Tuesday, May 31, 2016

எஸ்.ஐ.பி

மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம்தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ச்சியாக செய்யும் முதலீட்டைத்தான் எஸ்.ஐ.பி (SIP – Systematic Investment Plan) என்கிறோம்.

Tuesday, May 24, 2016

விலை சரிந்த Jubilant Foodworks, Britannia

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் விரும்பி சாப்பிடும்  உணவுப்பொருளில் பிரட், பீட்சா, பர்கரும் அடங்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இத்தகையை உணவுப்பொருட்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சு ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உணவுப்பொருட்களில் எடுக்கப்பட்ட அடுத்தடுத்த பரிசோதனைகளில் நச்சு ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது எனவும், இந்த நச்சு ரசாயனத்தை உட்கொள்வதால், தைராய்டு, புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக நேற்று அறிவியல் சுற்றுச்சூழல் மைய ஆய்வு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து Jubilant Foodworks Ltd, Britannia Industries Ltd பங்குகள் விலை சரிய தொடங்கின.

Monday, May 9, 2016

தைரோகேர் ஐபிஓ வெளியீடு

டயக்னாஸ்டிக் நிறுவனமான தைரோகேர் ரூ. 446க்கு சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டது. 73 சதவிகிதம் கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டு முதலீட்டாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இன்று (09.05.16) தொடங்கிய அதன் முதல் நாள் வர்த்தகத்திலேயே அதன் ஐபிஓ விலையைக் காட்டிலும் 49% உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை முதலே சந்தை ஏற்றத்தில் இருப்பது தைரோகேர் வர்த்தகத்திற்கும் சாதகமாக உள்ளது. 

Sunday, May 8, 2016

ரிலையன்ஸ் ஜூயோ

ரிலையன்ஸ் ஜூயோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மட்டும் இந்த சேவையை முதலில் அறிமுகப்படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த சேவைக்கான சிம் வழங்கப்பட்டது.

தற்போது பொதுமக்களுக்காக ரிலையன்ஸ் ஜூயோ நிறுவனம் 4G இன்டர்நெட் சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.