Saturday, December 14, 2019

[14-12-2019] சப்போர்ட், ரெஸிஸ்டென்ஸ்( Support, Resistance ) என்றால் என்ன?

ஒரு பங்கு விலை ஏதேனும் காரணத்தால் இறங்கும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த பங்கிற்கான தேவையும் அதில் முதலீடு செய்பவர்களும் அதிகரிக்க கூடும். அப்போதய நிலையே சப்போர்ட்( Support ) என அழைக்கப்படுகின்றது. 

முதலீட்டார்கள் லாப நோக்கில் பங்குகளை விற்கும் இடமே  ரெஸிஸ்டென்ஸ் (Resistance )என அழைக்கப்படுகின்றது. இங்கு இருந்து பங்கின் விலை சப்போர்ட் விலைக்கு மீண்டும் செல்லும் அல்லது ரெஸிஸ்டென்ஸ் விலையை உடைத்துக்கொண்டு மேலே செல்லும். 

அதே போலவே சப்போர்ட் விலை அதனை விட கீழாக செல்லும் வாய்ப்பும் உள்ளது.

இதனை பங்கு சார்ட் ( chart )மூலம் அறிந்து கொள்ளலாம்.சப்போர்ட் மற்றும் ரெஸிஸ்டென்ஸ் மாறி மாறி வரும். இதனை உபயோகப்படுத்தி குறைந்த கால அளவில லாபம் பார்க்கலாம்.

சப்போர்ட் விலையில் வாங்கி ரெஸிஸ்டென்ஸ் விலையில் விற்று வெளியேறலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் இதனை பொருட்படுத்த தேவை இல்லை.

இங்கே ITC கம்பெனியின் தற்போதய சப்போர்ட்( 235 Rs. ) மற்றும் ரெஸிஸ்டென்ஸ்( 260 Rs. ) விலை குறிப்பிடப்பட்டுள்ளது.


வீடியோ:

No comments:

Post a Comment