Friday, January 9, 2015

இன்ஃபோஸிஸ் மூன்றாவது காலாண்டு முடிவு

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோஸிஸ்( INFOSYS ) நிறுவனம் வெளியிட்டிருக்கும் மூன்றாவது காலாண்டு முடிவின்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 5% அதிகரித்திருக்கிறது. அனலிட்கள் இதன் நிகரலாபம் 1.9 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று கணித்திருந்தார்கள். இரண்டாவது காலாண்டில் இதன் லாபம் 3,096 கோடி ரூபாயாக இருந்தது. இது டிசம்பர் காலாண்டு முடிவில் 3,250 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே போல அக்டோபர்-டிசம்பர் காலாண்டின் நிறுவனத்தின் வருவாய் 3.4% அதிகரித்து 13,769 கோடியாக உள்ளது. இது இதற்கு முந்தைய காலாண்டில் 13,342 கோடியாக இருந்தது.