Sunday, July 31, 2016

AETL ஐபிஓ அதிரடி துவக்கம்

01-ஆகஸ்டு -2016
Advanced Enzyme Technologies Ltd இன்று பட்டியலிடப்பட்டது. தற்போது 1210.00 ( +314.00 (+35.04%) ) ரூபாய்என்ற அளவில் வர்த்தகமாகி வருகின்றது.

குறிப்பு:
( இதன் நிர்ணய விலை )
பங்கொன்றிற்கு ரூ. 880 முதல் ரூ.896 வரை.

Wednesday, July 27, 2016

மார்கெட் பிட்ஸ் 27-07-2016

நம் நாட்டில் சொத்து மேலாண்மை மற்றும் மியூச்சூவல் ஃபண்ட் வணிகத்தை மேற்கொள்ள செபியிடம் இருந்து முன் அனுமதி யெஸ் பேங்க் பெற்றுள்ளது.

செபியிடம் இருந்து இறுதி ஒப்புதலை பெறும் பட்சத்தில், யெஸ் பேங்க் நாட்டில் 44 வது மியூச்சூவல் ஃபண்ட் நிறுவனமாக இருக்கும். 

ஆன்லைன் மூல­மாக பேஷன் பொருட்­களை விற்­பனை செய்து வரும் ஜபாங் நிறு­வ­னத்தை ப்ளிப்கார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

‘யாகூ’ வலை­தள நிறு­வ­னத்தை தொலைத்­தொ­டர்பு துறையைச் சேர்ந்த வெரிசான் கம்­யூ­னி­கேஷன்ஸ் நிறு­வனம் 483 கோடி டாலருக்கு வாங்குகிறது. 

Wednesday, July 20, 2016

மார்கெட் பிட்ஸ்

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொண்டு ரூ.5,000 கோடி திரட்ட அனுமதி கோரி இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கடவுளாக விளங்கும் திருப்பதி வெங்கடாஜலபதி பெயரில் புதிய டீமேட் கணக்கை அக்கோவில் அமைப்பான திருமலை திருப்பதி தேவஸ்தானம்  கடந்த ஆண்டு ஆகஸ்ட மாதம் துவங்கியது. இதன் மூலம் இனி பக்தர்கள் கடவுளின் பெயரிலேயே பங்குகளை காணிக்கையாகச் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இதேப்போலவே மும்பை ஸ்ரீ சித்தி விநாயக் கணபதி ஆலயம் பெயரிலும் டீமேட் கணக்கு திறக்கப்பட்டுள்ளது. 
இனி பக்தர்கள் காணிக்கையாக பங்குகளையும் செலுத்தலாம்!

வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதற்காக 13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.22,915 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டது. 

Monday, July 18, 2016

ஐபிஓ - Advanced Enzyme Technologies Ltd

Advanced Enzyme Technologies Ltd 4,034,470 பங்குகளை ஐபிஓ மூலம் விற்பதன் மூலம் ரூ. 400 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்:
ஜூலை 20, 2016 முதல் ஜூலை 22 ம் தேதி வரை

நிர்ணய விலை :
பங்கொன்றிற்கு ரூ. 880 முதல் ரூ.896 வரை.

விண்ணப்ப பங்குகள் எண்ணிக்கை:
16 பங்கு அல்லது 16 ன் மடங்குகளாக விண்ணப்பிக்கலாம்.


Advanced Enzyme Technologies Ltd 20 வருடங்கள் வணிக அளவில் நொதிகளை(enzymes) தயாரிப்பதில் அனுபவம் வாய்ந்தது. மனித ஊட்டச்சத்து, விலங்கு ஊட்டச்சத்து, உணவு பதப்படுத்தும்முறை, உணவு அல்லாத பதப்படுத்தும் முறை இவற்றில் திறமை மிக்க கம்பெனியாக திகழ்தின்றது.

வெப்:
http://advancedenzymes.com/

Friday, July 15, 2016

தங்கப்பத்திரங்கள் - தேதி 18 முதல் 22ம் தேதி வரை

4ம் கட்ட தங்கப் பத்திர வெளியீடு வரும் 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

மத்திய அரசின் சார்பாக தங்கப் பத்திர வெளியீட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1, 5, 10, 50 மற்றும் 100 கிராம் தங்க பத்திரங்கள் வாங்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் ஒரு நிதி ஆண்டில் ஒருவர் அதிகபட்சமாக 500 கிராம் அளவுக்கு தங்க பத்திரங்கள் வாங்கலாம்.

இவற்றின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரங்களை ஒப்படைத்து தங்கமாகவே அல்லது பணமாகவோ பெறமுடியும். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.75 சதவிகித வட்டி கிடைக்கும். தங்கப் பத்திரங்கள் வங்கிகள், இந்திய பங்கு விற்பனைக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் (SHCIL), தபால் அலுவலகங்கள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் கிடைக்கும்.

Thursday, July 7, 2016

‘பிட்ச்’ அறிக்கை

 ‘பிட்ச்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை:இந்­திய வங்­கிகள், வாராக்­கடன் பிரச்­னையில் சிக்­கி­யுள்­ளன. இந்­திய வங்­கி­களின் செயல்­பா­டுகள், நீண்­ட­ கால அடிப்­ப­டையில், ‘ஸ்திரத்­தன்மை’ என்ற நிலைப்­பாட்டில் இருந்து, ‘இடர்ப்­பாட்­டிற்கு வாய்ப்­புள்­ளது’ என்ற பிரி­விற்கு தர­வி­றக்கம் செய்­யப்­பட்டு உள்­ளது. 

Saturday, July 2, 2016

எல் அண்ட் டி இன்ஃபோடெக் ஐபிஓ

எல் அண்ட் டி இன்ஃபோடெக் லிமிடெட் ஐபிஓ மூலம் பங்கு சந்தைக்குள் நுழைகின்றது.


விற்பனைக்கான மொத்த பங்குகள்:17,500,000.

நிர்ணயிக்கப்பட்ட விலை:
குறைந்தபட்ச விலை ரூ 705
அதிகபட்ச விலை ரூ 710
தனிநபர் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 தள்ளுபடி

இந்த ஐபிஓ ஜூலை 11 , 2016 ல் தொடங்கி ஜூலை 13 , 2016 நிறைவடைகிறது.

எல் அண்ட் டி இன்ஃபோடெக் இந்தியாவின் 6 வது பெரிய ஐடி நிறுவனமாக திகழ்கின்றது.