Sunday, March 26, 2017

மார்கெட் பிட்ஸ்

பேலன்ஸ்டு ஃபண்டுகளில் டாப் 10 ஃபண்டுகள், கடந்த ஓராண்டு காலத்தில்(20016) 22 முதல் 27% வரை வருமானம் அளித்திருக்கின்றன.

இந்தியா சிமென்ட்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், அமரராஜா பேட்டரீஸ்,  செஞ்சுரி ப்ளைபோர்ட்ஸ் போன்ற நிறுவனங்களில், நிறுவனர்களின் பங்கு அடமானம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான டிவிஸ் லேப்ஸ்( Divi's Lab ) நிறுவனத்தின் விசாகபட்டினம் ஆலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்டிஏ) நடத்திய சோதனைக்குப் பின்னர், அதன் தரக் கட்டுப்பாடு குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளது. தரமான உற்பத்திக்கான செயல்முறைகளை மீறியுள்ளதாகவும் அது கூறியுள்ளது. மேலும், அமெரிக்காவில் அதன் மருந்துகளை விற்கத் தடை விதித்துள்ளது. இந்த விசாகபட்டினம் ஆலை மூலம்தான் இந்த நிறுவனத்தின் 70 சதவிகித வருமானம் வருகிறது. இந்த நிலையில், எஃப்டிஏ விதித்துள்ள தடையால் டிவிஸ் லேப்ஸ்( Divi's Lab ) பங்கு விலை, கடந்த செவ்வாய் அன்று ஒரே நாளில் 20% குறைந்ததுடன், 52 வார குறைந்தபட்ச விலையையும் தொட்டது. இந்தத் தடை நடவடிக்கை, இந்த நிறுவனத்தின் 25 சதவிகித வருவாயைப் பாதிக்கும் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.1,100 கோடி நிதி

பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 2015-16-ம் நிதியாண்டில் ரூ.2,897 கோடி நிகர நஷ்டம் அடைந்துள்ளது. இந்த நிலையில், தனது செயல்பாடுகளைத் தொடர்வதற்கு போதுமான நிதி இந்த வங்கியிடம் இல்லாத காரணத்தால், தற்போது அதன் நிதி நிலைமையைச் சீரமைக்க, நிதி அமைச்சகம் ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்துள்ளது.

வங்கியின் செயல்பாடு சரியாக இல்லை என்பதே தற்போதய செய்தி

Monday, March 20, 2017

ஐபிஓ - சங்கரா பில்டிங் புராடக்ட்ஸ்

கர்­நா­டக மாநி­லம், பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த, சங்­கரா பில்­டிங் புரா­டக்ட்ஸ், பங்­கு­களை வெளி­யிட்டு, 345 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது.

தொழில்: கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுப் பொருள்கள் விற்பனை
விலை: ரூ.440 முதல் 460
விற்பனை நாள்கள்: மார்ச் 22 - 24
பங்குகள் எண்ணிக்கை: 32 மற்றும் அதன் மடங்குகளாக.

வெப்சைட்,
http://www.shankarabuildpro.com/



( விரைவில் ஐஆர்சிடிசி ( இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் ) ஐபிஓ )



Sunday, March 19, 2017

ஐபிஓ CL Educate Ltd

CL Educate Ltd கல்வி சார்ந்த தயாரிப்புகள் மற்றும் கல்வி துறையில் ஈடுபட்டுள்ளது.

விலை மதிப்பீடு :
Rs. 500
to Rs.502


தேதி
March 20, 2017 
முதல் 

March 22, 2017

பங்குகள்:
29 மற்றும் அதன் மடங்குகளாக

வெப்சைட்:
http://www.cleducate.com/


Monday, March 6, 2017

போனஸ் வழங்கும் கம்பெனிகள்

V-Guard Industries 
போனஸ் 2:5
Ex-Date: 15-Mar-2017( இந்த தேதி, இந்த தேதிக்கு முன் பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு போனஸ் பங்குகள் வழங்கப்படும் )
Record Date: 16-Mar-2017( யாருக்கெல்லாம் போனஸ் வழங்கலாம் என்பதை உறுதி செய்யும் தேதி )

GAIL(I) Limited 
போனஸ் 1:3
Ex-Date: 09-Mar-2017( இந்த தேதி, இந்த தேதிக்கு முன் பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு போனஸ் பங்குகள் வழங்கப்படும் )
Record Date: 11-Mar-2017( யாருக்கெல்லாம் போனஸ் வழங்கலாம் என்பதை உறுதி செய்யும் தேதி )


Thursday, March 2, 2017

ஐபிஓ Avenue Supermarts Ltd (D Mart)

Avenue Supermarts Ltd (D Mart) மும்பையை சேர்ந்த சில்லறை வணிக சூப்பர்மார்க்கெட்  IPO மூலம் 1800 கோடி திரட்ட முடிவுசெய்துள்ளது.

கம்பெனி பற்றி
DMart மும்பையை சேர்ந்த சில்லறை வணிக சூப்பர்மார்க்கெட் (FMCG)சில்லறை வணிகத் துறையில் மூன்றாவது பெரிய மற்றும் மிகவும் இலாபகரமானதாகவும் Reliance retail மற்றும் Future groupக்கு அடுத்தபடியாக உள்ளது.




Avenue Supermarts Ltd (D Mart)
பரிந்துரை
விலை மதிப்பீடு :
Rs. 295
to Rs.299
-

தேதி
பங்குகள்
March 8, 2017
முதல்
March 10, 2017
50 மற்றும் அதன் மடங்குகளாக


நஷ்டம் தவிர்க்க டிப்ஸ்

எப்பொழுதும் ஓரே பங்கில் அனைத்து முதலீட்டையும் செய்ய வேண்டாம். பங்கு சரியாக போக வில்லையெனில் அதிக நஷ்டம் எற்படும். அதையே தனி தனியாக பிரித்து பல கம்பெனி பங்குகளில்  முதலீடு செய்ய லாப, நட்டம் இணைந்து மிக அதிக நஷ்டம் தவிர்க்கப்படும்.

Wednesday, March 1, 2017

Music Broadcast Ltd ஐபிஓ

ரேடியோ சிட்டியை இயக்கும் Music Broadcast Ltd தன்னுடைய வியாபார விரிவாக்கத்திற்கு IPO மூலம் 400 கோடி திரட்ட முடிவுசெய்துள்ளது.

கம்பெனி பற்றி
20 நகரங்களுக்கு மேலாக FM வசதியை தருகின்றது. மேலும் துணை நிறுவனமான Jagran Prakashan Limited  நிர்கிவகிக்கின்றது. எட்டு மொழிகளில் planetradiocity.com மூலம் 40 இணைய வானொலி நிலையங்கள் ஐ  நிர்கிவகிக்கின்றது.


Music Broadcast Ltd
பரிந்துரை
விலை மதிப்பீடு :
Rs.324 to Rs.333
-

தேதி
பங்குகள்
March 6, 2017
முதல்
March 8, 2017
45 மற்றும் அதன் மடங்குகளாக