Wednesday, February 14, 2018

[ 14Feb2018 ] பஞ்சாப் வங்கி 11,360 கோடி ??!!

பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 11,360 கோடி ரூபாய் அளவுக்கு சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்தது, கண்டுபிடிக்கப்பட்டதாக பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியுள்ளது.
இந்த தகவல் செபி அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதும், பங்கு சந்தையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் சரிவை சந்தித்தன.
PNB 144.95 INR

Monday, February 12, 2018

வருகிறது ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் ஐபிஓ

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் துணை நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ்( ICICI Securities Limited ), புதிய பங்கு வெளியிடுவதற்கான (IPO) அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது.செபி, அதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறது. இந்த ஐபிஓ வின் மதிப்பு ரூ.3,000 கோடி முதல் ரூ.4,000 கோடி வரையில் இருக்கலாம்.