Wednesday, March 21, 2018

[21-Mar-2018] மார்கெட் பிட்ஸ்

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஐ.பி.ஓ
பாதுகாப்புத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் கடந்த வாரம் ஐ.பி.ஓ வெளியிட்டது. 13-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி முடிந்த இந்த ஐ.பி.ஓ-வுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இந்த ஐ.பி.ஓ-வுக்கு 1.3 மடங்கு கூடுதலாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. 2.24 கோடி பங்கு களுக்கான இந்த வெளியீட்டில் 2.92 கோடி பங்குகளுக்கான விண்ணப்பங்கள் குவிந்தன.

ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் கடன் பத்திரங்கள்மூலம் ரூ.16,500 கோடி நிதி திரட்ட அதன் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஏர்டெல் தனக்கிருக்கும் கடனைக் குறைக்கவும், அலைக்கற்றை வாங்கியதற்கான தொகையைச் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஏர்செல் திவாலாகிவிட்ட நிலையில் ஏர்டெல்லும் திவாலாகப் போகிறது என்று சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால், அந்த நிலைக்கு ஆளாகாமல் அடுத்தடுத்து நடவடிக்கைகளை ஏர்டெல் நிறுவனம் எடுத்துவருகிறது.


வீடி­யோ­கான் இண்­டஸ்ட்­ரீஸ்
வீடி­யோ­கான் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னம், காப்­பீட்டு வணி­கத்­தில் இருந்து வெளி­யே­றி­யது.  வாராக்­க­டன் தொடர்­பான, திவால் நட­வ­டிக்கை பட்­டி­ய­லில், வீடி­யோ­கான் இடம்­பெற்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

No comments:

Post a Comment