2015 ஆம் ஆண்டுக்கான ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஏலத்தில் கலந்து கொள்ள ஆறு நிறுவனங்களைத் தகுதி படைத்ததாக, தகவல் தொழில் நுட்பத் துறை அறிவித்துள்ளது. அவை, வோடபோன், ஏர்டெல், ஐடியா செல்லுலர், யூனிநார், ரிலையன்ஸ் ஜியோ இன்போ காம் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகும். இந்நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு பின்வருமாறு: வோடபோன் இந்தியா ரூ. 8,258 கோடி, பார்தி ஏர்டெல் ரூ.73,069 கோடி, ஐடியா செல்லுலார் ரூ.19,185 கோடி, யூனிநார் ரூ.1,052 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ. 17,022 கோடி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்போ காம் ரூ.23,029 கோடி என தகவல் தொலை தொடர்பு அலுவலகம் அறிவித்துள்ளது. ஏர்செல் மற்றும் டாட்டா டொகோமோ நிறுவனங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இவை ஏற்கனவே அனுமதி பெற்ற இடங்களில் விரிவாக்கப் பணிக்கு மட்டும் போட்டியிடலாம்.
2100 மெகா ஹெர்ட்ஸ், 1800, 900 மற்றும் 800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளை ஏலம் இட அரசு முடிவு செய்துள்ளது.