Sunday, July 29, 2018

[ 29-Jul-2018 ] இந்திய தகவல் தொழில்நுட்ப துறை


இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில்( Information Technology ), டாடா கன்சல்டன்சி( TCS ) நிறுவனம், தொடர்ந்து முதலிடத்தில் உள்­ளது.
இன்போசிஸ் நிறுவனம்( INFOSYS ), 283 கோடி டாலர் வருவாயுடன், இரண்டாவது இடத்தில் உள்ளது. எச்.சி.எல்., ( HCL )நிறுவனம், விப்ரோவை முந்தி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Saturday, July 21, 2018

[ 22-July-2018 ] நிப்டி 50 இன்டெக்ஸ் என்ன சொல்கிறது?

நிப்டி 50 இன்டெக்ஸ்( Nifty 50 Index ) - இதன் புள்ளிகள் தற்போது 2018-07-22ன் படி 11010.20 புள்ளிகளாகும். இதன் வளர்ச்சி இதன் 50 பங்குகளின் வளர்ச்சியின் மூலம் அளவிடப்படுகின்றது. 


மேலே இருக்கும் நிப்டி குறீயிட்டு விளக்கப்படம் 2007 முதல் 2018 வரை உள்ள வளர்ச்கியை குறிக்கின்றது. இதில் பல இறக்கங்களும் ஏற்றங்களும் உண்டு. விளக்கப்படத்தின் படி தற்போது உச்சத்தில் இருக்கும் இது எப்போது வேண்டுமானலும் இறங்கலாம். ஆனால் 2007 முதல் 2018 வரை இப்போது வளர்ச்சியில்தான் உள்ளது. எப்பொழுதெல்லாம் விழுகின்றதோ அது மீண்டெழுகிறது. 2007 ல் இருந்து நிப்டி 50 பங்குகளை நீங்கள் தற்போதுவரை வைத்திருந்தாலே நல்ல லாபம் பார்த்திருக்கலாம்.

2007-02-01ல் 3643.59  புள்ளிகளாக இருந்தது தற்போது 11010.20 புள்ளிகளாகும்.
உச்சத்தில் உள்ள நிப்டி எப்போது வேண்டுமானாலும் இறங்கலாம்( விளக்கப்படம்  படி ) உஷாரு..

பங்குசந்தையில் ஏற்றமும் இறக்கமும் எப்போதும் இருக்கும்.. நீங்கள் வைத்திருக்கும் பங்குகள் அடிப்படையில் நல்ல பங்குகள் எனில் இறக்கத்தில் இருந்தால் அது மீண்டெலும்.

தற்போதய நிப்டி 50 பங்குகள்,
BAJFINANCE
TATAMOTORS
GRASIM
ZEEL
BAJAJFINSV
HINDUNILVR
UPL
WIPRO
SUNPHARMA
BHARTIARTL
M&M
YESBANK
INFY
ITC
ASIANPAINT
HEROMOTOCO
CIPLA
GAIL
HDFC
ONGC
TECHM
INFRATEL
KOTAKBANK
BPCL
RELIANCE
MARUTI
POWERGRID
VEDL
ICICIBANK
ADANIPORTS
TITAN
IOC
HCLTECH
EICHERMOT
HINDALCO
HINDPETRO
DRREDDY
HDFCBANK
IBULHSGFIN
BAJAJ-AUTO
AXISBANK
LT
LUPIN
NTPC
TATASTEEL
TCS
ULTRACEMCO
INDUSINDBK
COALINDIA



SBIN



[22-JUL-2018] கம்பெனி அலசல்: அசோக் லைலண்ட்

காலாண்டு முடிவிற்குபின் இப்பங்கு 10% முதல் 15% வரை குறைந்து வர்த்தகமாகின்றது. மேலும் இப்பங்கின் விலை ரூ.80/90 முதல் ரூ.100 வரை இறங்கும் வாய்ப்பும் உள்ளது. இது லார்ஜ் கேப் பண்டாகும். விலை குறையும் போது நல்ல பங்குகளை வாங்குவதில் தவறில்லை. நீண்டகால முதலீட்டுக்கு உகந்தது.

தற்போதய விலை: ரூ.107.35. 

Friday, July 13, 2018

[ JULY-13-2018 ] இன்ஃபோசிஸ் போனஸ் அறிவிப்பு

இன்ஃபோசிஸ் போர்டு உறுப்பினர்கள் போனஸ் வழங்கலை உறுதி செய்துள்ளனர்(Bonus 1:1 ). இது இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பங்குதாரர்களின் 25 வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் அதன் பங்குகளின் பணப்புழக்கத்தை மேலும் அதிகரிப்பதற்காகவும் ஆகும்.
தற்போதய விலை: ரூ.1317.40.

Monday, July 9, 2018

[July-09-2018]கம்பெனி அலசல்: பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC)

பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC)
Bombay Dyeing, 'Britannia Ltd' பங்குகளை வைத்திருக்கும் கம்பெனி. 
மற்றும் வாடியா குருப்பின்( WADIA GROUP மற்ற பங்குகளையும் வைத்துக் கொண்டுள்ளது. காபி, தேயிலை தயாரிப்பு நிறுவனங்களில்  மிகப் பழமையான மதிப்புமிகு நிறுவனமாகும்.



தற்போதய விலை: 1510.4

Thursday, July 5, 2018

[ July 05 2018 ] செய்திகள் இன்று


  • பரஸ்பர நிதி வர்த்தகத்தை(mutual fund) அறிமுகப்படுத்த  Yes Bank அனுமதி பெற்றுள்ளது.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 41வது வருடாந்திர பொதுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. ரிலையன்ஸ் வைபை மூலம் போன் அழைப்புக்கள் செய்யும் வசதியும் துவங்க உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஜிகா( JioGigaTV) டிவி விரைவில் - இதை ரிலையன்ஸ் செட் டாப் பாக்ஸ் மூலம் அறிமுகப்படுத்துகிறது. இது 4K HD வீடியோக்களை காட்ட திறனை கொண்டுள்ளது. JioGigaFiber ( ஜியோ ஜிகாஃபைபர் ) எனப்படும் ஃபைபர் அடிப்படையிலான பிராட்பேண்ட் கான்டெக்டிவிட்டி(  Connectivity ) சேவையை விரைவில் Reliance துவக்குகிறது.
  • வரவு செலவுத் திட்டத்தில்( Budget ) கர்நாடக அரசாங்கம் மதுபான வரியை 400 bps அதிகரித்தது.

Monday, July 2, 2018

ரூ.500 மியூட்சுவல் பண்ட் ஆரம்ப முதலீடு

ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஃபிரண்ட் லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் ஆரம்ப முதலீட்டை ரூ.5,000-லிருந்து ரூ.500 ஆகக் குறைத்துள்ளார்கள்.

[ JUL 2, 2018 ] BSE, NSE பற்றி

ஆசியா கண்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்தது நமது பங்குச் சந்தைதான். 1850-களில் மும்பையில் தற்போதைய ஹார்னிமன் சர்க்கிள் (Horniman Circle)இருக்கும் இடத்தில் இருந்த டவுன் ஹால் முன்பு இயற்கையின் வடிவாகிய ஆல மரத்தின் அடியில் ஆரம்பமானதுதான் நமது பங்குச் சந்தை. அந்த மர நிழலில் கூடி தங்களது டிரேடிங்கை தொடங்கினார்கள் நமது புரோக்கர்கள். சில ஆண்டுகள் கழித்து இன்றைய மும்பை மகாத்மா காந்தி ரோட்டில் இருந்த ஆல மரத்தின் அடியில் தங்களது டிரேடிங் தளத்தை மாற்றினர். புரோக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஒவ்வோர் இடமாக மாற்றிக் கொண்டிருந்தனர்.

1874-ம் ஆண்டில் நிரந்தரமான ஓர் இடத்தை அடைந்தனர். அதுதான் இன்றைய 'தலால் ஸ்ட்ரீட்' (புரோக்கர் வீதி). 'தி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், பாம்பே' என்று அழைக்கப்பட்டு வந்த இந்த சந்தை, 2002-ல் 'பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' ( BSE பி.எஸ்.இ.) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2005-ல் கம்பெனியாக மாற்றப்பட்டது. 1994-ல் தேசிய பங்குச் சந்தை ( NSE என்.எஸ்.இ.) வந்தது. இதையடுத்து இன்று இரு பெரும் பங்குச் சந்தைகள் இருக்கின்றன.

பெரிய நிறுவனங்களின் பங்குகள் இந்த இரண்டு பெரிய சந்தைகளிலும் வர்த்தகமாகின்றன. சில நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் பி.எஸ்.இ-யில் மட்டுமே லிஸ்ட் செய்யப்படுகிறது. அதிக நிறுவனங்கள் லிஸ்ட் ஆன எக்ஸ்சேஞ்ச் என்கிற பெருமை பி.எஸ்.இ-க்கும், தினசரி வர்த்தகம் அதிகமாக நடக்கும் எக்ஸ்சேஞ்ச் என்கிற பெருமை என்.எஸ்.இ-க்கும் உண்டு.

பங்குச் சந்தையில், நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகின்றன. அதுதவிர, வேறு சிலவும் வர்த்தகமாகின்றன. அவை:

  • கடன் பத்திரங்கள் (அரசாங்கம் மற்றும் தனியார்)

  • மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்

  • இ.டி.எஃப்-கள் (தங்கம் உட்பட)

  • எஃப் அண்ட் ஓ

  • கரன்ஸி