கொரோனா வைரஸ் உலக அளவில் பரவ ஆரம்பித்துவிட்டதால் பங்குசந்தைகளில் பலத்த இறக்கம் காணப்படுகின்றது. இந்த நிலை இன்னும் அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனைத்து நாடுகளின் பங்குசந்தையும் கொரோனா பாதிப்புகளால் இறக்கம் காண்கின்றன.
Thursday, February 27, 2020
Tuesday, February 4, 2020
[05-FEB-2020] பர்கர் கிங் இந்தியா ஐபிஓ
பர்கர் கிங் இந்தியா நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் கடந்த நவம்பரில் விண்ணப்பித்திருந்தது. அதற்கான அனுமதியை தற்போது செபி அமைப்பு அந்த நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 400 கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிட்டிருக்கிறது. வெளியீட்டில் ஆறு கோடி பங்குகளை விற்பனை செய்யவிருக்கிறது.
[ 05-FEB-2020 ] மீண்டெழுந்த பங்குசந்தை
செவ்வாய்( 04-FEB-2020 ) - பங்குசந்தையில் புதிய முதலீடு காரணமாக உயர்வு காணப்பட்டது. இதன் மூலம் பட்ஜெட் அன்று(01-FEB-2020) இறங்கிய சரிவு சரி செய்யப்பட்டது. இதே நிலை நீடிக்குமா என்பது நாட்கள் போக போகவே தெரியும்.
சென்செக்ஸ்( Sensex ) 917.07 புள்ளிகள் உயர்வு
நிப்டி( Nifty ) 271.25 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ்( Sensex ) 917.07 புள்ளிகள் உயர்வு
நிப்டி( Nifty ) 271.25 புள்ளிகள் உயர்வு
Sunday, February 2, 2020
[ FEB-02-2019 ]பட்ஜெட் எதிரொலி - பங்குச் சந்தைகள் பலத்த சரிவு
சந்தையின் எதிர்பார்ப்புகளை, 'பட்ஜெட்' நிறைவேற்றவில்லை என்ற கோணத்தில், பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால், நேற்று பங்குச் சந்தைகள் பலத்த சரிவை சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையின், 'நிப்டி' 300.25 புள்ளிகள் சரிவை கண்டது. மும்பை பங்குச் சந்தையின், 'சென்செக்ஸ்' 988 புள்ளிகள் சரிந்து, 40 ஆயிரம் புள்ளிகள் என்ற அடையாள நிலையிலிருந்து குறைந்தது.
Subscribe to:
Posts (Atom)