நவம்பர் 8-ம் தேதி இரவு நரேந்திர மோடி சொன்ன பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், இந்தியர்கள் அனைவரையும் ஏடிஎம் வாசல்களில் வரிசையில் நிறுத்தியது. இந்த நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் சில ஆண்டுகளுக்கு மோசமாகவே இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்திய ஜி.டி.பி இரண்டு சதவிகிதம் வரை குறையலாம். கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, நாளடைவில் 'கேஷ்லெஸ் எகானமி' என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. பண பரிவர்த்தனை தொடர்பாக தினமும் புது புது செய்திகள் வேறு. இதனால் பங்கு சந்தை சில மாதஙகளுக்கு பாதிப்பிற்குள்ளாகவே இருக்கும் என்பதுதான் உண்மை.
No comments:
Post a Comment