Tuesday, August 16, 2016

எஸ்பிஐ நிகர லாபம் சரிவு

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 32 சதவிகிதம் வரை சரிவடைந்துள்ளது. 

இதற்கு முந்தைய ஆண்டு ஜூன் மாதத்தில் எஸ்பிஐ-ன் நிகர லாபம் ரூ.3,692.43 கோடியாக இருந்தது. இப்போது வங்கியின் நிகர லாபம் 31.73 சதவிகிதம் சரிந்து ரூ.2,520.96 கோடியாக சரிவடைந்துள்ளது. வாராக்கடனுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடால் வங்கியின் லாபம் குறைவடைந்துள்ளது. எனினும் நிபுணர்களின் கணிப்பு படி, எஸ்பிஐ நிகர லாபம் ரூ.2,503.10 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆகையால், எதிர்பார்ப்புகளை மீறி வங்கியின் லாபம் அதிகரித்துள்ளதால் சந்தையில் இவ்வங்கியின் பங்குகள் அதிகளவில் அதிகரித்து வருகின்றன. இவ்வங்கியின் பங்குகள் 18% உயர்ந்து ரூ.244.85 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 


ஆதித்யா பிர்லா நுவோ மற்றும் கிராஸிம் நிறுவனம் இணைப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பால் இந்நிறுவனத்தின் பங்குகள் அதிகளவில் சரிவைச் சந்தித்து வருகின்றன.

No comments:

Post a Comment