நீ என்ன பெரிய டாடா பிர்லாவா என பல இடங்களில் நாம் பேச கண்டிருக்கின்றோம்.
அவர்களை போல பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அவர்களுடைய குருப் ஆப் கம்பெனிகளில் முதலீடு செய்து அவர்களுடன் நாமும் உயரலாம்.
அப்படி நாம் பார்க்க இருப்பதுதான் டாடா குருப் ஆப் கம்பெனிஸ்...பிர்லாவை பின்னொறு பதிவில் பார்க்கலாம்..
இந்த முதலாம் கொரோனா பாதிப்பில் டாடா குருப்பின் பங்குகள் பாதி விலைக்கு கீழ் கிடைத்தன. அப்போது வாங்கியவர்கள் தற்போது 50 ம் மேல் லாபத்தில் உள்ளனர்.
உதாரணமாக 30 மார்ச் 2020 அன்று டாடா மோட்டார்ஸ் பங்குகள் 64.80 ரூ வரை சென்றது. இன்றைய விலை 298.05 ரூ!! (எப்ரல் 20 2021)
கம்பெனி பற்றி
டாடா மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். 1868 ஆம் ஆண்டில் ஜாம்ஷெட்ஜி டாடாவால் நிறுவப்பட்ட இந்நிறுவனம் பல உலகளாவிய நிறுவனங்களை வாங்கிய பின்னர் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது. இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான தொழில்துறை குழுக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு டாடா நிறுவனமும் அதன் சொந்த இயக்குநர்கள் குழு மற்றும் பங்குதாரர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் சுயாதீனமாக இயங்குகின்றன.
ஒன்றே ஒன்று நாம் செய்ய வேண்டியது எப்பொழுதெல்லாம் இந்த கம்பெனி பங்குகள் குறைந்த விலைக்கு வருகின்றதோ அப்போது வாங்கி அல்லது SIP முறையில் முதலீடு செய்து வரலாம்.
பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட டாடாவின் கம்பெனிகள்,
- Tata Consultancy Services Limited,
- Tata Steel Limited,
- Tata Motors Limited,
- Titan Company Limited,
- Tata Chemicals Limited,
- The Tata Power Company Limited,
- The Indian Hotels Company Limited,
- Tata Consumer Products Limited,
- Tata Communications Limited,
- Voltas Limited,
- Trent Limited,
- Tata Sponge Iron Limited,
- Tata Investment Corporation Limited,
- Tata Metaliks Limited,
- Tata Elxsi Limited,
- Nelco Limited,
- Tata Coffee Limited
பங்குசந்தையில் பட்டியலிடப்படாத டாடா குருப்ன் கம்பெனிகள்,இவைகள் பங்கு சந்தைக்கு வந்தாலும் ஆர்ச்சரியப்படுவதிற்கில்லை.
- Tata Cliq,
- Tata Projects Limited,
- Tata Capital,
- TajAir,
- Vistara,
- Cromā,
- Tata Starbucks.
Tata Sons Private Limited
டாடா குழுமத்தின் முதன்மை ஹோல்டிங்( Holding ) நிறுவனமாக டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளது.