Saturday, November 18, 2017

நாணய தரம்

18-Nov-2017
சர்வதேச ரேட்டிங் ஏஜென்சியான மூடிஸ்( moody's ) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணய தரத்தை Baa3யில் இருந்து Baa2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பொருள் சர்வதேச சந்தையில் இந்திய நாணயத்தின் ஏற்ற இறக்கம் தற்போது பாசிடிவ் நிலையில் இருந்து ஸ்டேபிள் என்ற நிலைக்குச் சென்றுள்ளது, அதாவது நிலையான அளவிற்குச் சென்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணய தரத்தை 14 வருடங்களுக்குப் பின் உயர்த்திச் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இந்திய சந்தையின் மீது புதிய நம்பிக்கையை வளர்த்துள்ளது.

Friday, November 17, 2017

பங்கு சந்தையை பாதிக்கும் காரணிகள்

17-Nov-2017
பங்கு சந்தை சரிய காரணமாக என்ன என்ன இருக்கலாம்? இதோ சில

  • புரளி செய்திகள்
  • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கை அதிக அளவில் விற்பது
  • நிறுவன அறிவிப்புகள், காலாண்டு,  வருவாய் முடிவுகள் எதிர்பார்ப்புக்கு கீழ் குறைந்தால்
  • உள்நாட்டு வெளிநாட்டு தொடர்பான போர், ஆக்கிரமிப்பு செய்திகள்.
  • தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்வு
  • மழை பொய்த்தல்
  • இயற்க்கை பேரிடர்
  • பண்ட் நிறுவனங்கள் பங்கை பெருமளவில் விற்றல்
  • ரிசர்வ் பேங்க் ரெப்போ சதவீத மாற்ற அறிவிப்பு
  • பங்கு சந்தை திருத்தம்( Market Correction )