Saturday, May 23, 2020

[ May 23, 2020 ] கேள்வி-பதில்-4

கேள்வி:
முதலீட்டுக்கான பங்குகள்?
- Selvaraj M

How to use share market?
-Nirmal Kumar

புதுசா பங்கு சந்தை இடுபட உள்ளேன்... எவ்வித பங்குகளை வாங்குவது
-சரஸ்வதி

பதில்-4
முதலீட்டுக்கான பங்குகள் நிறைய உள்ளன.தற்சமயம் நிப்டி 50 ல் உள்ள நல்ல பங்குகளை குறைந்த விலைக்கு வரும் போது வாங்குங்கள். தற்போது குறைந்த விலையில் பல நல்ல பங்குகள் உள்ளன. நீண்ட கால அடிப்படையில் நல்ல பலனை தரும். நீண்ட காலம் என்பதை விட எவ்வளவு லாபம் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ( உதாரணத்திற்கு 10%, 15% ) அந்த லாபம் வந்தவுடன் பங்கை விற்று லாபம் பாருங்கள். அந்த பங்கு மீண்டும் குறைந்த விலைக்கு வரும் போது மீண்டும் வாங்குங்கள். நல்ல டிவிடெண்ட்( dividend ) வழங்கும் கம்பெனிகளை கண்டுபிடியுங்கள்( உதாரணத்திற்கு ITC ) அதில் நீண்டகால முதலீடு செய்யுங்கள். கொஞ்சம் தங்கம்( GOLD ETF ), மியூட்சுவல் பண்டிலும்( Mutual Funds ), Bank FD முதலீடு செய்யுங்கள். ஒரே இடத்தில் அனைத்தையும் போட்டு வேடிக்கைபார்ப்பதை விட இப்படி பிரித்து முதலீடு செய்ய லாபம் கிட்டும். பங்குசந்தை குறைந்தால் தங்கம் உயரும். குறைந்த பட்ச வட்டி BANK FDல் கிடைக்கும்.

பின்வரும் பங்குகளை விலை குறைய குறைய வாங்குங்கள். உங்களுக்கு தேவையான லாபம் வந்ததும் விற்று லாபம் பாருங்கள். விலை குறைகின்றதே என வருத்தபட வேண்டாம். உங்களுக்கு தேவையான லாபம் வரும் வரை பொருமையாக இருங்கள். விலை குறைந்து கொண்டே செல்வதை பார்த்து குழம்ப வேண்டாம். முடிந்தால் விலை குறைய குறைய வாங்குங்கள். நல்ல பங்குகள் எந்க காலத்திலும் மீண்டு வரும்.

கொரோனா பாதிப்பினால் பங்குகளின் விலை ஏற்றம் இறக்கமாகதான் இருக்கும் சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு. உங்களுடைய அதித பணத்தை மட்டும் பங்குசந்தையில் முதலீடு செய்யவும். 

HDFC BANK ரூ.800 க்கு கீழ்
INFOSYS ரூ.650 க்கு கீழ்
ITC, DABUR, HCL TECH,BRITANIA,
HINDUSTAN UNILEVER,
L&TFH ரூ.45-51
BBTC < 750.

இன்னும் நிறைய உள்ளன நீங்களும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்களேன்..
நல்ல கம்பெனிகளை 'கம்பெனி அலசல்' பகுதியில் பதிவிடுவோம். பாருங்கள்.எல்லாபதிவுகளும் படிப்பினைக்காகவே.


சந்தை நன்றாக இறங்கி விட்டது ஆ௧ எனது பார்வையில் தற்போது முதலீடு செய்ய விரும்புகிறேன். தங்களின் ௧௫த்து
-மா.அமல்ராஜ்

Can I start my trade investment right time this
-Dhanasekar

தற்சமயம் வரை கொரோனா பாதிப்புகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. நம் பங்கு சந்தையில் பெரும் பகுதி வெளிநாட்டவர் முதலீடு சார்ந்தது. தற்சமயம் கொரோனா பாதிப்பால் அவர்கள் முதலீடு செய்த பணத்தை எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதையெல்லாம் வைத்து பார்த்தால் ஏற்றத்திற்கான காலம் கொஞ்சம் தாமதமாகும். நல்ல பங்குகளை விலை குறைய குறைய வாங்கி வாருங்கள்...


No comments:

Post a Comment