அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான வைகாசியில் தேய்பிறையில் பௌர்ணமி நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால்ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் குறைந்த கால தேர்வாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். மேலும் தங்க முதலீட்டில் நீண்ட கால சராசரி வருவாய் ஆண்டுக்கு 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும்.
No comments:
Post a Comment