Monday, April 6, 2020

[ APR 07, 2020 ]யார் இந்த ஷார்ட் செல்லர்ஸ்?( Short Sellers )


பங்குகள் இறங்குமென நினைத்து  முன் கூட்டியே பங்குகளை விற்று, பின் விழுந்தவுடன் அதே பங்குகளை வாங்கி லாபம் பார்ப்பவர்கள்.

உதாரணத்திற்கு இன்று ரிலையன்ஸ் பங்குகள் 1000 ரூபாய்க்கு கீழே இறங்கும் என கணித்து ரிலையன்ஸ் பங்குகளை 1000 ரூபாய்க்கு விற்று( உதாரணமாக 100 பங்குகள் ) அது 900 க்கு வரும் போது உயர போகிறது என கணித்து அதே ரிலையன்ஸ் பங்குகளை 900 ரூபாய்க்கு வாங்குபவர்கள்..

100 பங்குகள் x 1000 ரூ= 100000 ரூ( விற்ற விலை )
100 பங்குகள் x 900 ரூ=     90000 ரூ( வாங்கிய விலை )
100000 - 90000 = 10000 ரூபாய்( லாபம் )

No comments:

Post a Comment