‘யு.டி.ஐ., அசெட் மானேஜ்மென்ட்’ நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, தடையில்லா சான்று வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், இந்நிறுவனத்தில் உள்ள, 74 சதவீத பங்கு மூலதனத்தை, 40 சதவீதமாக குறைக்குமாறும், நான்கு பொதுத் துறை நிறுவனங்களை, மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, ‘எல்.ஐ.சி., பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ ஆகியவை, தலா, 8.5 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், யு.டி.ஐ.ஏ.எம்.சி., புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 40 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 5,000 கோடி ரூபாய் திரட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.