Sunday, August 23, 2020

[ Aug 23, 2020 ] கேள்வி பதில் 7 - தினசரி வர்த்தகத்தில்..

கேள்வி:

(Intraday) வில் டிரேடிங் செய்யும் பொழுது கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை பற்றி எடுத்துரையுங்களேன்.

-இளவரசன்

பதில்:

 தினசரி வர்த்தகத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியது,

- பங்கு குறிப்பிட்ட ஸ்டாப் லாஸ்( Stop Loss) விலைக்கு கீழ் செல்லும் போது நஷ்டத்தை குறைந்த அளவோடு புக் செய்து வெளிவரவேண்டும். இது மேலும் நஷ்டம் அடையாமல் இருக்க உதவும். நீங்கள் எவ்வளவு நஷ்டத்தை சமாளிக்கமுடியுமோ அதையே நீங்கள் ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக்கொள்ளலாம். 

- நீங்கள் எதிர்பார்க்கும் விலை வந்தவுடன் லாபத்தை பதிவு செய்துவிட்டு வெளிவரவேண்டும். அதித ஆசையின் காரணமாக மேலும் எதிர்பாத்தால் நஷ்டம் உண்டாக வாய்ப்பு அதிகம்.

-தினசரி வர்த்கத்திற்கு உங்கள் புரோக்கர் வசூல் செய்யும் கட்டணத்தையும் கவனத்தில் கொள்க.

-அதிக வால்யும்( volume ) உள்ள பங்குகள் தினசரி வர்த்தகத்திற்கு உகந்தது. உதாரணமாக Reliance Industries.

-முந்தய விலையை உடைத்துக்கொண்டு செல்லும்,  52 வார விலையை உடைத்துக்கொண்டு செல்லும்( Breakout stocks ) பங்குகளும் தினசரி வர்த்தகத்திற்கு உகந்தது.

- சார்ட், சார்ட் டூல்ஸ்( RSI, bollinger band, DMA, EMA) போன்றவற்றை உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment