Saturday, December 26, 2020

[27-DEC-2020] ஃப்ளிப்கார்ட் ஐபிஓ(IPO)

இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ஃப்ளிப்கார்ட் வரும் 2021-ம் ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ) களமிறங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அது மேற்கொண்டு வருகிறது.

Monday, December 7, 2020

[07 DEC 2020 ] குறுகிய கால இலக்கு-2020_#02

தமிழ் பங்குசந்தை படிப்பினை கணிப்பு

பங்கு

Jagran Prakashan Limited

CMP 44Rs.(Dec-07-2020)

இலக்கு விலை

52

கால அவகாசம்

3 மாதங்கள்

தற்போதய நலைப்பாடு

Call CLOSED.

இலக்கை எட்டியது.

முற்றிலும் படிப்பினைக்கானது. ஸ்டாப் லாஸ்(stoploss) குறிப்பிடபடவில்லை. நீங்கள் உங்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ஹப்ப ஸ்டாப் லாஸ் விலையை வரையறுத்துக்கொள்ளவும்.

நன்றி. தமிழ்பங்குசந்தை.

 

Sunday, November 29, 2020

[30 Nov 2020 ] குறுகிய கால இலக்கு-2020_#01

இது முற்றிலும் படிப்பினைக்காக மட்டுமே..


Mahindra Holidays( MHRIL )

தற்போதய விலை 191.20 Rs.

வாங்க வேண்டிய விலை: <= 175 to 180 Rs.

குறுகிய கால( 3 months ) இலக்கு: 210 Rs.

தற்போதய நிலைப்பாடு: இலக்கை எட்டியது. CALL CLOSED.

ஸ்டாப் லாஸ்(stop loss) கொடுக்கப்படவில்லை  அதனால் நீங்கள் உங்களுடைய வாங்கும் திறனுக்கு ஏற்ப ஸ்டாப் லாஸ்(STOP LOSS) விலையை தேர்தெடுத்துக்கொள்ளவும்.


DEC-08-2020 இன்று இலக்கை எட்டியது. இன்றைய உச்சபட்ச விலை: 214.40

இந்த தகவல் முடித்துக்கொள்ளப்பட்டது.


[30 Nov 2020] வரவிருக்கும் ஐபிஓ


Kalyan Jewellers

https://www.kalyanjewellers.net/









Mrs Bectors Food Specialities Ltd

http://www.cremica.in/






RailTel Corporation of India Ltd 

https://www.railtelindia.com/

Thursday, November 26, 2020

[27-NOV-2020] பர்கர் கிங் ஐபிஓ வந்தது

 நாம் ஏற்கனவே ஒரு பதிவில் கூறியதை போல் பர்கர் கிங் ஐபிஓக்கு வந்தது.


Tuesday, November 17, 2020

[ NOV-17-2020 ]இண்டிகோ பெயின்ட்ஸ் ஐபிஓ ( IPO )


IPO மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய் திரட்டுவதற்காக இண்டிகோ பெயின்ட்ஸ்  செபியிடம்  ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.

Saturday, November 14, 2020

[ NOV 14, 2020 ] தீபாவளி 2021 பங்குகள்

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

விரைவில் தமிழ் பங்குசந்தை 3.0 ஆண்ட்ராய்டு செயலி

நிறுவனம்

தற்போதய விலை 2020 தீபாவளி

தீபாவளி 2021

GICRE

Best at below< 100 Rs.

126.65 Rs.

எதிர்பார்ப்பது: 160+

 காத்திருப்போம்

Ashok Leyland

Best at below <75 Rs.

90.55 Rs.

எதிர்பார்ப்பது: 100+

 காத்திருப்போம்

Wipro

Best at Below <300 Rs.

344.15 Rs.

எதிர்பார்ப்பது:400+

 காத்திருப்போம்

L&T Finance Holdings Ltd

Best at < 60 Rs.

70.05 Rs.

எதிர்பார்ப்பது:100+

 காத்திருப்போம்

Bharti Airtel

Best at Below < 400 Rs.

475.75 Rs.

எதிர்பார்ப்பது:550+

 காத்திருப்போம்

ABCapital

Best at Below <= 68 Rs.

76.90 Rs.

எதிர்பார்ப்பது:100+

 காத்திருப்போம்

Tata Coffee <= 90 Rs.

102.15 Rs.

எதிர்பார்ப்பது:120+

 காத்திருப்போம்


Wednesday, November 11, 2020

[ NOV 11, 2020 ] தீபாவளி முஹுரத் வர்த்தக நேரம்

சனிக்கிழமை 14-Nov-2020. தீபாவளி முஹுரத் வர்த்தக( Muhurat Trading Session) நேரம்.

Pre-Open

18:00 hrs 18:08 hrs

Normal Market 18:15 hrs 19:15 hrs

Closing Session 19:25 hrs 19:35 hrs

Tuesday, November 10, 2020

[ NOV 10, 2020 ] தீபாவளி 2019 பங்குகளின் தற்போதய நிலை

 தீபாவளி 2019 பங்குகளின் தற்போதய நிலை.

 

தீபாவளி 2019

தீபாவளி 2020

ASHOKLEYLAND 75.95 Rs.

Best at <= 65 Rs.

CMP 91.05 Rs.

High 91.05 Rs.

19% UP

Rail Vikas Nigam Ltd 24.0 Rs.

Best at <= 23 Rs.

CMP 19.Rs.

High 29.30 Rs.

20% DOWN

Phillips Carbon Black Ltd 118.15 Rs.

Best at <= 108 Rs.

CMP 146.9 Rs.

High 155.2 Rs.

24% UP

BEL 116.7 Rs.

Best at <= 105 Rs.

CMP 95.4 Rs.

High 112.95

18% DOWN

Maruti Suzuki India 7442. Rs.

Best at <= 6500 Rs.

CMP. 6793 Rs.

High 7502 Rs.

8% DOWN

Reliance Nippon Life Asset Mgmt Ltd 330.2 Rs.

285.05 Rs.

High 440.5 Rs.

13% DOWN

Camlin Fine Sciences 65.50

Best at 45-55 Rs.

102.8 Rs.

High 120.45 Rs.

56% UP


மொத்தமாக பார்த்தால் -7.8% ல் உள்ளது. கொரோனா பாதிப்பால் லாபம் குறைந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து உலகமும் பங்கு சந்தைகளும் மீண்டு வருகின்றன.

[ NOV 10, 2020] கொரோனா தடுப்பூசி - ஆய்வில் மிகச் சிறப்பான முன்னேற்றம்!?

 கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு தொடர்பான ஆய்வில் மிகச் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, பைசர்( PFIZER) நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேர்தல் -பைடனின் வெற்றி, தடுப்பு ஊசியில் முன்னேற்றம் என பங்கு சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

Thursday, September 3, 2020

[ 02-Sep-2020 ] IT கம்பெனிகளின் ETF

IT  கம்பெனிகளின் ETF( Exchange Traded Fund )

ETF NIFTY Symbol : NETFIT

தற்போதய விலை:18.36

போர்ட்போலியோவில் உள்ள 10 முதன்மை கம்பெனிகள்.



இத்தனை கம்பெனிகளை வாங்க முடியாதவர்கள்  இந்த ETFஐ  SIP மூலம் வாங்கிவரலாம்.

வெப்சைட்:

https://www.nipponindiaetf.com/Funds/details/2018#holdings

Sunday, August 23, 2020

[ 23-Aug-2020] விரைவில்..

 

[ 23-Aug-2020 ] கேள்வி-பதில் 8 - நீண்ட கால அடிப்படையில்..

கேள்வி:

 Sir long term ku which is the best of below

1.India bank

2.karur vaysya bank

3.tata motors

4.ONGC


Kindly advise

 

-RAVICHANDRAN

பதில்:

நீண்ட கால அடிப்படையில் என பார்த்தால் என் பார்வையில், 

1. ONGC - கடன் இல்லாதது. டிவிடெண்ட் கொடுக்கக்கூடியது.அரசாங்கம் மேலாண்மை செய்வதால் பங்கின் விலையில் உடனடி வளர்ச்சி காண முடியாது. மெதுவான வளர்ச்சியே இருக்கும்

2. Tata Motors - தன் பழைய இடத்தை பிடிக்க முனைப்போடு செயல்படும். பலவீனம் - கடன் சுமை.

3. Indian bank, KVB - மலிவான விலையில் கிடைக்கின்றது. வாராகடன் பிரச்சனைகளை சரிசெய்யும் பட்சத்தில் உயர வாய்ப்பு உள்ளது.

[ Aug 23, 2020 ] கேள்வி பதில் 7 - தினசரி வர்த்தகத்தில்..

கேள்வி:

(Intraday) வில் டிரேடிங் செய்யும் பொழுது கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை பற்றி எடுத்துரையுங்களேன்.

-இளவரசன்

பதில்:

 தினசரி வர்த்தகத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியது,

- பங்கு குறிப்பிட்ட ஸ்டாப் லாஸ்( Stop Loss) விலைக்கு கீழ் செல்லும் போது நஷ்டத்தை குறைந்த அளவோடு புக் செய்து வெளிவரவேண்டும். இது மேலும் நஷ்டம் அடையாமல் இருக்க உதவும். நீங்கள் எவ்வளவு நஷ்டத்தை சமாளிக்கமுடியுமோ அதையே நீங்கள் ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக்கொள்ளலாம். 

- நீங்கள் எதிர்பார்க்கும் விலை வந்தவுடன் லாபத்தை பதிவு செய்துவிட்டு வெளிவரவேண்டும். அதித ஆசையின் காரணமாக மேலும் எதிர்பாத்தால் நஷ்டம் உண்டாக வாய்ப்பு அதிகம்.

-தினசரி வர்த்கத்திற்கு உங்கள் புரோக்கர் வசூல் செய்யும் கட்டணத்தையும் கவனத்தில் கொள்க.

-அதிக வால்யும்( volume ) உள்ள பங்குகள் தினசரி வர்த்தகத்திற்கு உகந்தது. உதாரணமாக Reliance Industries.

-முந்தய விலையை உடைத்துக்கொண்டு செல்லும்,  52 வார விலையை உடைத்துக்கொண்டு செல்லும்( Breakout stocks ) பங்குகளும் தினசரி வர்த்தகத்திற்கு உகந்தது.

- சார்ட், சார்ட் டூல்ஸ்( RSI, bollinger band, DMA, EMA) போன்றவற்றை உபயோகிக்கலாம்.

Monday, May 25, 2020

[ MAY 25, 2020 ] NIFTYBEESல் முதலீடு??!!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நிப்டி இன்டெக்ஸ்ல் (நிப்டி 50 கம்பெனிகளில்) முதலீடு செய்ய விருப்பமா?அதற்கான வழிதான் இந்த NIFTYBEES. இது ஒரு ETF( Exchange Traded Fund ) ஆகும். ஏப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் விற்கலாம்.

பங்கு சந்தை இறங்கும் போது NIFTYBEES ல் முதலீடு செய்யலாம். இதன் விலை நிப்டி இன்டெக்ஸ் ஏற்ற இறக்கத்தைப் பொருத்து ஏறும்,இறங்கும். 140 ரூபாய் வரை ( நிப்டி 12000 புள்ளிகளுக்கு மேல் இருந்த போது )சென்ற இந்த ETF தற்போது 96 ரூபாயில் உள்ளது. தற்போது  நிப்டி 9000 புள்ளிகளுடன் உள்ளது. மறுபடியும் நிப்டி 12000 புள்ளிகளுக்கு மேலே செல்லும் போது இதுவும் உயரும்.

நிப்டி இன்டெக்ஸ் இறங்க இறங்க SIP ( Systematic Investment Plan )முறையில் வாங்கி வந்தால் நிப்டி இன்டெக்ஸ் உயரும் போது விற்று லாபம் பார்க்கலாம்.

NIFTY50 பங்குகள்











சார்ட்:


மஞ்சள் கலர்: Nifty 50
சிவப்பு கலர்: NIFTYBEES

Saturday, May 23, 2020

[ May 23, 2020 ] கேள்வி-பதில்-6

கேள்வி:
Zeel and ibuhfin share வாங்கலாமா?
-கோபி அ

பதில்:
தற்போது ZEEL. வாங்க வேண்டிய விலை ரூ.130 அதற்க்கு கீழ். விலை குறைய குறைய கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்.

கேள்வி:
Sib முறையில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்து வருகிறேன் (sbi blue chip fund dir-pln G) தற்சமயம் nav விலை குறைவாக உள்ளதால் (பெரிய அளவில் முதலீடு செய்து nav வாங்கலாமா? எதிர்காலத்திற்கு.
-பாபு

பதில்:
பங்குசந்தை இன்னும் தள்ளாட்டத்தில்தான் உள்ளது. பங்குசந்தை குறைய குறைய வாங்கலாம்.

நினைவில் கொள்க - மியூட்சுவல் பண்டில் நீங்கள் எதிர்பார்த்த லாபம்( gain of 10%, 15%, 20% ..etc ) வந்ததும் விற்று லாபம் பார்க்கவும் ( பங்குசந்தை உச்சத்தில் இருக்கும் போது ). NAV குறைவாக இருக்கும் போது மீண்டும் வாங்குங்கள். பங்கில் முதலீடு செய்பவருக்கும் மியூட்சுவல் பண்டில் இருப்பவருக்கும் இது பொருந்தும். லாபத்தை பதிவு செய்வதில் ஏதும் தவறில்லை.

நாம் செய்யும் பொதுவான தவறு இன்னும் மேலே போகும் மேலே போகும் என எதிர்பார்பதுதான். பங்குசந்தையில் தினமும் ஏற்றம் இறக்கம் தான். நாம் நம்முடைய இலக்கை நாமே நிர்ணயித்து அங்கே லாபம் பார்த்து விட வேண்டும்.



[ May 23, 2020 ] கேள்வி-பதில்-5

கேள்வி:
பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி, எந்த வகை பங்குகளை வாங்குவது சிறந்தது?
-Santhosh kumar

Demat account தொடங்கும் வழிமுறை என்ன?
-PONRAJA GOPAL S

Share market தொடங்குவது எப்படி ?தொடங்க எது வேண்டும்?
-Vijaya kumar


பதில்:
பங்கு சந்தையில் முதலீடு செய்ய உங்களுக்கு டிமெட்(DEMAT) அக்கவுண்ட் (account )வேண்டும். அத்தோடு ஆன்லைன் டிரேடிங் அக்கவுண்டும் உருவாக்கப்படும். 

இவற்றை பின்வரும் உதாரண புரோக்கிங் கம்பெனிகள்( broking companies/ brokers ) மூலம் நீங்கள் பெறலாம்.அவர்களை தொலைபேசியில் அழைத்தால் உங்களுக்கு உதவுவர்.



-உங்கள் கணக்கு உருவாக்கப்பட்டவுடன் நீங்கள் பங்குகளை வாங்கலாம் விற்கலாம். பங்குகளை வாங்கும் போதும் விற்க்கும் போதும் கமிசன்( commission ) தொகையை பிடித்துக்கொள்வார்கள். இந்த கமிசன் தொகை ஒவ்வொரு புரோக்கிங் கம்பெனிகளுக்கு ஏற்ப மாறுபடும்.

எந்த வகை பங்குகளை வாங்குவது சிறந்தது?
இதற்க்கு முன் கூறிய கேள்வி பதிலை பாருங்கள்.

[ May 23, 2020 ] கேள்வி-பதில்-4

கேள்வி:
முதலீட்டுக்கான பங்குகள்?
- Selvaraj M

How to use share market?
-Nirmal Kumar

புதுசா பங்கு சந்தை இடுபட உள்ளேன்... எவ்வித பங்குகளை வாங்குவது
-சரஸ்வதி

பதில்-4
முதலீட்டுக்கான பங்குகள் நிறைய உள்ளன.தற்சமயம் நிப்டி 50 ல் உள்ள நல்ல பங்குகளை குறைந்த விலைக்கு வரும் போது வாங்குங்கள். தற்போது குறைந்த விலையில் பல நல்ல பங்குகள் உள்ளன. நீண்ட கால அடிப்படையில் நல்ல பலனை தரும். நீண்ட காலம் என்பதை விட எவ்வளவு லாபம் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ( உதாரணத்திற்கு 10%, 15% ) அந்த லாபம் வந்தவுடன் பங்கை விற்று லாபம் பாருங்கள். அந்த பங்கு மீண்டும் குறைந்த விலைக்கு வரும் போது மீண்டும் வாங்குங்கள். நல்ல டிவிடெண்ட்( dividend ) வழங்கும் கம்பெனிகளை கண்டுபிடியுங்கள்( உதாரணத்திற்கு ITC ) அதில் நீண்டகால முதலீடு செய்யுங்கள். கொஞ்சம் தங்கம்( GOLD ETF ), மியூட்சுவல் பண்டிலும்( Mutual Funds ), Bank FD முதலீடு செய்யுங்கள். ஒரே இடத்தில் அனைத்தையும் போட்டு வேடிக்கைபார்ப்பதை விட இப்படி பிரித்து முதலீடு செய்ய லாபம் கிட்டும். பங்குசந்தை குறைந்தால் தங்கம் உயரும். குறைந்த பட்ச வட்டி BANK FDல் கிடைக்கும்.

பின்வரும் பங்குகளை விலை குறைய குறைய வாங்குங்கள். உங்களுக்கு தேவையான லாபம் வந்ததும் விற்று லாபம் பாருங்கள். விலை குறைகின்றதே என வருத்தபட வேண்டாம். உங்களுக்கு தேவையான லாபம் வரும் வரை பொருமையாக இருங்கள். விலை குறைந்து கொண்டே செல்வதை பார்த்து குழம்ப வேண்டாம். முடிந்தால் விலை குறைய குறைய வாங்குங்கள். நல்ல பங்குகள் எந்க காலத்திலும் மீண்டு வரும்.

கொரோனா பாதிப்பினால் பங்குகளின் விலை ஏற்றம் இறக்கமாகதான் இருக்கும் சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு. உங்களுடைய அதித பணத்தை மட்டும் பங்குசந்தையில் முதலீடு செய்யவும். 

HDFC BANK ரூ.800 க்கு கீழ்
INFOSYS ரூ.650 க்கு கீழ்
ITC, DABUR, HCL TECH,BRITANIA,
HINDUSTAN UNILEVER,
L&TFH ரூ.45-51
BBTC < 750.

இன்னும் நிறைய உள்ளன நீங்களும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்களேன்..
நல்ல கம்பெனிகளை 'கம்பெனி அலசல்' பகுதியில் பதிவிடுவோம். பாருங்கள்.எல்லாபதிவுகளும் படிப்பினைக்காகவே.


சந்தை நன்றாக இறங்கி விட்டது ஆ௧ எனது பார்வையில் தற்போது முதலீடு செய்ய விரும்புகிறேன். தங்களின் ௧௫த்து
-மா.அமல்ராஜ்

Can I start my trade investment right time this
-Dhanasekar

தற்சமயம் வரை கொரோனா பாதிப்புகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. நம் பங்கு சந்தையில் பெரும் பகுதி வெளிநாட்டவர் முதலீடு சார்ந்தது. தற்சமயம் கொரோனா பாதிப்பால் அவர்கள் முதலீடு செய்த பணத்தை எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதையெல்லாம் வைத்து பார்த்தால் ஏற்றத்திற்கான காலம் கொஞ்சம் தாமதமாகும். நல்ல பங்குகளை விலை குறைய குறைய வாங்கி வாருங்கள்...


Sunday, May 10, 2020

[ May 11, 2020 ] கொரோனா பாதிப்புகளுக்கிடையே நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன


  • Titan to reopen 50 Tanishq stores by May 10.
  • VST Tillers has resumed its manufacturing operation.
  • Nocil limited has partially resumed the manufacturing operations.
  • PPAP automotive has resumed operations at its Tamilnadu facility.


டைட்டன்( Titan ) -  50 டானிஷ்க் கடைகளை மே 10 க்குள் மீண்டும் திறக்க உள்ளது.

விஎஸ்டி டில்லர்ஸ்( VST Tillers ) அதன் உற்பத்தி நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளது.

நோசில் லிமிடெட் ( Nocil Limited )ஓரளவு உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

பிபிஏபி ஆட்டோமோட்டிவ்( PPAP Automotive ) தனது தமிழ்நாடு கிளையில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

Monday, April 6, 2020

[ APR 07, 2020 ]யார் இந்த ஷார்ட் செல்லர்ஸ்?( Short Sellers )


பங்குகள் இறங்குமென நினைத்து  முன் கூட்டியே பங்குகளை விற்று, பின் விழுந்தவுடன் அதே பங்குகளை வாங்கி லாபம் பார்ப்பவர்கள்.

உதாரணத்திற்கு இன்று ரிலையன்ஸ் பங்குகள் 1000 ரூபாய்க்கு கீழே இறங்கும் என கணித்து ரிலையன்ஸ் பங்குகளை 1000 ரூபாய்க்கு விற்று( உதாரணமாக 100 பங்குகள் ) அது 900 க்கு வரும் போது உயர போகிறது என கணித்து அதே ரிலையன்ஸ் பங்குகளை 900 ரூபாய்க்கு வாங்குபவர்கள்..

100 பங்குகள் x 1000 ரூ= 100000 ரூ( விற்ற விலை )
100 பங்குகள் x 900 ரூ=     90000 ரூ( வாங்கிய விலை )
100000 - 90000 = 10000 ரூபாய்( லாபம் )

Sunday, March 22, 2020

[ MARCH 22, 2020 ] கேள்வி-பதில்-3

கேள்வி: 
olectra பங்குகளில் முதலீடு செய்யலாமா....?
அதன் பங்குகள் உயர எவ்வளவு காலம் ஆகும்.....
-lakshmanan V

பதில்:
ஸ்மால் கேப் கம்பெனி( 461 cr ). எலக்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. கடன் 5% உள்ளது. இந்த கம்பெனியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. 2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரை சரியான லாபம் ஈட்டவில்லை.தற்சமயம் புக் வேல்யூக்கும்( Book Value ) கீழ் விற்பனையாகின்றது.டெக்னிகலாக பார்த்தால் இன்னும் பங்கு விலை இறங்க வாய்ப்பு உண்டு. வரப்போகும் 2020-2021 காலாண்டில் சிறப்பான முடிவுகளை தரும் பட்சத்தில் மட்டுமே உயர வாய்ப்பு உள்ளது.

[ MARCH 22, 2020 ] கேள்வி-பதில்-2

கேள்வி:
சந்தை நன்றாக இறங்கி விட்டது ஆ௧ எனது பார்வையில் தற்போது முதலீடு செய்ய  விரும்புகிறேன். தங்களின் ௧௫த்து
-மா.அமல்ராஜ்.

பதில்:
தற்போது பங்குசந்தை நிலையற்ற தன்மையில் உள்ளது. ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். பழைய உச்சத்தை தொட கொஞ்சம் நாட்களாகும். நல்ல பங்குகளை தேர்ந்தெடுங்கள் குறைவான விலையில் SIP முறையில் வாங்குங்கள். அதேசமயம் கொஞ்சம் தங்கத்திலும்( Physical OR Gold ETF/Bonds ), கொஞ்சம் மீயூச்சுவல் பண்டில் முதலீடு செய்து வாருங்கள்.
உங்கள் தேவைபோக மீதம் இருக்கும் பணத்தில் முதலீடு செய்யுங்கள். கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம்.

[ MARCH 22, 2020 ] கேள்வி-பதில் - 1

கேள்வி:
முதலீட்டுக்கான பங்குகள்?
-Selvaraj M

பதில்:
தற்போது நல்ல தரமான பங்குகளே விலை மலிவாக கிடைப்பதால் அதில் கவனம் செலுத்தலாம். உங்களுக்கான தேவைபோக மீதம் உள்ள பணத்தில் ஒரு பகுதியை பங்குசந்தையில் முதலீட்டுக்கு வைத்துக்கொள்ளலாம். கொஞ்சம் தங்கத்தில் முதலீடு செய்வதும் நலம்.

கவனம். தற்சமயம் பங்குசந்தை இறங்குவதற்கே சாதகம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் SIP முறையில்  அல்லது விலை குறைய குறைய பின்வரும் பங்குகளில் முதலீடு செய்யலாம்,

BRITANNIA
MARUTI
INFOSYS
WIPRO
ITC
HINDUSTAN UNILEVER
HDFC BANK
KOTAK BANK
BBTC
BERGER PAINTS
BATA
TITAN
TCS
ASIAN PAINTS
BAJAJFIN
ESCORTS
L&T
HCLTECH
BBTC
DABUR

குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டவை படிப்பினைக்கு மட்டுமே. நீங்கள் தங்களின் முழு ஆராய்ச்சிக்கு பிறகு; சொந்த அணுகுமுறையில் பங்குகளை வாங்கவும்.

Sunday, March 8, 2020

[ MARCH 08, 2020 ] கேள்வி-பதில்


உங்கள் சந்தேகங்கள், விருப்பங்களை கேளுங்கள்.

[ MARCH 08, 2020 ] கம்பெனி அலசல் - ITC Ltd.


அடிப்படை: நீண்டகால முதலீடு

கம்பெனி மூலதனம்: 2,31,155.41 கோடி.

தற்போதய விலை: 181.75 Rs.

வாங்க வேண்டிய விலை: 160Rs.  வரை செல்லக்கூடிய வாய்ப்பு. விலை குறைய குறைய SIP முறையில் வாங்கலாம்.

குறுகிய கால இலக்கு விலை: 250

கம்பெனி அடிப்படை:
சிகரெட், புகையிலை, விவசாயம்( Agri ), உணவு சார்ந்த பொருட்கள்( Foods ), விடுதிகள்( Hotels ), புத்தகங்கள், பேப்பர்( Papers ) பொருட்கள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம்( IT ), தீப்பெட்டி, பத்தி பெட்டி தயாரிப்பு

கடன் இல்லாத கம்பெனி.



FMCG கம்பெனியான ITC  Nifty50 ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஒரு பன்முகப்படுத்தப்பட்ட( Diversified ) நிறுவனம். வருடம் தோரும் டிவிடெண்ட் வழங்கும் கம்பெனி. கடைசியாக 22 May 2019 ல் பங்கிற்கு 5.75 Rs. டிவிடெண்ட் வழங்கியுள்ளது.


வழங்கிய டிவிடெண்ட்














பிராண்ட்ஸ்( Brands )

























கம்பெனியை பாதிக்கும் காரணிகள்: 
புகையிலை வரி உயர்வு, விவசாயம் பாதித்தல்,மூல பொருட்கள் விலை உயர்வு

வெப்சைட்:
https://www.itcportal.com/


குறிப்பு:
இந்த பதிவு Technical Analysis( பகுப்பாய்வு ) மற்றும் படிப்பினைக்கு மட்டும்.






[ MARCH 8 , 2019 ]நல்ல பங்குகளில் முதலீடு செய்வதற்கான காலம்

தற்சமயம் பங்குசந்தை குரோனா வைரஸ் பயத்தின் காரணமாக இறக்கம் கண்டுள்ளது. இந்த சூழலில் சரியான பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது புத்திசாலிதனம். மொத்தமாக அனைத்து பணத்தையும் முதலீடு செய்வதை தவிர்த்து ஒவ்வொரு இறக்கத்திலும் SIP( Systematic Investment Plan )   முறையில் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பங்குகளை வாங்கலாம். நன்றாக டிவிடெண்ட் தரக்கூடிய, திறமையாக செயல்படக்கூடிய, எதிர்காலத்தில் சிறந்து விளங்கக்கூடிய பங்குகளை பார்த்து வாங்கவும்.

பங்குசந்தை லாபம், நட்டம் என மாறுதலுக்கு உட்பட்டது.

லாபம் - நட்டம்  = நிகரலாபம் 

நிகரலாபம் நமது முதலீட்டை குறைக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நல்ல பங்குகள் எந்த சூழலையும் சந்தித்து முன்னேறி மேலே வரும்.

Thursday, February 27, 2020

[ 28-FEB-2020 ] பங்குசந்தைகளில் கொரோனாவின் தாக்கம்

கொரோனா வைரஸ் உலக அளவில் பரவ ஆரம்பித்துவிட்டதால் பங்குசந்தைகளில் பலத்த இறக்கம் காணப்படுகின்றது. இந்த நிலை இன்னும் அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனைத்து நாடுகளின் பங்குசந்தையும் கொரோனா பாதிப்புகளால் இறக்கம் காண்கின்றன.

[28-FEB-2020] ஐபிஓ - SBI Cards & Payment Services Ltd


Tuesday, February 4, 2020

[05-FEB-2020] பர்கர் கிங் இந்தியா ஐபிஓ

பர்கர் கிங் இந்தியா நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் கடந்த நவம்பரில் விண்ணப்பித்திருந்தது. அதற்கான அனுமதியை தற்போது செபி அமைப்பு அந்த நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 400 கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிட்டிருக்கிறது. வெளியீட்டில் ஆறு கோடி பங்குகளை விற்பனை செய்யவிருக்கிறது.

[ 05-FEB-2020 ] மீண்டெழுந்த பங்குசந்தை

செவ்வாய்( 04-FEB-2020 ) - பங்குசந்தையில் புதிய முதலீடு காரணமாக உயர்வு காணப்பட்டது. இதன் மூலம் பட்ஜெட் அன்று(01-FEB-2020) இறங்கிய சரிவு சரி செய்யப்பட்டது. இதே நிலை நீடிக்குமா என்பது நாட்கள் போக போகவே தெரியும்.

சென்செக்ஸ்( Sensex ) 917.07 புள்ளிகள் உயர்வு
நிப்டி( Nifty ) 271.25 புள்ளிகள் உயர்வு

Sunday, February 2, 2020

[ FEB-02-2019 ]பட்ஜெட் எதிரொலி - பங்குச் சந்தைகள் பலத்த சரிவு

சந்தையின் எதிர்பார்ப்புகளை, 'பட்ஜெட்' நிறைவேற்றவில்லை என்ற கோணத்தில், பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால், நேற்று பங்குச் சந்தைகள் பலத்த சரிவை சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையின், 'நிப்டி' 300.25 புள்ளிகள் சரிவை கண்டது. மும்பை பங்குச் சந்தையின், 'சென்செக்ஸ்' 988 புள்ளிகள் சரிந்து, 40 ஆயிரம் புள்ளிகள் என்ற அடையாள நிலையிலிருந்து குறைந்தது.

Tuesday, January 28, 2020

[ 29-JAN-2020 ] பங்குசந்தை தொடர் சரிவு

சீனாவில், ‘கொரோனா வைரஸ்’ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதை தொடர்ந்து, பங்குசந்தை தொடர் சரிவு . 

சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு நீடித்து வரும் நிலையில், அதன் காரணமாக, உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தால், உலகின் பல சந்தைகளில், அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டன. 
இதன் பாதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது.

பிப்ரவரி 1ல் பட்ஜெட் நிகழ்வு இருப்பதால், இனி பங்குசந்தையின் செயல்பாடுகள் அதனை மைய்யப்படுத்தியே இருக்கும்.

பங்குசந்தையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா பட்ஜெட்..?!
உலக நடப்புகள் மற்றும் பட்ஜெட் இரண்டும் நன்றாக இருக்கும்பட்சத்தில் பங்குசந்தை ஏறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.  அப்படி இல்லையெனில் பங்குசந்தையின் உயர்வு சாதாரணமானதாகவே இருக்கும். பார்க்கலாம்.

2020ல் பங்குசந்தையின் போக்கை மாற்றக்கூடிய  தெரிந்த காரணிகள்,
‘கொரோனா வைரஸ்’
2020 பட்ஜெட்
அமெரிக்கா தேர்தல்
அமெரிக்கா-சீனா பொருளாதார மோதல்கள்