Wednesday, September 19, 2018

[20-Sep-2018] ஆர்-காம்ன் புதிய முடிவு

அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் (ஆர்-காம்) தற்போது கடும் நிதி நெருக்கடியி்ல் உள்ளது. இதன் காரணமாக நிறுவனத்துக்கு ரூ.40,000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. எனவே, தொலை தொடர்பு துறையிலிருந்து முற்றிலும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
தற்போது ரியல் எஸ்டேட் துறையில் முழு கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் 14-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்-காம் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி இதை தெரிவித்தார்.