Wednesday, October 18, 2017

தீபாவளி 2018 'கண்காணிக்கும்' பங்குகள்

தீபாவளி 2017
தீபாவளி 2018

Manappuram Finance Ltd. 103.70 ரூபாய்
(  Best at 90 Rs. to 95 Rs. )
காத்திருப்போம்
CG Power and Industrial Solutions Ltd 81.95 ரூபாய்
(  Best at 76 Rs. to 79 Rs. )
காத்திருப்போம்
Future Consumer Ltd  61.25 ரூபாய்.
( Best at 42 Rs. to 46 Rs. )
காத்திருப்போம்
Manali Petrochemicals Ltd 34.70 ரூபாய்.
( Best at 30 Rs. to 33 Rs. )
காத்திருப்போம்
Bharat Electronics Ltd 172.90 ரூபாய்.
( Best at < 165 Rs. )
காத்திருப்போம்
Future Enterprises Ltd 49.05 ரூபாய்.
( Best at < 45 Rs. )
காத்திருப்போம்
TIL Ltd 509 ரூபாய்.
காத்திருப்போம்.

இப்பங்குகள் அடுத்த தீபாவளியில் தித்திக்குமா?! பொருத்திருந்து பார்ப்போம்..

தித்திக்கும் தீபாவளி  2017 நல்வழ்த்துக்கள்!! :)








தீபாவளி 2016 அன்று கொடுக்கப்பட்ட பங்குகளின் தற்போதய நிலை


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


10/27/2016 முதல் இன்று வரை



தீபாவளி 2016
தீபாவளி 2017
Ashok Leyland ( OCT-27, 2016 ) – 84.90 ரூபாய்
130.40 ரூபாய்
Karur Vysya Bank Ltd( OCT-27, 2016 ) – 473.5 ரூபாய்
125 ரூபாய் + Bonus 2:5
Rights Issue of equity shares in the ratio of 1:6 of Rs. 2/- each at a premium of Rs. 74/- per Share.
City Union Bank ( OCT-27, 2016 )- 145.00 ரூபாய்
159.55 ரூபாய் +
Bonus 1:10 ( 12 jul,2017 )
KEC International( OCT-27, 2016 ) - 124.65 ரூபாய்
298.20 ரூபாய்
Wipro Ltd( OCT-27, 2016 ) – 462.65 ரூபாய்
294.65 ரூபாய் + Bonus 1:1
L&T Finance Holdings Ltd ( OCT-27,2016 ) – 105.90 ரூபாய்
207.9 ரூபாய்
State Bank of India( OCT-27, 2016 ) - 255.05 ரூபாய்
245 ரூபாய் + 26 May 2017, 260% Dividend
Infosys Ltd( OCT-27,2016 ) - 1003.50 ரூபாய்
926.95 ரூபாய் Buy back Rs 1,150 per share 

Monday, October 16, 2017

[ update Oct-17 ] பட்டியலிடப்பட்ட Godrej Agrovet Ltd முதல் நாள், 30% லாபம்



அதிக எதிர்பார்ப்புடன் பட்டியலிடப்பட்ட Godrej Agrovet Ltd முதல் நாள் விலை 595.55 ரூபாய்ல் முடிந்தது. ( 30% லாபம் முதல் நாளில்!! )

தீபாவளி முகூர்த் டிரேடிங் 6.30 pm முதல் 7.30 pm, 19 அக்டோபர்.

Sunday, October 8, 2017

[ Update Oct 9 ] மார்கெட் பிட்ஸ்

Godrej Agrovet IPO - 95 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு விரும்பப்படும் பங்காக உருவெடுத்துள்ளது.
இதன் மூலம் பட்டியலிடப்படும் அன்று சிறப்பான வரவேற்பு இருக்கும் என எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

160 கோடி ரூபாய்க்கு மொத்தமாக 9X மீடியா மற்றும் INX மியூசிக்ஸின் 100% கையகப்படுத்தலை ZEE Entertainment அறிவித்துள்ளது.

ஜீ மீடியா மற்றும் Diligent மீடியாவின் இயக்குநர்கள் குழு அதன் அச்சு ஊடக வர்த்தகத்தை பிரித்து பங்குச் சந்தையில் பட்டியலிட ஒரு முன்மொழிவை ஒப்புக் கொண்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி தலா 1 Diligent மீடியாவின் பங்கு 4 Zee Media பங்குகளுக்கு நிகராக வழங்கப்படும்.

ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு இல்லை.
தற்போது ஏர்செல் நிறுவனத்துடனான இணைப்பு ரத்தாகியுள்ளது. ஆர்.காம் நிறுவனத்தின் கடன் சீரமைப்புத் திட்டங்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அது தன்னுடைய டவர், ஃபைபர், அலைக்கற்றை மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்றுக் கடனை அடைக்கத் திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.44,345 கோடி கடன் நிலுவையில் உள்ளது. மொத்தத்தில் இந்த பங்கை தற்சமயம்  தவிர்ப்பது நல்லது.

இ.பி.எஸ், புக் வேல்யூ, புத்தக மதிப்பு

இ.பி.எஸ். (EPS - Earnings Per Share): இ.பி.எஸ் என்பது, நிறுவனத்தில் ஒரு பங்குக்காக உள்ள வருமானம். நிகர லாபத்தை மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதுதான் இ.பி.எஸ்.

இ.பி.எஸ் = நிகர லாபம் / பங்குகளின் எண்ணிக்கை.
  
புக் வேல்யூ (Book Value Per Share): புக் வேல்யூ என்பது நிறுவனத்தில் ஒரு பங்குக்கு உள்ள புத்தக மதிப்பு. இதில் நாம் கணக்கிடுவது புத்தக மதிப்பைத்தானே தவிர, நிறுவனச் சொத்துகளின் மார்க்கெட் மதிப்பை அல்ல. ஒரு நிறுவனத்தின் கடன்களை அதன் சொத்துகளில் இருந்து கழித்த பிறகு மிஞ்சுவதே புத்தக மதிப்பு.

புத்தக மதிப்பு = சொத்துகள் - கடன்கள் (Book Value = Assets - Liabilities)

ஒரு பங்கின் புத்தக மதிப்பு = புத்தக மதிப்பு / பங்குகளின் எண்ணிக்கை.

[ update oct 8 ] ஐபிஓ MAS Financial Services Ltd

வெளியீட்டுத் தேதி: வெள்ளி, அக்டோபர் 6, 2017
வெளியீட்டு நிறைவு தேதி: செவ்வாய், அக்டோபர் 10, 2017
விலை: Rs. 456 - 459
பங்குகளின் எண்ணிக்கை: 
32 பங்கு பங்குகள் மற்றும் அதற்கு பிறகு மடங்காக
வெளியீடு அளவு: ரூ. 460 கோடி

பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இல் பட்டியலிடப்படும்.

வெப்சைட்:
http://www.mas.co.in/

Tuesday, October 3, 2017

[ update oct 3 ]கோத்ரேஜ் அக்ரோவெட் ஐ.பி.ஓ

கோத்ரேஜ் அக்ரோவெட்( Godrej Agrovet ) ஐ.பி.ஓ வெளியிடத் தயாராகிவிட்டது. இந்த நிறுவனம், பல்வேறு விதமான தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் டைவர்சிஃபைடு நிறுவனமாக விளங்குகிறது. இந்த வெளியீட்டின் மூலம் ரூ.1,160 கோடி திரட்ட வுள்ளது. கோத்ரேஜ் இண்டஸ்ட்ரிஸ், தற்போது கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தில் 63.67 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளது.

இந்த விற்பனையில் பங்கு விலைப்பட்டை ரூ.450-460 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 4-ம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை விற்பனை நடக்கிறது.