Zeel and ibuhfin share வாங்கலாமா?
-கோபி அ
பதில்:
தற்போது ZEEL. வாங்க வேண்டிய விலை ரூ.130 அதற்க்கு கீழ். விலை குறைய குறைய கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்.
கேள்வி:
Sib முறையில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்து வருகிறேன் (sbi blue chip fund dir-pln G) தற்சமயம் nav விலை குறைவாக உள்ளதால் (பெரிய அளவில் முதலீடு செய்து nav வாங்கலாமா? எதிர்காலத்திற்கு.
-பாபு
பதில்:
பங்குசந்தை இன்னும் தள்ளாட்டத்தில்தான் உள்ளது. பங்குசந்தை குறைய குறைய வாங்கலாம்.
நினைவில் கொள்க - மியூட்சுவல் பண்டில் நீங்கள் எதிர்பார்த்த லாபம்( gain of 10%, 15%, 20% ..etc ) வந்ததும் விற்று லாபம் பார்க்கவும் ( பங்குசந்தை உச்சத்தில் இருக்கும் போது ). NAV குறைவாக இருக்கும் போது மீண்டும் வாங்குங்கள். பங்கில் முதலீடு செய்பவருக்கும் மியூட்சுவல் பண்டில் இருப்பவருக்கும் இது பொருந்தும். லாபத்தை பதிவு செய்வதில் ஏதும் தவறில்லை.
நாம் செய்யும் பொதுவான தவறு இன்னும் மேலே போகும் மேலே போகும் என எதிர்பார்பதுதான். பங்குசந்தையில் தினமும் ஏற்றம் இறக்கம் தான். நாம் நம்முடைய இலக்கை நாமே நிர்ணயித்து அங்கே லாபம் பார்த்து விட வேண்டும்.
No comments:
Post a Comment