Tuesday, August 2, 2016

மார்கெட் பிட்ஸ் 03-08-2016

DHFL NCD  கடன் பத்திரங்கள் வெளியீடு Aug 03 - Aug 16.

நம் நாட்டின் மிகப் பெரிய பயணிகள் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி விற்பனை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 2015 ஜூலையில் 1,10,405 பயணிகள் வாகனத்தை மாருதி சுசூகி விற்பனை செய்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூலையில் 1,25,764 பயணிகள் வாகனத்தை விற்பனை செய்துள்ளது. 

ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் இருந்தாலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) பிடித்தம் செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறு­வனம், தன் ஓசூர் தொழிற்­சா­லையில், பி.எம்.டபிள்யூ., இருசக்­கர வாக­னத்தை தயா­ரிக்கும் வேலைகள் துவங்கி விட்­ட­தாக தெரி­வித்­துள்­ளது

No comments:

Post a Comment