ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொண்டு ரூ.5,000 கோடி திரட்ட அனுமதி கோரி இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கடவுளாக விளங்கும் திருப்பதி வெங்கடாஜலபதி பெயரில் புதிய டீமேட் கணக்கை அக்கோவில் அமைப்பான திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஆண்டு ஆகஸ்ட மாதம் துவங்கியது. இதன் மூலம் இனி பக்தர்கள் கடவுளின் பெயரிலேயே பங்குகளை காணிக்கையாகச் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இதேப்போலவே மும்பை ஸ்ரீ சித்தி விநாயக் கணபதி ஆலயம் பெயரிலும் டீமேட் கணக்கு திறக்கப்பட்டுள்ளது.
இனி பக்தர்கள் காணிக்கையாக பங்குகளையும் செலுத்தலாம்!
வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதற்காக 13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.22,915 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டது.
No comments:
Post a Comment