Monday, May 31, 2021

[31May2021]பிரேக்அவுட் பங்குகள்( Breakout Stocks )


தனது முந்தைய பல பல ஆண்டுகள் உச்ச பட்சவிலையை உடைத்துக்கொண்டு புதிய உச்சத்தை தொட்ட பங்குகள் பிரேக்அவுட் பங்குகள் எனப்படும். அப்படியான ஒரு பங்கைத்தான் இப்பதிவில் பார்க்கப் போகின்றோம்.

Sundram Fasteners Limited டிவிஎஸ் குழுமத்தின் ஒரு பகுதியாகும். 1966 ம் ஆண்டு துவங்கப்பட்டது. நீர் விசையியக்கக் குழாய்கள், ரேடியேட்டர் மூடிகள், விமான ,காற்றாலை, மின்சார மோட்டார்கள், மோட்டார் வாகனங்கள் தொடர்பாக Fastners( இணைப்பான்கள் ) தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.



 கம்பெனி மூலதனம். ₹ 16,596 Cr.

தற்போதய விலை:791ரூ

விலை குறைந்தால் வாங்கவேண்டிய விலை: 565-650ரூ

இலக்கு: 950+ரூ

( முற்றிலும் படிப்பினைக்கானது. )


[31May2021] புதிய உச்சத்தில் பங்கு சந்தை

புதிய உச்சத்தில் பங்கு சந்தை நிப்டி 15582.80 புள்ளிகளுடன் நிறைவு. இன்று பங்கு சந்தை புதிய உச்சத்தை தொட்டது. கோரோனா இரண்டாம் அலை குறைய தொடங்கிய செய்திகளில் பங்கு சந்தைகளில் உயர்வு ஏற்ப்பட்டது. மேலும் புதிய நல்ல செய்திகள் வரும் பட்சத்தில் உயர வாய்ப்புள்ளது. அப்படி இல்லையெனில் சாதாரண ஏற்ற இறக்கமே காணப்படும். பல பங்குகள் உச்சபட்ச விலையில் வர்த்தகமாகின்றன. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து வாங்குவதே இச்சமயத்தில் பலன் கொடுக்கும். 

நாளை ஐடிசி( இன்று 1 பங்கு 216.60 ரூபாய் ) நிறுவனம் தனது காலாண்டு முடிவை அறிவிக்க உள்ளது. இதன் முடிவுகளைப் பொருத்து இந்த பங்கின் ஏற்றம் இறக்கம் இருக்கும்.

Monday, May 17, 2021

[ 17MAY2021 ] தமிழ் பங்குசந்தை ஆன்ராய்டு அப்ளிகேஷன் போர்ட்போலியோவில்

படிப்பினைக்கான தமிழ் பங்குசந்தை ஆன்ராய்டு அப்ளிகேஷன் போர்ட்போலியோவில் இன்று லாபம் புக் செய்யப்பட்டது.

போர்ட்போலியோ விற்கப்பட்ட பங்குகள்
எண்கம்பெனிமொத்த வாங்கிய விலைவாங்கிய தேதிமொத்த விற்ற விலை விற்ற தேதி லாபம்
1COCHIN SHIPYARD LTD35000.00 ரூ.25MAR202140000.00 ரூ.17MAY20215000.00
2SDBL29600.00 ரூ.13APR202139650.00 ரூ.17MAY202110050.00


லாபம்:15050 Rs.

 
ஆன்ராய்டு அப்ளிகேஷன் லிங்க்: