Sunday, March 22, 2020

[ MARCH 22, 2020 ] கேள்வி-பதில்-3

கேள்வி: 
olectra பங்குகளில் முதலீடு செய்யலாமா....?
அதன் பங்குகள் உயர எவ்வளவு காலம் ஆகும்.....
-lakshmanan V

பதில்:
ஸ்மால் கேப் கம்பெனி( 461 cr ). எலக்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. கடன் 5% உள்ளது. இந்த கம்பெனியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. 2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரை சரியான லாபம் ஈட்டவில்லை.தற்சமயம் புக் வேல்யூக்கும்( Book Value ) கீழ் விற்பனையாகின்றது.டெக்னிகலாக பார்த்தால் இன்னும் பங்கு விலை இறங்க வாய்ப்பு உண்டு. வரப்போகும் 2020-2021 காலாண்டில் சிறப்பான முடிவுகளை தரும் பட்சத்தில் மட்டுமே உயர வாய்ப்பு உள்ளது.

[ MARCH 22, 2020 ] கேள்வி-பதில்-2

கேள்வி:
சந்தை நன்றாக இறங்கி விட்டது ஆ௧ எனது பார்வையில் தற்போது முதலீடு செய்ய  விரும்புகிறேன். தங்களின் ௧௫த்து
-மா.அமல்ராஜ்.

பதில்:
தற்போது பங்குசந்தை நிலையற்ற தன்மையில் உள்ளது. ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். பழைய உச்சத்தை தொட கொஞ்சம் நாட்களாகும். நல்ல பங்குகளை தேர்ந்தெடுங்கள் குறைவான விலையில் SIP முறையில் வாங்குங்கள். அதேசமயம் கொஞ்சம் தங்கத்திலும்( Physical OR Gold ETF/Bonds ), கொஞ்சம் மீயூச்சுவல் பண்டில் முதலீடு செய்து வாருங்கள்.
உங்கள் தேவைபோக மீதம் இருக்கும் பணத்தில் முதலீடு செய்யுங்கள். கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம்.

[ MARCH 22, 2020 ] கேள்வி-பதில் - 1

கேள்வி:
முதலீட்டுக்கான பங்குகள்?
-Selvaraj M

பதில்:
தற்போது நல்ல தரமான பங்குகளே விலை மலிவாக கிடைப்பதால் அதில் கவனம் செலுத்தலாம். உங்களுக்கான தேவைபோக மீதம் உள்ள பணத்தில் ஒரு பகுதியை பங்குசந்தையில் முதலீட்டுக்கு வைத்துக்கொள்ளலாம். கொஞ்சம் தங்கத்தில் முதலீடு செய்வதும் நலம்.

கவனம். தற்சமயம் பங்குசந்தை இறங்குவதற்கே சாதகம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் SIP முறையில்  அல்லது விலை குறைய குறைய பின்வரும் பங்குகளில் முதலீடு செய்யலாம்,

BRITANNIA
MARUTI
INFOSYS
WIPRO
ITC
HINDUSTAN UNILEVER
HDFC BANK
KOTAK BANK
BBTC
BERGER PAINTS
BATA
TITAN
TCS
ASIAN PAINTS
BAJAJFIN
ESCORTS
L&T
HCLTECH
BBTC
DABUR

குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டவை படிப்பினைக்கு மட்டுமே. நீங்கள் தங்களின் முழு ஆராய்ச்சிக்கு பிறகு; சொந்த அணுகுமுறையில் பங்குகளை வாங்கவும்.

Sunday, March 8, 2020

[ MARCH 08, 2020 ] கேள்வி-பதில்


உங்கள் சந்தேகங்கள், விருப்பங்களை கேளுங்கள்.

[ MARCH 08, 2020 ] கம்பெனி அலசல் - ITC Ltd.


அடிப்படை: நீண்டகால முதலீடு

கம்பெனி மூலதனம்: 2,31,155.41 கோடி.

தற்போதய விலை: 181.75 Rs.

வாங்க வேண்டிய விலை: 160Rs.  வரை செல்லக்கூடிய வாய்ப்பு. விலை குறைய குறைய SIP முறையில் வாங்கலாம்.

குறுகிய கால இலக்கு விலை: 250

கம்பெனி அடிப்படை:
சிகரெட், புகையிலை, விவசாயம்( Agri ), உணவு சார்ந்த பொருட்கள்( Foods ), விடுதிகள்( Hotels ), புத்தகங்கள், பேப்பர்( Papers ) பொருட்கள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம்( IT ), தீப்பெட்டி, பத்தி பெட்டி தயாரிப்பு

கடன் இல்லாத கம்பெனி.



FMCG கம்பெனியான ITC  Nifty50 ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஒரு பன்முகப்படுத்தப்பட்ட( Diversified ) நிறுவனம். வருடம் தோரும் டிவிடெண்ட் வழங்கும் கம்பெனி. கடைசியாக 22 May 2019 ல் பங்கிற்கு 5.75 Rs. டிவிடெண்ட் வழங்கியுள்ளது.


வழங்கிய டிவிடெண்ட்














பிராண்ட்ஸ்( Brands )

























கம்பெனியை பாதிக்கும் காரணிகள்: 
புகையிலை வரி உயர்வு, விவசாயம் பாதித்தல்,மூல பொருட்கள் விலை உயர்வு

வெப்சைட்:
https://www.itcportal.com/


குறிப்பு:
இந்த பதிவு Technical Analysis( பகுப்பாய்வு ) மற்றும் படிப்பினைக்கு மட்டும்.






[ MARCH 8 , 2019 ]நல்ல பங்குகளில் முதலீடு செய்வதற்கான காலம்

தற்சமயம் பங்குசந்தை குரோனா வைரஸ் பயத்தின் காரணமாக இறக்கம் கண்டுள்ளது. இந்த சூழலில் சரியான பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது புத்திசாலிதனம். மொத்தமாக அனைத்து பணத்தையும் முதலீடு செய்வதை தவிர்த்து ஒவ்வொரு இறக்கத்திலும் SIP( Systematic Investment Plan )   முறையில் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பங்குகளை வாங்கலாம். நன்றாக டிவிடெண்ட் தரக்கூடிய, திறமையாக செயல்படக்கூடிய, எதிர்காலத்தில் சிறந்து விளங்கக்கூடிய பங்குகளை பார்த்து வாங்கவும்.

பங்குசந்தை லாபம், நட்டம் என மாறுதலுக்கு உட்பட்டது.

லாபம் - நட்டம்  = நிகரலாபம் 

நிகரலாபம் நமது முதலீட்டை குறைக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நல்ல பங்குகள் எந்த சூழலையும் சந்தித்து முன்னேறி மேலே வரும்.