Monday, May 25, 2020

[ MAY 25, 2020 ] NIFTYBEESல் முதலீடு??!!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நிப்டி இன்டெக்ஸ்ல் (நிப்டி 50 கம்பெனிகளில்) முதலீடு செய்ய விருப்பமா?அதற்கான வழிதான் இந்த NIFTYBEES. இது ஒரு ETF( Exchange Traded Fund ) ஆகும். ஏப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் விற்கலாம்.

பங்கு சந்தை இறங்கும் போது NIFTYBEES ல் முதலீடு செய்யலாம். இதன் விலை நிப்டி இன்டெக்ஸ் ஏற்ற இறக்கத்தைப் பொருத்து ஏறும்,இறங்கும். 140 ரூபாய் வரை ( நிப்டி 12000 புள்ளிகளுக்கு மேல் இருந்த போது )சென்ற இந்த ETF தற்போது 96 ரூபாயில் உள்ளது. தற்போது  நிப்டி 9000 புள்ளிகளுடன் உள்ளது. மறுபடியும் நிப்டி 12000 புள்ளிகளுக்கு மேலே செல்லும் போது இதுவும் உயரும்.

நிப்டி இன்டெக்ஸ் இறங்க இறங்க SIP ( Systematic Investment Plan )முறையில் வாங்கி வந்தால் நிப்டி இன்டெக்ஸ் உயரும் போது விற்று லாபம் பார்க்கலாம்.

NIFTY50 பங்குகள்











சார்ட்:


மஞ்சள் கலர்: Nifty 50
சிவப்பு கலர்: NIFTYBEES

Saturday, May 23, 2020

[ May 23, 2020 ] கேள்வி-பதில்-6

கேள்வி:
Zeel and ibuhfin share வாங்கலாமா?
-கோபி அ

பதில்:
தற்போது ZEEL. வாங்க வேண்டிய விலை ரூ.130 அதற்க்கு கீழ். விலை குறைய குறைய கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்.

கேள்வி:
Sib முறையில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்து வருகிறேன் (sbi blue chip fund dir-pln G) தற்சமயம் nav விலை குறைவாக உள்ளதால் (பெரிய அளவில் முதலீடு செய்து nav வாங்கலாமா? எதிர்காலத்திற்கு.
-பாபு

பதில்:
பங்குசந்தை இன்னும் தள்ளாட்டத்தில்தான் உள்ளது. பங்குசந்தை குறைய குறைய வாங்கலாம்.

நினைவில் கொள்க - மியூட்சுவல் பண்டில் நீங்கள் எதிர்பார்த்த லாபம்( gain of 10%, 15%, 20% ..etc ) வந்ததும் விற்று லாபம் பார்க்கவும் ( பங்குசந்தை உச்சத்தில் இருக்கும் போது ). NAV குறைவாக இருக்கும் போது மீண்டும் வாங்குங்கள். பங்கில் முதலீடு செய்பவருக்கும் மியூட்சுவல் பண்டில் இருப்பவருக்கும் இது பொருந்தும். லாபத்தை பதிவு செய்வதில் ஏதும் தவறில்லை.

நாம் செய்யும் பொதுவான தவறு இன்னும் மேலே போகும் மேலே போகும் என எதிர்பார்பதுதான். பங்குசந்தையில் தினமும் ஏற்றம் இறக்கம் தான். நாம் நம்முடைய இலக்கை நாமே நிர்ணயித்து அங்கே லாபம் பார்த்து விட வேண்டும்.



[ May 23, 2020 ] கேள்வி-பதில்-5

கேள்வி:
பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி, எந்த வகை பங்குகளை வாங்குவது சிறந்தது?
-Santhosh kumar

Demat account தொடங்கும் வழிமுறை என்ன?
-PONRAJA GOPAL S

Share market தொடங்குவது எப்படி ?தொடங்க எது வேண்டும்?
-Vijaya kumar


பதில்:
பங்கு சந்தையில் முதலீடு செய்ய உங்களுக்கு டிமெட்(DEMAT) அக்கவுண்ட் (account )வேண்டும். அத்தோடு ஆன்லைன் டிரேடிங் அக்கவுண்டும் உருவாக்கப்படும். 

இவற்றை பின்வரும் உதாரண புரோக்கிங் கம்பெனிகள்( broking companies/ brokers ) மூலம் நீங்கள் பெறலாம்.அவர்களை தொலைபேசியில் அழைத்தால் உங்களுக்கு உதவுவர்.



-உங்கள் கணக்கு உருவாக்கப்பட்டவுடன் நீங்கள் பங்குகளை வாங்கலாம் விற்கலாம். பங்குகளை வாங்கும் போதும் விற்க்கும் போதும் கமிசன்( commission ) தொகையை பிடித்துக்கொள்வார்கள். இந்த கமிசன் தொகை ஒவ்வொரு புரோக்கிங் கம்பெனிகளுக்கு ஏற்ப மாறுபடும்.

எந்த வகை பங்குகளை வாங்குவது சிறந்தது?
இதற்க்கு முன் கூறிய கேள்வி பதிலை பாருங்கள்.

[ May 23, 2020 ] கேள்வி-பதில்-4

கேள்வி:
முதலீட்டுக்கான பங்குகள்?
- Selvaraj M

How to use share market?
-Nirmal Kumar

புதுசா பங்கு சந்தை இடுபட உள்ளேன்... எவ்வித பங்குகளை வாங்குவது
-சரஸ்வதி

பதில்-4
முதலீட்டுக்கான பங்குகள் நிறைய உள்ளன.தற்சமயம் நிப்டி 50 ல் உள்ள நல்ல பங்குகளை குறைந்த விலைக்கு வரும் போது வாங்குங்கள். தற்போது குறைந்த விலையில் பல நல்ல பங்குகள் உள்ளன. நீண்ட கால அடிப்படையில் நல்ல பலனை தரும். நீண்ட காலம் என்பதை விட எவ்வளவு லாபம் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ( உதாரணத்திற்கு 10%, 15% ) அந்த லாபம் வந்தவுடன் பங்கை விற்று லாபம் பாருங்கள். அந்த பங்கு மீண்டும் குறைந்த விலைக்கு வரும் போது மீண்டும் வாங்குங்கள். நல்ல டிவிடெண்ட்( dividend ) வழங்கும் கம்பெனிகளை கண்டுபிடியுங்கள்( உதாரணத்திற்கு ITC ) அதில் நீண்டகால முதலீடு செய்யுங்கள். கொஞ்சம் தங்கம்( GOLD ETF ), மியூட்சுவல் பண்டிலும்( Mutual Funds ), Bank FD முதலீடு செய்யுங்கள். ஒரே இடத்தில் அனைத்தையும் போட்டு வேடிக்கைபார்ப்பதை விட இப்படி பிரித்து முதலீடு செய்ய லாபம் கிட்டும். பங்குசந்தை குறைந்தால் தங்கம் உயரும். குறைந்த பட்ச வட்டி BANK FDல் கிடைக்கும்.

பின்வரும் பங்குகளை விலை குறைய குறைய வாங்குங்கள். உங்களுக்கு தேவையான லாபம் வந்ததும் விற்று லாபம் பாருங்கள். விலை குறைகின்றதே என வருத்தபட வேண்டாம். உங்களுக்கு தேவையான லாபம் வரும் வரை பொருமையாக இருங்கள். விலை குறைந்து கொண்டே செல்வதை பார்த்து குழம்ப வேண்டாம். முடிந்தால் விலை குறைய குறைய வாங்குங்கள். நல்ல பங்குகள் எந்க காலத்திலும் மீண்டு வரும்.

கொரோனா பாதிப்பினால் பங்குகளின் விலை ஏற்றம் இறக்கமாகதான் இருக்கும் சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு. உங்களுடைய அதித பணத்தை மட்டும் பங்குசந்தையில் முதலீடு செய்யவும். 

HDFC BANK ரூ.800 க்கு கீழ்
INFOSYS ரூ.650 க்கு கீழ்
ITC, DABUR, HCL TECH,BRITANIA,
HINDUSTAN UNILEVER,
L&TFH ரூ.45-51
BBTC < 750.

இன்னும் நிறைய உள்ளன நீங்களும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்களேன்..
நல்ல கம்பெனிகளை 'கம்பெனி அலசல்' பகுதியில் பதிவிடுவோம். பாருங்கள்.எல்லாபதிவுகளும் படிப்பினைக்காகவே.


சந்தை நன்றாக இறங்கி விட்டது ஆ௧ எனது பார்வையில் தற்போது முதலீடு செய்ய விரும்புகிறேன். தங்களின் ௧௫த்து
-மா.அமல்ராஜ்

Can I start my trade investment right time this
-Dhanasekar

தற்சமயம் வரை கொரோனா பாதிப்புகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. நம் பங்கு சந்தையில் பெரும் பகுதி வெளிநாட்டவர் முதலீடு சார்ந்தது. தற்சமயம் கொரோனா பாதிப்பால் அவர்கள் முதலீடு செய்த பணத்தை எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதையெல்லாம் வைத்து பார்த்தால் ஏற்றத்திற்கான காலம் கொஞ்சம் தாமதமாகும். நல்ல பங்குகளை விலை குறைய குறைய வாங்கி வாருங்கள்...


Sunday, May 10, 2020

[ May 11, 2020 ] கொரோனா பாதிப்புகளுக்கிடையே நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன


  • Titan to reopen 50 Tanishq stores by May 10.
  • VST Tillers has resumed its manufacturing operation.
  • Nocil limited has partially resumed the manufacturing operations.
  • PPAP automotive has resumed operations at its Tamilnadu facility.


டைட்டன்( Titan ) -  50 டானிஷ்க் கடைகளை மே 10 க்குள் மீண்டும் திறக்க உள்ளது.

விஎஸ்டி டில்லர்ஸ்( VST Tillers ) அதன் உற்பத்தி நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளது.

நோசில் லிமிடெட் ( Nocil Limited )ஓரளவு உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

பிபிஏபி ஆட்டோமோட்டிவ்( PPAP Automotive ) தனது தமிழ்நாடு கிளையில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.