Monday, March 26, 2018

[26Mar2018] தற்போதய சரிவுக்கு காரணம் என்ன?

நீண்ட கால மூலதன ஆதாய வரியைக் (  LTCG Tax  ) கணக்கிடும் முதலீட்டுக் காலம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆரம்பிக்கிறது என்பதால், லாபத்தில் இருக்கும் பல பங்குகளைப் பெரும் பணக்கார முதலீட்டாளர்கள் விற்று வருகிறார்கள். இந்த நிலை மார்ச் 30 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சந்தை ஏற்றம் காணத் தொடங்கும் என்கிறார்கள் சிலர்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள்மீது குறைந்தபட்சம் 50 பில்லியன் டாலர் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க வர்த்தக அமைப்பைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை அதிகரிக்கும்.இதனையடுத்து வியாழக்கிழமை(22Mar2018), அமெரிக்க பங்குச் சந்தை அதிக இறக்கத்தைச் சந்தித்தது. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் 500 புள்ளிகள் இழந்தது.

Wednesday, March 21, 2018

[21-Mar-2018] மார்கெட் பிட்ஸ்

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஐ.பி.ஓ
பாதுகாப்புத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் கடந்த வாரம் ஐ.பி.ஓ வெளியிட்டது. 13-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி முடிந்த இந்த ஐ.பி.ஓ-வுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இந்த ஐ.பி.ஓ-வுக்கு 1.3 மடங்கு கூடுதலாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. 2.24 கோடி பங்கு களுக்கான இந்த வெளியீட்டில் 2.92 கோடி பங்குகளுக்கான விண்ணப்பங்கள் குவிந்தன.

ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் கடன் பத்திரங்கள்மூலம் ரூ.16,500 கோடி நிதி திரட்ட அதன் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஏர்டெல் தனக்கிருக்கும் கடனைக் குறைக்கவும், அலைக்கற்றை வாங்கியதற்கான தொகையைச் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஏர்செல் திவாலாகிவிட்ட நிலையில் ஏர்டெல்லும் திவாலாகப் போகிறது என்று சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால், அந்த நிலைக்கு ஆளாகாமல் அடுத்தடுத்து நடவடிக்கைகளை ஏர்டெல் நிறுவனம் எடுத்துவருகிறது.


வீடி­யோ­கான் இண்­டஸ்ட்­ரீஸ்
வீடி­யோ­கான் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னம், காப்­பீட்டு வணி­கத்­தில் இருந்து வெளி­யே­றி­யது.  வாராக்­க­டன் தொடர்­பான, திவால் நட­வ­டிக்கை பட்­டி­ய­லில், வீடி­யோ­கான் இடம்­பெற்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

Tuesday, March 20, 2018

[20-Mar-2018] லெமன் ட்ரீ பங்கு வெளி­யீடு(ஐபிஓ)

லெமன் ட்ரீ ஓட்­டல்ஸ் நிறு­வ­னம், புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, 1,000 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது.

இப்­பங்கு வெளி­யீடு, 26ம் தேதி துவங்­கு­கிறது. மொத்­தம், 18.54 கோடி பங்­கு­கள் விற்­பனை செய்­யப்­பட உள்­ளன. பங்கு ஒன்­றின் குறைந்­த­பட்ச விலை, 54 ரூபாய்; அதி­க­பட்ச விலை, 56 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. குறைந்­த­பட்­சம், 265 பங்­கு­கள் மற்­றும் அதன் மடங்­கு­களில், பங்­கு­களை வாங்­க­லாம்.

https://www.lemontreehotels.com/

Monday, March 12, 2018

[12-Mar-2018] கம்பெனி அலசல் JSW ஸ்டீல்ஸ்

JSW ஸ்டீல்ஸ்

இரும்பு மற்றும் இரும்பு சார்ந்த பொருட்கள் தயாரிப்பு
  • மூலதனம்: 70,570 கோடி
  • ஐந்து வருடங்களாக 26.29 சதவீத லாப வளர்ச்சி
  • 18 சதவீத ஆரோக்கியமான டிவிடெண்ட்
  • 100 நாடுகளுக்கு மேல் வியாபார தொடர்பு
  • இரும்பு மற்றும் இரும்பு சார்ந்த பொருட்கள் தயாரிப்பு
    • Wire Rods
    • Special Alloy Steel
    • TMT Bars
    • Galvalume
    • Galvanized
    • Color Coated Products
    • Cold Rolled
    • Hot Rolled

தற்போதய விலை: 297.85 ரூ.
ரூ275 முதல் 288 ரூ. க்கு வாங்கலாம். நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது.

அறிவிப்பு: 
இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை தகவலுக்கு/படிப்பினைக்கு மட்டுமே. பங்குசந்தையில் உங்கள் சொந்த அனுபவ, ஆலோசனைப்படி முதலீடு செய்யவும்.