Sunday, April 24, 2016

இந்திய சேவை துறை வளர்ச்சி


இந்திய சேவை துறை(ஐ.டி., மருத்துவம், சுற்றுலா), ஆண்டுக்கு 10 சத­வீதம் என்ற அளவில், வலுவான வளர்ச்சியை கண்டு வருகிறது என, இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் கே.பி.எம்.ஜி., நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிப்ஸ்:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ஐடி துறைச் சார்ந்த பங்குகளில் அதிகரித்திருக்கிறது!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.7,398 கோடி

சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.7,398 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
-APR 25

மே 9,2016ல் அக்‌ஷய திருதி

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான வைகாசியில் தேய்பிறையில் பௌர்ணமி நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால்ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் குறைந்த கால தேர்வாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். மேலும் தங்க முதலீட்டில் நீண்ட கால சராசரி வருவாய் ஆண்டுக்கு 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும்.

Monday, April 18, 2016

பங்குசந்தை நடப்பு செய்திகள் APR-18


  • பருவமழை, ஐஐபி எதிர்பார்ப்பால் சந்தை அதிகரிப்பு!
  • என்எல்சி என்று அறியப்படும் "நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்" பெயரை மாற்ற அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்துக்குச் சொந்தமான ஐரோப்பிய ஆலையை முதலீட்டு நிறுவனமான கிரேபுல் வாங்குகிறது.

Wednesday, April 6, 2016

இன்று 06-4-2016 ஆசிய சந்தையால் இந்திய சந்தை வேகம் குறைவு

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. ஆனாலும் நேற்றைய சந்தை சரிவுடன் காணப்பட்டது. இந்த நிலையில் ஆசிய சந்தைகள் மந்த நிலையில் வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தையும் மந்த நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 2.03 புள்ளிகள் உயர்ந்து  24,886.52 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 4.70 புள்ளிகள் உயர்ந்து  7610.50 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஹிண்டால்கோ 87.80 3.42%
டாடா ஸ்டீல் 320.80 2.72%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,174.05 2.38%
ஏசிசி 1,418.00 1.96%
பார்தி ஏர்டெல் 336.40 1.79%

விலை குறைந்த பங்குகள்


ஐசிஐசிஐ வங்கி 222.25 -1.48%
டெக் மஹிந்திரா 455.60 -1.44%
போஷ் 19,550.00 -1.33%
BPCL 881.30 -1.02%
ஆக்சிஸ் வங்கி 428.30 -0.99%