நீண்ட கால மூலதன ஆதாய வரியைக் ( LTCG Tax ) கணக்கிடும் முதலீட்டுக் காலம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆரம்பிக்கிறது என்பதால், லாபத்தில் இருக்கும் பல பங்குகளைப் பெரும் பணக்கார முதலீட்டாளர்கள் விற்று வருகிறார்கள். இந்த நிலை மார்ச் 30 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சந்தை ஏற்றம் காணத் தொடங்கும் என்கிறார்கள் சிலர்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள்மீது குறைந்தபட்சம் 50 பில்லியன் டாலர் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க வர்த்தக அமைப்பைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை அதிகரிக்கும்.இதனையடுத்து வியாழக்கிழமை(22Mar2018), அமெரிக்க பங்குச் சந்தை அதிக இறக்கத்தைச் சந்தித்தது. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் 500 புள்ளிகள் இழந்தது.
No comments:
Post a Comment