Tuesday, January 28, 2020

[ 29-JAN-2020 ] பங்குசந்தை தொடர் சரிவு

சீனாவில், ‘கொரோனா வைரஸ்’ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதை தொடர்ந்து, பங்குசந்தை தொடர் சரிவு . 

சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு நீடித்து வரும் நிலையில், அதன் காரணமாக, உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தால், உலகின் பல சந்தைகளில், அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டன. 
இதன் பாதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது.

பிப்ரவரி 1ல் பட்ஜெட் நிகழ்வு இருப்பதால், இனி பங்குசந்தையின் செயல்பாடுகள் அதனை மைய்யப்படுத்தியே இருக்கும்.

பங்குசந்தையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா பட்ஜெட்..?!
உலக நடப்புகள் மற்றும் பட்ஜெட் இரண்டும் நன்றாக இருக்கும்பட்சத்தில் பங்குசந்தை ஏறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.  அப்படி இல்லையெனில் பங்குசந்தையின் உயர்வு சாதாரணமானதாகவே இருக்கும். பார்க்கலாம்.

2020ல் பங்குசந்தையின் போக்கை மாற்றக்கூடிய  தெரிந்த காரணிகள்,
‘கொரோனா வைரஸ்’
2020 பட்ஜெட்
அமெரிக்கா தேர்தல்
அமெரிக்கா-சீனா பொருளாதார மோதல்கள்


Friday, January 17, 2020

[18-Jan-2020] ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள்

நடப்பு நிதியாண்டில், டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 13.5 சதவீதம் அதிகரித்து, 11 ஆயிரத்து, 640 கோடி ரூபாயாக, உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம், மதிப்பீட்டு காலத்தில், 1,350 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது

தற்போதய விலை: 1581 ரூ.

Monday, January 6, 2020

[ 06-01-2020 ] பங்குசந்தை சரிவு

சென்செக்ஸ் 787, நிப்டி 233 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டன. அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் பங்குச்சந்தைகளில் சரிவான சூழல் நிலவுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக ஆசிய உள்ளிட்ட இந்திய பங்குச்சந்தைகளும் சரிவாக உள்ளன. மேலும் முதலீட்டாளர்களும் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.