Friday, September 16, 2016

ஐபிஓ - எச்.பி.எல்., எலக்ட்ரிக்

எச்.பி.எல்., எலக்ட்ரிக் நிறு­வனம், பங்கு வெளி­யீட்டின் மூலம், 361 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது. எச்.பி.எல்., எலக்ட்ரிக், மீட்டர், சுவிட்ச்­கியர்ஸ் உள்­ளிட்ட மின் சாத­னங்கள் வணி­கத்தில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், பங்கு வெளி­யீட்டின் மூலம், 361 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது. இதன் பங்கு வெளி­யீடு, வரும், 22ம் தேதி துவங்கி, 26ல் முடி­வ­டை­கி­றது. ஒரு பங்கின் விலை, 175 ரூபாய் – 202 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. எஸ்.பி.ஐ., கேபிடல் மார்கெட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்டிஸ் ஆகி­யவை, எச்.பி.எல்., எலக்ட்ரிக் பங்கு வெளி­யீட்டு பணி­களை மேற்­கொள்ள உள்­ளன.

ஐபிஓ, - ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ்

இந்தியாவில் முதல்முறையாக பங்குச் சந்தையில் களமிறங்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் என்கிற பெருமையுடனும் பெரிய எதிர்பார்ப்புடனும் ஐபிஓ வந்திருக்கிறது ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி. கடந்த ஜூலை 18-ம் தேதி செபியிடம் புதிய பங்குகளை வெளியிட (ஐபிஓ) முறையில் விற்க அனுமதி கேட்டிருந்தது இந்த நிறுவனம். அதற்கு செபி இந்த மாதம் அனுமதி அளிக்க, சுறுசுறுப்பாகக் களமிறங்கி இருக்கிறது இந்த நிறுவனம். 
இந்த மாதம் செப்டம்பர் 19-ம் தேதி, திங்கள்கிழமை தொடங்கி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் பங்குகள் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கின் விலைப் பட்டை ரூ.300 முதல் ரூ.334-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் புதிய பங்கு வெளியீட்டில் 12.63 சதவிகித பங்குகள் (சுமார் 18.13 கோடி) விற்பனை செய்யப்படுகிறது. இதில் 19 சதவிகித பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் பொது மக்களுக்கு 25 சதவிகித பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

Saturday, September 10, 2016

ஐபிஓ - L&T Technology Services Ltd



L&T Technology Services Ltd
விலை மதிப்பீடு :
Rs.850 to Rs.860


தேதி
பங்குகள்
Sep 12, 2016 - Sep 15, 2016
16 மற்றும் அதன் மடங்குகளாக