுவலகங்கள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் கிடைக்கும்.

Thursday, July 7, 2016

‘பிட்ச்’ அறிக்கை

 ‘பிட்ச்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை:இந்­திய வங்­கிகள், வாராக்­கடன் பிரச்­னையில் சிக்­கி­யுள்­ளன. இந்­திய வங்­கி­களின் செயல்­பா­டுகள், நீண்­ட­ கால அடிப்­ப­டையில், ‘ஸ்திரத்­தன்மை’ என்ற நிலைப்­பாட்டில் இருந்து, ‘இடர்ப்­பாட்­டிற்கு வாய்ப்­புள்­ளது’ என்ற பிரி­விற்கு தர­வி­றக்கம் செய்­யப்­பட்டு உள்­ளது. 

Saturday, July 2, 2016

எல் அண்ட் டி இன்ஃபோடெக் ஐபிஓ

எல் அண்ட் டி இன்ஃபோடெக் லிமிடெட் ஐபிஓ மூலம் பங்கு சந்தைக்குள் நுழைகின்றது.


விற்பனைக்கான மொத்த பங்குகள்:17,500,000.

நிர்ணயிக்கப்பட்ட விலை:
குறைந்தபட்ச விலை ரூ 705
அதிகபட்ச விலை ரூ 710
தனிநபர் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 தள்ளுபடி

இந்த ஐபிஓ ஜூலை 11 , 2016 ல் தொடங்கி ஜூலை 13 , 2016 நிறைவடைகிறது.

எல் அண்ட் டி இன்ஃபோடெக் இந்தியாவின் 6 வது பெரிய ஐடி நிறுவனமாக திகழ்கின்றது.

Tuesday, June 28, 2016

பொதுப்பங்கு வெளியிட என்எஸ்இ(NSE) திட்டம்

வரும் 2017 ஜனவரி மாதம் பொதுப்பங்கு வெளியிட தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) திட்டமிட்டுள்ளது.

என்எஸ்இ பொதுப்பங்கு மற்றும் பங்குகளை பட்டியலிட திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து பொதுப்பங்கு வெளியீட்டுக்கான ஆவணங்களை ஜனவரி 2017ல் `செபி’-யிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

Monday, June 20, 2016

மியூச்சுவல் ஃபண்டு - ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட்


இதுவும் முழுக்க முழுக்க பங்குச் சந்தை சார்ந்த திட்டம்தான். ஆனா, திரட்டுற பணத்தை, பல துறைகள், பல நிறுவனப் பங்குகள்ல பிரிச்சு முதலீடு பண்ணுற போர்ட்ஃபோலியோ இந்த ஃபண்டுல இருக்கு. அதனால ரிஸ்க் ஓரளவுக்கு குறைக்கப்படுது. வருமானமும் நல்ல விதமாக கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்டுக்கு புது ஆளுங்க, துணிச்சலா இந்த வகை ஃபண்டுல பணத்தைப் போடலாம்.

ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட் உதாரணங்கள்:
Sundaram Rural India Fund (G)
SBI Magnum Multicap Fund (G)
L&T India Value Fund (G)

அந்நிய முதலீடு அனுமதி ( FII )

மருந்து துறை, விமானத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டில் விதிமுறைகளை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் விமானத்துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது. உணவு வர்த்தகம் மற்றும் உணவு மின்னணு வர்த்தகத்திலும் 100 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் மற்றும் மற்ற நிறுவனங்கள் புதிய விதிகளை பயன்படுத்தி இந்தியாவில் முதலீடு செய்ய விண்ணப்பம் செய்யலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

Monday, June 13, 2016

ITC & BPCL போனஸ் ஷேர் அறிவிப்பு


ITC Limited 
BONUS 1:2
Ex-Date:01-July-2016
Record Date: 04-July-2016.

Bharat Petroleum Corporation Limited
BONUS 1:1
Ex-Date: 13-Jul-2016.

Record Date: 14-Jul-2016.