Tuesday, January 28, 2020

[ 29-JAN-2020 ] பங்குசந்தை தொடர் சரிவு

சீனாவில், ‘கொரோனா வைரஸ்’ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதை தொடர்ந்து, பங்குசந்தை தொடர் சரிவு . 

சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு நீடித்து வரும் நிலையில், அதன் காரணமாக, உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தால், உலகின் பல சந்தைகளில், அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டன. 
இதன் பாதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது.

பிப்ரவரி 1ல் பட்ஜெட் நிகழ்வு இருப்பதால், இனி பங்குசந்தையின் செயல்பாடுகள் அதனை மைய்யப்படுத்தியே இருக்கும்.

பங்குசந்தையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா பட்ஜெட்..?!
உலக நடப்புகள் மற்றும் பட்ஜெட் இரண்டும் நன்றாக இருக்கும்பட்சத்தில் பங்குசந்தை ஏறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.  அப்படி இல்லையெனில் பங்குசந்தையின் உயர்வு சாதாரணமானதாகவே இருக்கும். பார்க்கலாம்.

2020ல் பங்குசந்தையின் போக்கை மாற்றக்கூடிய  தெரிந்த காரணிகள்,
‘கொரோனா வைரஸ்’
2020 பட்ஜெட்
அமெரிக்கா தேர்தல்
அமெரிக்கா-சீனா பொருளாதார மோதல்கள்


No comments:

Post a Comment