Sunday, April 30, 2017

ஹட்கோ ஐபிஓ ( மே 8 - மே 11 )

வீ ட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டுக் கழகம் (ஹட்கோ), பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் 1,200 கோடி ரூபாயைத் திரட்ட முடிவு செய்துள்ளது. கடந்த 46 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு, அரசு நிறுவனமான ஹட்கோ கடன் தந்துவருகிறது. இந்த ஐபிஓ மே 8-ம் தேதி தொடங்கி, 11-ம் தேதி நிறைவடைகிறது. ஒரு பங்கின் விலை ரூ.56 முதல் ரூ.60-ஆக நிர்ணயமாகி இருக்கிறது.

http://www.hudco.org/

Thursday, April 27, 2017

அட்சய திரிதியை சிறப்பு வர்த்தகம் April 28, 2017

அட்சய திரிதியை சிறப்பு வர்த்தகம்
நாள் April 28, 2017
16:30 hrs
19:00 hrs
GOLD ETF பங்குகள் இந்த நேரத்தில் வாங்கலாம்.


Sunday, April 23, 2017

ஐபிஓ - எஸ் சந்த் நிறுவனம்( S Chand and Company Ltd )

பிரபல புத்தகத் தயாரிப்பு நிறுவனமான எஸ் சந்த், வருகிற 26-ம் தேதி தனது பங்குகளை பொதுப் பங்கு விற்பனைக்கு வெளியிடுகிறது. 
இந்த ஐபிஓ மூலம் எஸ் சந்த் நிறுவனம், ரூ. 728  கோடி திரட்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த ஐபிஓ, ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி அன்று முடிவடைகிறது. ஒரு பங்கின் விலையை ரூ.660 - ரூ.670 வரை நிர்ணயம் செய்துள்ளது.

Sovereign Gold Bond scheme


Issue opens:
Monday, April 24, 2017
Issue closes:
Friday April 28, 2017
Price of gold:
Rs. 2901/Gram
(1 unit = 1 gram)
Issued by the Reserve Bank of India on behalf of the Government of India

Investors will earn returns linked to gold price

ஆண்டுக்கு 2.5% உறுதியான வருமானம் இதில் உள்ளது. இதுதவிர, தங்கம் விலை உயர்ந்தால் அது தனி லாபம். குறைந்தபட்சம் ஒரு கிராம்,  அதிகபட்சம் 500 கிராம் வரை முதலீடு செய்யலாம்.

காலம்: 8 வருடங்கள். 
5ம் வருடம் முதல் வெளியேறும் வசதி

Sunday, April 16, 2017

[16APR2017] ரிலை­யன்ஸ் பவர் நிகர லாபம் ரூ.215 கோடி

ரிலை­யன்ஸ் பவர், கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 215.90 கோடி ரூபாயை, ஒட்­டு­ மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 61.55 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், இந்­நி­று­வ­னத்­தின் மொத்த வரு­வாய், 2,548.94 கோடி ரூபா­யில் இருந்து, 2,696.50 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துஉள்­ளது. 

Thursday, April 6, 2017

மியூச்சுவல் ஃபண்ட் என்பது?

மியூச்சுவல் ஃபண்ட் என்பது தமிழில் பரஸ்பர நிதிகள் என்று அழைக்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டும் பங்குச்சந்தையை (Share market) போன்றதுதான். ஆனால், இதில் ஈடுபடுவதற்கு பங்குச்சந்தையைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. எனென்றால் நம் பணத்தை பங்கு சந்தையை பற்றி நன்கு அறிந்த கம்பெனிகளிடம் ஒப்படைக்கின்றோம்.இந்த கம்பெனிகளை தேர்ந்தெடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது. இந்த கம்பெனிகள் உங்கள் பணத்தை சேர் மார்கெட்டிலோ அல்லது அரசு துறை சார்ந்த சேமிப்பு முதலீட்டிலோ நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தை பொறுத்து முதலீடு செய்யும்.

நம்மை போல பல முதலீட்டாளர்களை ஒன்று சேர்த்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், அவரவர் கொடுத்த தொகைக் ஏற்ப யூனிட்டுகள் (Units) எனப்படும் அலகுகளை கொடுத்து விடுவார்கள்.
யூனிட் என்பது தமிழில் அலகு எனப்படும். யூனிட்கள் என்பது பங்குகளைப் (shares) போலதான். இந்த ஒவ்வொரு யுனிட்டுக்கும் மதிப்பு உண்டு அதைத்தான் NAV(Net Asset Value) என்பார்கள்.

உதாரணமாக,
1000 ரூபாய் முதலீடு செய்து  ஒரு நிறுவனத்திடம் இருந்து பங்கு சந்தை சார்ந்த( equity )  மீயுட்சுவல் பண்ட் 100 யுனிட்டுகளை நான் பெறுகின்றேன். 
அப்போதய ஒரு யுனிட் மதிப்பு ரூ10. ஆக என்னிடம் தரப்பட்ட மொத்த யுனிட்கள் 100. இன்றைய விலை 100யுனிட் x10ரூ = 1000ரூபாய்.

ஒரு வருடம் கழித்து, 
பங்கு சந்தை  நன்றாக இருந்து, பண்ட் நிறுவனமும் நல்லபடியாக முதலீடு செய்திருந்தால் ஒரு யுனிட் மதிப்பு 15 ரூஆக இருப்பதாக கொண்டால்
என்னிடம் இருக்கும் தொகை 100x15=1500ரூபாய்.

பங்கு சந்தை  சரியாக இல்லாமல் இருந்து  ஒரு யுனிட் மதிப்பு 9 ரூஆக இருப்பதாக கொண்டால்,
என்னிடம் இருக்கும் தொகை 100x9=900ரூபாய்.

Monday, April 3, 2017

2017-2018 வரவிருக்கும் ஐபிஓகள்

என்எஸ்இ( NSE ), சிடிஎஸ்எல்(CDSL), எஸ்பிஐ லைஃப்( SBI LIFE ), ஹட்கோ(HUDCO) போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஐபிஓ மூலம் கணிசமான தொகையைத் திரட்டவுள்ளன.