Monday, November 8, 2021

[08Nov2021] தீபாவளி 2020 - 2021 பங்குகள் தற்போதய நிலை

முந்தைய பதிவின் லிங்க்..

https://indianstockmarketintamil.blogspot.com/2020/11/nov-14-2020-2021.html


நிறுவனம்

2020 தீபாவளி விலை

தீபாவளி 2021 விலை

( 04-Nov-2021 )

GICRE

Best at below< 100 Rs.

126.65 Rs.

எதிர்பார்ப்பது: 160+

 137.80 Rs.

Ø   8% லாபம்.

Ashok Leyland

Best at below <75 Rs.

90.55 Rs.

எதிர்பார்ப்பது: 100+

 144.95 Rs.

Ø   60% லாபம்.

Wipro

Best at Below <300 Rs.

344.15 Rs.

எதிர்பார்ப்பது:400+

 653.70 Rs.

Ø   89% லாபம்.

L&T Finance Holdings Ltd

Best at < 60 Rs.

70.05 Rs.

எதிர்பார்ப்பது:100+

 85.30 Rs.

Ø   21% லாபம்.

Bharti Airtel

Best at Below < 400 Rs.

475.75 Rs.

எதிர்பார்ப்பது:550+

 701.10 Rs.

Ø   47%லாபம்.

ABCapital

Best at Below <= 68 Rs.

76.90 Rs.

எதிர்பார்ப்பது:100+

 105.40 Rs.

Ø   37% லாபம்.

Tata Coffee <= 90 Rs.

102.15 Rs.

எதிர்பார்ப்பது:120+

 215.85 Rs.

Ø   111% லாபம்.        


மேற்கூறிய அனைத்து பங்குகள் தகவல்கள் முடித்துக்கொள்ளப்பட்டது. 

( Call Closed. )




Thursday, October 28, 2021

[29OCT2021] ‘PAYTM’ புதிய பங்கு வெளியீடு( IPO )


‘PAYTM’ எனும் பிராண்டு பெயரில், நிதி தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் ‘ஒன்நைன்செவன் கம்யூனிகேஷன்’ நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஒரு பங்கின் விலை 2,080 – 2150 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஒரு பங்கின் முக மதிப்பு 1 ரூபாய் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

Thursday, August 19, 2021

[Aug19,2021] மெட்பிளஸ் IPO

சில்லரை மருந்து விற்பனை நிறுவனமான, ‘மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்து உள்ளது. மெட்பிளஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,639 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் போது, 600/- கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், மீதி தொகைக்கு நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. 

Monday, July 5, 2021

[06July2021]'ஸோமாட்டோ’ புதிய பங்கு வெளியீட்டு அனுமதி

நாம் முன்பதிவில் எதிர்பார்த்தபடி ஆன்லைன்’ உணவு வினியோக நிறுவனமான ‘ஸோமாட்டோ’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.

விரைவில் 'ZOMATO IPO' எதிர்பார்க்கலாம்..

Tuesday, June 8, 2021

[9June2021] பிர்லா குருப் கம்பெனிகள்

முந்தைய பதிவில் டாடா குருப் கம்பெனிகளை பற்றி பார்த்தோம். இந்த பதிவில் பிர்லா குருப் கம்பெனிகளைப் பற்றி பார்க்கலாம். பின் வருவவை பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட பிர்லா குருப் கம்பெனிகளாகும். இது தவிர பட்டியலிடப்படாத பல கம்பெனிகள் இந்த குருப்பில் உள்ளன.

ஆதித்ய பிர்லா

Ultratech cement 6790.3 Rs.

Vodafone Idea Ltd( earlier Idea ) 10.05 Rs.

Hindalco Industries Ltd. 387.65 Rs.

Grasim Industries 1503.85 Rs.

Aditya Birla Fashion and Retail Ltd 205.7 Rs.

Tanfac Industries Ltd 242. Rs.

Aditya Birla Money Ltd 56.7 Rs.

Aditya Birla Capital Ltd 123.85 Rs.

CK பிர்லா

Orient Cement 139.8 Rs.

Orient Electric 304.5 Rs.

Orient Paper 27.7 Rs. 

Birlasoft 376 Rs.

HIL Ltd 4750 Rs.

( Prices are as on June 08, 2021 market close )

Monday, May 31, 2021

[31May2021]பிரேக்அவுட் பங்குகள்( Breakout Stocks )


தனது முந்தைய பல பல ஆண்டுகள் உச்ச பட்சவிலையை உடைத்துக்கொண்டு புதிய உச்சத்தை தொட்ட பங்குகள் பிரேக்அவுட் பங்குகள் எனப்படும். அப்படியான ஒரு பங்கைத்தான் இப்பதிவில் பார்க்கப் போகின்றோம்.

Sundram Fasteners Limited டிவிஎஸ் குழுமத்தின் ஒரு பகுதியாகும். 1966 ம் ஆண்டு துவங்கப்பட்டது. நீர் விசையியக்கக் குழாய்கள், ரேடியேட்டர் மூடிகள், விமான ,காற்றாலை, மின்சார மோட்டார்கள், மோட்டார் வாகனங்கள் தொடர்பாக Fastners( இணைப்பான்கள் ) தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.



 கம்பெனி மூலதனம். ₹ 16,596 Cr.

தற்போதய விலை:791ரூ

விலை குறைந்தால் வாங்கவேண்டிய விலை: 565-650ரூ

இலக்கு: 950+ரூ

( முற்றிலும் படிப்பினைக்கானது. )


[31May2021] புதிய உச்சத்தில் பங்கு சந்தை

புதிய உச்சத்தில் பங்கு சந்தை நிப்டி 15582.80 புள்ளிகளுடன் நிறைவு. இன்று பங்கு சந்தை புதிய உச்சத்தை தொட்டது. கோரோனா இரண்டாம் அலை குறைய தொடங்கிய செய்திகளில் பங்கு சந்தைகளில் உயர்வு ஏற்ப்பட்டது. மேலும் புதிய நல்ல செய்திகள் வரும் பட்சத்தில் உயர வாய்ப்புள்ளது. அப்படி இல்லையெனில் சாதாரண ஏற்ற இறக்கமே காணப்படும். பல பங்குகள் உச்சபட்ச விலையில் வர்த்தகமாகின்றன. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து வாங்குவதே இச்சமயத்தில் பலன் கொடுக்கும். 

நாளை ஐடிசி( இன்று 1 பங்கு 216.60 ரூபாய் ) நிறுவனம் தனது காலாண்டு முடிவை அறிவிக்க உள்ளது. இதன் முடிவுகளைப் பொருத்து இந்த பங்கின் ஏற்றம் இறக்கம் இருக்கும்.

Monday, May 17, 2021

[ 17MAY2021 ] தமிழ் பங்குசந்தை ஆன்ராய்டு அப்ளிகேஷன் போர்ட்போலியோவில்

படிப்பினைக்கான தமிழ் பங்குசந்தை ஆன்ராய்டு அப்ளிகேஷன் போர்ட்போலியோவில் இன்று லாபம் புக் செய்யப்பட்டது.

போர்ட்போலியோ விற்கப்பட்ட பங்குகள்
எண்கம்பெனிமொத்த வாங்கிய விலைவாங்கிய தேதிமொத்த விற்ற விலை விற்ற தேதி லாபம்
1COCHIN SHIPYARD LTD35000.00 ரூ.25MAR202140000.00 ரூ.17MAY20215000.00
2SDBL29600.00 ரூ.13APR202139650.00 ரூ.17MAY202110050.00


லாபம்:15050 Rs.

 
ஆன்ராய்டு அப்ளிகேஷன் லிங்க்:

Tuesday, April 20, 2021

[20 APR 2021]டாடா பிர்லா ஆகலாமா??


படிப்பினைக்கான பார்வை..

நீ என்ன பெரிய டாடா பிர்லாவா என பல இடங்களில் நாம் பேச கண்டிருக்கின்றோம். அவர்களை போல பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அவர்களுடைய குருப் ஆப் கம்பெனிகளில் முதலீடு செய்து அவர்களுடன் நாமும் உயரலாம். 

அப்படி நாம் பார்க்க இருப்பதுதான் டாடா குருப் ஆப் கம்பெனிஸ்...பிர்லாவை பின்னொறு பதிவில் பார்க்கலாம்.. 

 இந்த முதலாம் கொரோனா பாதிப்பில் டாடா குருப்பின் பங்குகள் பாதி விலைக்கு கீழ் கிடைத்தன. அப்போது வாங்கியவர்கள் தற்போது 50 ம் மேல் லாபத்தில் உள்ளனர். உதாரணமாக 30 மார்ச் 2020 அன்று டாடா மோட்டார்ஸ் பங்குகள் 64.80 ரூ வரை சென்றது. இன்றைய விலை 298.05 ரூ!! (எப்ரல் 20 2021) 

கம்பெனி பற்றி
டாடா  மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். 1868 ஆம் ஆண்டில் ஜாம்ஷெட்ஜி டாடாவால் நிறுவப்பட்ட இந்நிறுவனம் பல உலகளாவிய நிறுவனங்களை வாங்கிய பின்னர் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது. இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான தொழில்துறை குழுக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு டாடா நிறுவனமும் அதன் சொந்த இயக்குநர்கள் குழு மற்றும் பங்குதாரர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் சுயாதீனமாக இயங்குகின்றன.

ஒன்றே ஒன்று நாம் செய்ய வேண்டியது எப்பொழுதெல்லாம் இந்த கம்பெனி பங்குகள் குறைந்த விலைக்கு வருகின்றதோ அப்போது வாங்கி அல்லது SIP முறையில் முதலீடு செய்து வரலாம்.



பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட டாடாவின் கம்பெனிகள், 
  • Tata Consultancy Services Limited,
  • Tata Steel Limited,
  • Tata Motors Limited,
  • Titan Company Limited, 
  • Tata Chemicals Limited, 
  • The Tata Power Company Limited, 
  • The Indian Hotels Company Limited, 
  • Tata Consumer Products Limited,
  • Tata Communications Limited, 
  • Voltas Limited, 
  • Trent Limited, 
  • Tata Sponge Iron Limited,
  • Tata Investment Corporation Limited,
  • Tata Metaliks Limited,
  • Tata Elxsi Limited, 
  • Nelco Limited, 
  • Tata Coffee Limited 
பங்குசந்தையில் பட்டியலிடப்படாத டாடா குருப்ன் கம்பெனிகள்,இவைகள் பங்கு சந்தைக்கு வந்தாலும் ஆர்ச்சரியப்படுவதிற்கில்லை. 
  • Tata Cliq, 
  • Tata Projects Limited, 
  • Tata Capital, 
  • TajAir, 
  • Vistara, 
  • Cromā, 
  • Tata Starbucks.
Tata Sons Private Limited
டாடா குழுமத்தின் முதன்மை ஹோல்டிங்( Holding ) நிறுவனமாக டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளது.

Monday, April 19, 2021

[APR 19, 2021 ] ஐடிசி ஆன்லைன்னில்..

 ஐடிசி( ITC Ltd ) நிறுவனம் தனது பொருட்களை ஆன்லைன்னில் விற்பனை செய்ய https://www.itcstore.in/ என்னும் வெப்சைட்டை துவக்கியுள்ளது.

ஐடிசியின் தயாரிப்புகள் அனைத்தையும் ஆன்லைனில் ஆடர் செய்து வாங்கி கொள்ளலாம்..

Sunday, April 18, 2021

[APR 19, 2021] NFL & RCF விற்பனை செய்ய திட்டம்

 மத்திய அரசு, தன் வசம் இருக்கும், என்.எப்.எல்., என அழைக்கப்படும், 'நேஷனல் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட்' (NFL)நிறுவனத்தின் பங்குகளில், 20 சதவீதத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும், ஆர்.சி.எப்., எனும், 'ராஷ்ட்ரியா கெமிக்கல்ஸ் அண்டு பெர்ட்டிலைசர்ஸ்' (RCF)நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகளையும், இந்த நிதியாண்டுக்குள் விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Monday, April 12, 2021

[ APR 12, 2021 ] கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பங்கு சந்தயிலும்..

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக பங்கு சந்தை வலுவிழந்து காணப்படுகின்றது. மாநிலங்களுக்கிடையேயான லாக் டவுன் அறிவிப்புகள், கொரோனா எண்ணிக்கை உயர்வு செய்திகள் பங்கு சந்தையையும் பாதிக்கின்றன. இன்று நிப்டி 524 புள்ளிகள் குறைந்து( 3.5 சதவீதம் ) வர்த்கமாகின. கொரேனா காரணமாகவும், தேவை காரணமாகவும் பார்மா சார்ந்த சில பங்குகள் மட்டுமே விலை உயர்ந்து காணப்பட்டன.

Sunday, February 21, 2021

[Feb 22, 2021 ]குறுகிய கால இலக்கு-2020_#02 ( இலக்கை எட்டியது. )

 தமிழ் பங்குசந்தை படிப்பினை கணிப்பு

குறுகிய கால இலக்கு-2020_#02இலக்கை எட்டியது.

பங்கு

Jagran Prakashan Limited

CMP 44Rs.(Dec-07-2020)

இலக்கு விலை

52

கால அவகாசம்

மாதங்கள்

தற்போதய நலைப்பாடு

Call CLOSED

இலக்கை எட்டியது( Feb-22, 2021 ).இன்றைய உச்சபட்ச விலை 57.8 ரூ.

ஒரு பங்கிற்கு  8ரூ. க்கு மேல் லாபம். 18% லாபம்.1000 பங்குகள் 44000 ரூபாய்க்கு வாங்கிருந்தால் 8000 ரூ. லாபம்.

தகவல் முடித்துக்கொள்ளப்பட்டது.

முற்றிலும் படிப்பினைக்கானது. ஸ்டாப் லாஸ்(stoploss) குறிப்பிடபடவில்லை. நீங்கள் உங்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ஹப்ப ஸ்டாப் லாஸ் விலையை வரையறுத்துக்கொள்ளவும்.

நன்றி. தமிழ்பங்குசந்தை.