Tuesday, June 28, 2016

பொதுப்பங்கு வெளியிட என்எஸ்இ(NSE) திட்டம்

வரும் 2017 ஜனவரி மாதம் பொதுப்பங்கு வெளியிட தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) திட்டமிட்டுள்ளது.

என்எஸ்இ பொதுப்பங்கு மற்றும் பங்குகளை பட்டியலிட திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து பொதுப்பங்கு வெளியீட்டுக்கான ஆவணங்களை ஜனவரி 2017ல் `செபி’-யிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

Monday, June 20, 2016

மியூச்சுவல் ஃபண்டு - ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட்


இதுவும் முழுக்க முழுக்க பங்குச் சந்தை சார்ந்த திட்டம்தான். ஆனா, திரட்டுற பணத்தை, பல துறைகள், பல நிறுவனப் பங்குகள்ல பிரிச்சு முதலீடு பண்ணுற போர்ட்ஃபோலியோ இந்த ஃபண்டுல இருக்கு. அதனால ரிஸ்க் ஓரளவுக்கு குறைக்கப்படுது. வருமானமும் நல்ல விதமாக கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்டுக்கு புது ஆளுங்க, துணிச்சலா இந்த வகை ஃபண்டுல பணத்தைப் போடலாம்.

ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட் உதாரணங்கள்:
Sundaram Rural India Fund (G)
SBI Magnum Multicap Fund (G)
L&T India Value Fund (G)

அந்நிய முதலீடு அனுமதி ( FII )

மருந்து துறை, விமானத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டில் விதிமுறைகளை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் விமானத்துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது. உணவு வர்த்தகம் மற்றும் உணவு மின்னணு வர்த்தகத்திலும் 100 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் மற்றும் மற்ற நிறுவனங்கள் புதிய விதிகளை பயன்படுத்தி இந்தியாவில் முதலீடு செய்ய விண்ணப்பம் செய்யலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

Monday, June 13, 2016

ITC & BPCL போனஸ் ஷேர் அறிவிப்பு


ITC Limited 
BONUS 1:2
Ex-Date:01-July-2016
Record Date: 04-July-2016.

Bharat Petroleum Corporation Limited
BONUS 1:1
Ex-Date: 13-Jul-2016.

Record Date: 14-Jul-2016.

லார்ஜ் கேப் பண்டுகள்?

ஒரு நிறுவனத்தின் மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) 10,000 கோடி ரூபாய்க்கு மேல் (என்.எஸ்.இ. வரையறைப்படி) இருந்தால்அதுக்கு லார்ஜ் கேப் நிறுவனம் என்று பெயர். இந்த மாதிரியான நிறுவனங்களோட பங்குகள்ல முதலீடு செய்யறதுதான், லார்ஜ் கேப் ஃபண்டுகள்

பொதுவாக லார்ஜ் கேப் நிறுவனங்களோட பங்குகள் நீண்டகால அடிப்படையில நல்ல வருமானத்தைத் தருகின்றது.