ஜியோவின் அதிரடிக்குப்பிறகு நீண்ட நாட்களாகவே வோடஃபோன் நிறுவனத்துடன், ஐடியா நிறுவனம் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இதை வோடஃபோன் நிறுவனம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, தங்களது நிறுவனத்துடன், ஐடியாவை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று வோடஃபோன் கூறியுள்ளது. அதிகரித்து வரும் போட்டியில், இந்தியாவில் பெரிய சந்தையைப் பிடிப்பதற்காக இந்த முடிவு எனக் கூறப்படுகிறது.
இன்று ஒரே நாளில் 25% மேல் ஐடியா பங்கின் விலை உயர்ந்தது. இதே போல் போட்டி கம்பெனிகளான ரிலையன்ஸ், ஏர்டெல் பங்கின் விலையும் எதிப்பார்ப்பில் உயர்ந்தன.
ஐடியா பங்கின் தற்போதய விலை 97.95Rs.