Friday, February 12, 2016

டீம்லீஸ் ஐபிஓ

3 நாட்களில் 66 மடங்குக்கும் மேலாக விண்ணப்பம்; டீம்லீஸ் ஐபிஓ-க்கு அபார வரவேற்பு..மனிதவள கன்சல்டிங் நிறுவனமான டீம்லீஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி 2-4 தேதிகளில் ஐபிஓ வெளியிட்டது. தனது 28,92,063 பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 400-500 கோடி திரட்ட திட்டமிட்டது. ஐபிஓ வெளியான முதல் இரண்டு நாட்களில் 89 சதவிகித பங்குகள் விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. டீம்லீஸ் ஐபிஓ வெளியீட்டின் கடைசி நாளான வியாழன் அன்று அதற்கு விண்ணப்பங்கள் ஏராளமாக குவிய ஆரம்பித்தன. மூன்று நாள் முடிவில் மொத்தம் 19,09,15,620 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் வந்திருந்தன.
ஒதுக்கப்பட்ட பங்குகளின் அளவோடு ஒப்பிடுகையில் அதிகபட்சமாக 66 மடங்கு வரை கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கப்பட்ட பங்குகளின் மொத்த மதிப்பைக் கணக்கிட்டால் ரூ. 27918 கோடி வருகிறது.


No comments:

Post a Comment